ஆலோசனை வேண்டும்

என் வயது 30.எனக்கு 6 வயதில் மகன் இருக்கான்(special child). எனக்கு அடுத்த குழந்தை normal ஆக பிறக்க உங்கள் ஆலோசனை வேண்டும் please help me.

அப்படி எதுவும் இருப்பதா தோனலைங்க..இதெல்லாம் மேல இருக்கவர் விளையாட்டு நம்பிக்கை இருந்தா வேண்டிக்குங்க..ப்ரீனாட்டல் டெஸ்ட் மூலம் சிலது கண்டுபிடிக்கலாம்னு சொல்வாங்க அப்பவும் கூட பாசிடிவ் நா டெர்மினேட் பண்ண தான் செய்றாங்க...அப்படி பாத்தாலும் என்னவோ நமக்குன்னு அமைஞ்ச குழந்தை தானேன்னு இருக்கும்.முதல் குழந்தை அப்படிங்கறதால இதுவும் அப்படி ஆக வேண்டிய அவசியம் இல்லை..நீங்க கடவுள் மேல் பாரத்தை போட்டு நல்லபடியா கர்ப்பமாகி ஆரோகியமான குழந்தையை பெற்றெடுங்க

அன்பு தோழி... உங்கள் மகன் பிறக்கும் முன்பே பாதிப்பு இருப்பது தெரிந்ததா? எதனால் இப்படி ஆனதுன்னு எதாவது சொன்னாங்களா டாக்டர்? அதை முதல்ல தெரிஞ்சுக்கங்க. ஒரு குழந்தை இப்படி இருந்தா அடுத்த குழந்தையும் இப்படியே பிறக்கும்னு நிச்சயமா இல்லை. ஆனா பாதிப்பு குழந்தைக்கு எதனால் ஏற்பட்டதுன்னு தெரிஞ்சா அது மீண்டும் வராம தடுக்க உதவும். பயப்படாதீங்க... அடுத்த குழந்தை ஆரோக்கியமா பிறக்கும். அதுக்காக எங்க பிராத்தனைகள். டாகடர் ஆலோசனைபடி நடந்துக்கங்க. அவங்க தரும் ஃபோலிக் ஆசிட் போன்ற மருந்துகளை தவறாம எடுங்க. இதுலாம் குழந்தை ப்ரெயின் வளர்ச்சிக்கு முக்கியம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சொன்னபிறகு தான் இப்படி ஒன்னு நியாபகம் வருது.சிலர் ஃபாலிக் ஆசிட் சில வாரம் எடுத்த பிறகு தான் குழந்தைக்கு முயற்சிப்பாங்க அந்த மாதிரி செய்யலாமான்னு டாக்டர்கிட்ட கேட்டு பாருங்க

கண்டிப்பா குழந்தைக்கு முயற்சி பன்ரவங்க குறைந்தது இரண்டு மாதமாவது folic acid tablet எடுத்துக்கனும்னு நான் பார்க்கும் டாக்டர் சொல்லி இருக்காங்க அடுத்த குழந்தை நல்லபடியாக பிறக்க கடவுளை வேண்டுகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

Nega oru naala doctor consalaunt pannitu ,mothala unga mansa naala thalivagitu nega santhosama 2nd babyku thayaruga.oru naal babyku naal amma kidipaga.god bls u.and take care.

Be simple be sample

என் தோழிக்கு சரியான care எடுக்காததால் இரண்டாவதும் special child ஆகப்பிறந்தது.எட்டு வருடம் கழித்து மூன்றாவது ஆகும் முன் நெல்லையில் உள்ள ஒரு டாக்டரிடம் 3 மாதங்கள் treatment எடுத்தாள்.பிறகு ஆகி ஆரோக்கியமான குழந்தையை பெற்றாள்.

மேலும் சில பதிவுகள்