தேதி: January 27, 2012
துணி - விரும்பிய நிறங்கள் 2 + பச்சை
தையல் ஊசி
நூல்
க்ளூ கன்
கத்தரிக்கோல்
ஸ்டோன் அல்லது பட்டன்
ப்ரோச் ஊசி
மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஒரு நிற துணியில் 5 பெரிய வட்டங்களும், 3 சிறிய வட்டங்களும் வெட்டவும். மறு நிற துணியில் நடுத்தர அளவிலான 5 வட்டங்களும் (பெரிய வட்டத்தைவிட சின்னதாக) வெட்டவும்.

பெரிய வட்ட துண்டில் ஊசியால் 2 நூலோடித்தையல் போடவும்.

இவ்வாறு 5 வட்டங்களிலும் நூலோடி ஒன்றாக இறுக்கி கட்டவும். (நூலை அப்படியே அறுக்காது அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்லவும்)

பின்னர் நடுத்தர வட்டங்களையும் இதேபோல் தைத்து இறுக்கி ஒவ்வொரு இதழும் பெரிய இதழின் உள்ளே இருக்குமாறு வைத்து கட்டவும்.

3 சிறிய வட்டங்களையும் இதே போல தைத்து இறுக்கி கட்டி நூலை கத்தரிக்கவும்.

பச்சை நிற துணியில் சிறிய வட்டம் வெட்டி அதில் ப்ரோச் ஊசியின் நீளத்திற்கு ஏற்ப 2 சிறு துளையிட்டு அதனூடாக ஊசியை கோர்க்கவும்.

அதனை பூவின் பின்புறம் நடுவே வைத்து க்ளூ கன்னால் ஒட்டவும்.

பூவின் நடுவே ஸ்டோன் அல்லது பட்டன் வைத்து ஒட்டவும்.

இலகுவாக செய்யக்கூடிய பூ ப்ரோச் தயார். விரும்பினால் பச்சை துணியில் இலை போல வெட்டி பின்பக்கம் வைத்து ஒட்டலாம்.

Comments
நர்மதா
நர்மதா வழக்கம் போல நீங்கல்லாம் ஜெம்..ஆனால் எனக்கு இந்த ஃப்லீஸ் துணி எங்கு கிடைக்கும்னே கண்டுபிடிக்க முடியலை
பூ ப்ரோச்
அழகோ அழகு. பாராட்டுக்கள் நர்மதா.
- இமா க்றிஸ்
Introducing myself
Dear madam,
I am very much interested to see and learn craft work from your website.
Thank you
Pushpavalli
HAI
THAKING U SUPER
simly superb
simly superb
Hi Nila! Indha item romba
Hi Nila! Indha item romba nalla iruku! Neenga mention panna ப்ரோச் ஊசி
na enna? Enga kadaikum? Please sollunga..