ஹைபோ தைராய்டு

ஹைபோ தைராய்டு பற்றி யாருக்காவது தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் என்ன உணவு எடுக்கனும் என்ன மாதிரி உணவு எடுக்கக்கூடாது என்ன மாதிரி உடற்பயிற்சி செய்யனும் எனக்கு 15.68 ரேஞ்சுல இருக்கு ஹைபோ தைராய்டு. தோழிகளே உதவுங்க ப்ளீஸ்

எனக்கு தெரிஞ்சு என்ன தான் ட்ரீட்மென்ட் எடுத்தாலும் உடல் அசதி இருக்கும்...கண்டிப்பா நல்ல பலன் கிடைக்கும் யோகா பயிற்சி செய்வதால்

கண்டிப்பா நீங்க சொல்றது உண்மைதான் தோழி எப்போதும் உடல் அசதி இருந்துகொண்டே இருக்கு யோகா நல்லா யோசனைதான் ஆனா அதற்க்கான வாய்ப்பு எனக்கு கிடக்கவில்லை தோழி நான் வெளிநாட்டுல இருக்கேன் இணைய தளத்தின் மூலமாக பார்த்து செய்தால் அதற்க்கான பலன் கிடைக்குமா தோழி முறைப்படி யோகா கற்றுக் கொண்டுதான் செய்யவேண்டும் என்கிறார்கள் இது உண்மையா தோழி

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

உங்களுக்கு தைரோய்ட் அளவு இருக்கவேண்டிய அளவைவிட கொஞ்சம் அதிகளவிலுள்ளது.நீங்கள் இன்னும் டாக்டரைப் பார்த்து மாத்திரைகள் எடுக்கவில்லையா?மாத்திரைகள் எடுத்தால் அசதி பெரிதளவில் இருக்காது.யோகாவெல்லாம் சாத்தியமாகுமாவென்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது.இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.முள்ளங்கி,கோஸ்,கோலிப்ளவர்,போன்ற சுன்னாம்புச் சத்துள்ள காய்வகைகளை உணவில் குறைத்துக்கொள்லுங்கள்.மற்றபடி டாக்டர் ஆலோசனைப்படி தினமும் மாத்திரை எடுத்துக்கொண்டால் எந்ததொரு உண்வுக்க்ட்டுப்பாடும் தேவையில்லை.இதைப் பற்றி மன்றத்தில் நிறையவே பேசப்பட்டும் இருக்கிறது.அவைகளையும் சென்று பாருங்கள் இன்னும் தெளிவு கிடைக்கும்.பயப்படத்தேவையில்லை.

நான் மாத்திரை எடுத்துக்கிட்டு தான் இருக்கேன் பா நீங்க சொன்ன மாதிரி டாக்டரு இந்த வெச் எடுக்கவேண்டாமுனு சொல்லிருக்காரு என்னுடைய சந்தேகத்திற்கு பதில் அளித்தமைக்கு ரொம்ப நன்றி கிபா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

யோகா பற்றி எனக்கு அனுபவம் இல்லை.

//டாக்டர் ஆலோசனைப்படி தினமும் மாத்திரை எடுத்துக்கொண்டால் எந்ததொரு உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை.// என் அனுபவமும் அதுவேதான். அவர்கள் இரத்தம் பரிசோதித்து சரியான அளவுக்கு மாத்திரை கொடுத்தார்கள். ஆயுள் முழுவதும் எடுக்கவேண்டும் என்பதாகச் சொன்னார்கள்.

இது அயடீன் குறைபாடு இல்லை என்றார்கள். (ஹெரிடிடரி ஆக இருக்கலாம் என்றார்கள். அதற்கு முன்பு எங்கள் குடும்பத்தில் யாரும் இதுபற்றிக் குறிப்பிட்டு இருக்கவில்லை. சமீபத்தில் நெருங்கிய உறவுகள் சிலருக்கும் இருப்பது தெரியவந்தது.) உணவு... சாதாரணமாகச் சாப்பிடுவது போல்தான் சாப்பிடுகிறேன். களைப்பு என்பதே இல்லை. மாத்திரை எடுக்க ஆரம்பித்து 9 வருடங்கள். சொல்லப் போனால்... சில விஷயங்களில் பிற்பாடு நன்மையான மாற்றங்களை அவதானித்தேன். மாத்திரை எடுக்க ஆரம்பித்த சில மாதங்களில் முடி உதிர்வது, நின்றுவிட்டது. எடை குறைந்தது, உள்ளங்கையில் முன்பெல்லாம் கூச்சமாக இருக்கும். அது மறைந்தது. படபடப்பு காணாமல் போயிற்று. சருமம் முன்பு உலர்வாக இருக்கும். அது சரியாகிற்று. இப்படி நிறையச் சொல்லலாம். ஆனால் ஒழுங்காக மாத்திரை எடுக்க வேண்டும். பின்பு அவர்கள் சொல்வதுபோல் சொல்கிற இடைவெளியில் மீண்டும் செக் செய்துகொள்ள வேண்டும். மாத்திரை எடுத்தும் சிரமம் தெரிந்தால் மாத்திரை அளவு மாற்றிக் கொடுக்கக் கூடும். எனக்கு இத்தனை வருடத்தில் ஒரே ஒரு முறை சிறிது குறைந்திருந்தது. ஹோர்மோன் மாற்றத்தினால் இருக்கலாம் என்றார்கள். மூன்று மாதங்கள் கழித்துச் சோதித்து தேவையானால் மாத்திரை அளவை மாற்றுவோம் என்றார்கள். அதற்குள் எல்லாம் தானாகவே பழையபடி சரியாகிவிட்டது.

‍- இமா க்றிஸ்

தொடர்ந்து treatment எடுங்கள். முட்டைகோஸ் , காலிபிளவர் , soy food , gluten food , இதெல்லாம் உணவில் குறைசிகோங்க
டெய்லி வாக்கிங் போங்க. டெய்லி வீட்லேயே 30 மின்ஸ் exercise பண்ணுங்க

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நன்றி இமா, நன்றி கார்த்திகா ஜெகன் என்னுடைய சந்தேகத்தை போக்கியதற்க்கு மிக்க நன்றி

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

எனக்கும் ஹைபோ தைராய்டு இருப்பது இப்போது தான் தெரிய வந்தது. நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்தேன் (1st baby). Blood test பன்னின போது தைராய்டு 6.46 இருந்தது (normal 5.0) தெரிய வந்தது. நேற்று அபார்ட் ஆகிடுச்சு. குழந்தை வளர்ச்சி இல்ல அதனால partial அபார்ட்னு சொல்லி dnc பன்னிடாங்க. டாக்டர் கிட்ட தைராய்டு பத்தி நேற்று கேட்ட போது 20 நாள் கழித்து திரும்பவும் Blood test பன்னி பார்போம், அப்ப்வும் இருந்தா treatment எடுக்கலாம்னு சொல்லிருக்கங்க. என்னோட தைராய்டு level நார்மலாக எவ்வளவு நாள் treatment எடுக்கனும்? ஏதாவது டயட்லே சரி செய்யலாமா? இதனால நான் கருத்தரிக்க ஏதாவது பாதிப்பு உண்டா? மிகுந்த மணக்குழப்பத்தில் உள்ளேன் உதவுங்கள் தோழிகளே.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

Takehomeopathy medicine.you will have a child

Thank u so much Sulaimankhan for ur reply. Definitely i'll try to do so.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

மேலும் சில பதிவுகள்