கம்பியூட்டரில் மெயில்

ஹலோ தோழிகளே,எனக்கு உங்களிடம் ஒரு உதவி வேண்டும்.ஹெல்ப் பன்னுங்கப்பா.நான் மெயில் செக் பன்னி கொண்டு இருந்தேன்.அப்போ எனக்கு வேண்டாத மெயில்களை டெலிட் பன்னிட்டு இருந்தேன்.அப்போ முக்கியமான ஒரு மெயிலை (ஏதோ யோசனையில் வேண்டாமுன்னு டெலிட் பன்னிட்டேன்) டெலிட் பன்னிட்டேன்.இப்போ அது வேனுன்னு தோனுது.எப்படி தேடி எடுப்பது?என் தோழி ஒருவரிடம் கேட்டேன் .அவர்Trash ல் போய் பார்க்க சொன்னார்.Trash செக்பன்னிட்டேன்.இல்லை.வேறு ஏதாவது வழி இருக்கா?டெலிட்ட் பன்னின மெயிலை திரும்ப பெற வழி இருக்காஅ? உதவுங்கள் தோழிகளே

டெலிட் செய்த இமெயில் கண்டிப்பாக ட்ராஷ் ஃபோல்டரில்(Trash Folder) தான் இருக்கணும். அங்கே இல்லை என்றால் இன்பாக்ஸை(Inbox) மறுபடியும் செக் பண்ணுங்க. நீங்க பர்மனன்ட் டெலிட் (permanent delete from ur inbox) செய்து இருந்தால் அது trash-ல கூட இருக்காது.... அதை ஒன்னும் பண்ண முடியாது. பார்க்க வேற வழியில்லை.

உமா,உங்களுக்கு ரொம்ப நன்றின்க.எனக்காக சிரமம் பாக்காம பதில் சொன்னதுக்கு.ஒரு வேளை கம்பியூட்டரில்recycling pin என்று ஒன்றை பார்த்தேன்.அதில் இருக்குமா?எனக்கு கம்பியூட்டர் கொண்டு ஒன்றுமே தெரியாது.எதில் கிடைக்குமென்று தேடிட்டு இருந்தேன்.Recycling pin ஐ பார்த்தேன்.அதில் தேடிப்பார்த்தால் அதில் கிடைக்குமா? தேடிப்பார்க்க வேண்டியது தானே,இதுக்கு எதுக்கு தனியே இழை ஓப்பன் பன்னி வேற கேக்கனுமான்னு நீங்க கேக்கறது என் காதுல கேக்குதுங்க.என்ன பன்றது?இன்னைக்கு மட்டும் நான் 500 மெயில் வரைக்கும் டெலிட் பன்னிருக்கேன்.இதுல எப்படி நான் திருப்பி போய் தேடறது?ஒருவேளை Recycling pinல் கிடைக்குமானால் தேடுவதில் பிரச்சனை இல்லை.அதான் கேட்டேன்.சாயங்காலத்திலிருந்து கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து தேடறேன்.கிடைக்க மாட்டேங்குது.ஒன்னு ஒன்னா ஓப்பன் பன்னிட்டு இருக்கேன்.டெலிட் பன்னின மெயில் மட்டும் கானும்.அது தவிர மற்றதெல்லாம் இருக்குதுஅப்போ டெலிட் பன்னின மெயில்கள் அனைத்த்ம்Trash ல் இல்லாவிட்டால் வேறு எங்கு இருக்கும்.permanentஆ டெலிட் ஆயிருமா?தோழிகளே எனக்கு உதவுங்கப்பா .

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

நீங்கள் டெலீட் பண்ணிய மெயில் ட்ராஷில் இல்லையென்றால் நீங்க நிரந்தரமாக அதை டெலீட் பண்ணியிருக்கீங்க என்று தான் ஆர்த்தம். ரீசைக்கிள் பின்னில் நீங்கள் டெலீட் பண்ணிய பைல்ஸ் போன்றவைகள் தான் இருக்கும். மெயிலுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை. இருந்தாலும் நீங்கள் டெலீட் பண்ணிய மற்ற மெயில்கள் இருக்கும் போது இது மட்டும் காணவில்லை என்றால் ஒன்று நீங்கள் ட்ராஷில் சரியாக தேடவில்லை இல்லையென்றால் இன்பாக்ஸ் அல்லது வேறு எதாவது போல்டரில் இருக்கும் தேடி பாருங்கள். பொறுமையாக தேடிப் பாருங்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மனோரஞ்சிதா....நீங்கள் கம்ப்யூட்டருக்கு புதிது என்பதால் உங்களுக்கு தெரியவில்லை......நீங்கள் மெயிலிலிருந்து டெலிட் பண்ணினால் கண்டிப்பாக அது ட்ரேஷ், ரீசைக்கிள் பின் எதிலும் இருக்காது. நீங்கள் இனி தேவையில்லாத மெயில்களை டெலிட் செய்யும்போது ஒருமுறைக்கு இருமுறை கவனமாகச் செய்யவும். நீங்கள் ஏதாவது ஃபோல்டரில் அதை முன்னமே ஸேவ் செய்திருந்தால் கிடைக்க வழியுண்டு.

உடனடியாக பதில் சொன்ன லாவண்யாமேடம்,ராதாபாலுமேடம் இருவருக்கும் என் நன்றி.நேற்றய மாலை பொழுது மெயில் தேடிதேடி டென்சன் ஆகிவிட்டேன்.காலையில் பார்த்துகொள்ளலான்னு இருந்திட்டேன்.முதல்ல அறுசுவையில் செக் பன்னினேன்.உங்க பதிலை பார்த்தவுடன் தேடுவதை விட்டுவிட்டேன்.இனிமே ரொம்ப கவனமாக இருப்பேன்.
மீண்டும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

உங்களுக்கு ஒன்றை இங்கே தெளிவு படுத்த விழைகிறேன்......மெயிலிருந்து நீங்கள் டெலீட் (delete) செய்தால் அது உங்களின் மெயிலில் உள்ள Trash folder இல் இருக்க கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது. நீங்கள் Empty trash now செய்திருந்தால் மட்டுமே அங்கிருந்து டெலீட் ஆகியிருக்கும்.

நாங்க மேடம் எல்லாம் இல்லீங்கோ உங்களை போல் நாங்களும் இந்த அறுசுவையின் உறுப்பினர் மட்டுமே!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க மெயில் Read பண்ணாமல் Delete செய்திறுந்தால் அல்லது வேரு Folder move செய்திருந்தால் Unread மெயில்னு ஒரு லின்க் இறுக்கும். அதை கிளிக் செய்தால் மெயில் பார்களாம். அல்லது உங்களைஅறியாமல் வேறு Folder Move செய்ததை தேடுவதற்கு Search Mail பாக்ஸ் ல் யார் அனுப்பினாங்களோ அவர்களின் பெயர்ரை type செய்து search பண்னவும்.அப்படியும் Mail இல்லை என்றால் நீங்க Premanent Delete செய்து இருப்பீர்கள்.

இன்னைக்கு தான் என்னால் அறுசுவைக்கு வரமுடிந்தது.லாவண்யா,நித்தி ரொம்ப நன்றிங்க.மெயிலை கொண்டு தெளிவாக விளக்கியதற்கு.நீண்ட நாட்களுக்கப்புறம் மெயில் பார்த்து கொண்டுருந்தேன்.என்ன ஞாபகத்தில் டெலிட் பன்னினேன்னே தெரியல.Trash folderல் செக் பன்னிட்டேன்.கிடைக்கவில்லை.permanent delete பன்னிவிட்டேன் போல இருக்குங்க.Recycling பின்னில் டெலிட் பன்னின மெயிலை திருப்பி எடுக்க முடியுமாங்க?

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மேலும் சில பதிவுகள்