தமிழ் மேடை நாடகம்

எனக்கு தமிழ் மேடை நாடங்கள் பற்றி கொஞ்சம் தெரியணும்/வேணும். பழைய காலத்து நகைச்சுவை நாடகங்கள் கிடைத்தால் மிகவும் நல்லது. வீடியோ சில தளங்களில் பார்க்க முடியுது. ஆனால் எனக்கு ஸ்கிரிப்ட் எழுதிய மேடை நாடகமாகவோ இல்லை சின்ன ஸ்கிட் மாதிரி இருந்தாலோ பராவாயில்லை. நல்ல கலை நயம், நேர்த்தி, பண்பாடு, ஒழுங்கு, நகைச்சுவை அனைத்தும் கலந்து இருத்தல் வேண்டும்.

யாராவது உங்களிடம் இது போல இருந்தாலோ தெரிந்தவர்களிடம் இருந்தாலோ அதை இங்கே எனக்காக தெரியபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அப்புறம் ... நம் கதாசிரியர்கள் யாராவது முடிந்தால் எனக்காக இங்கே எழுதியும் கொடுங்களேன். இந்த முயற்சி அனைவரிடமும் வரவேற்கத்தக்கது.

கொஞ்சம் நேரம், நாள் எடுத்தாலும் சரி நான் முயற்சி பண்றேன்னு வந்து சொல்லிட்டாவது போங்க... அதோட இல்லாமல் அனைவரிடமும் உங்களின் கற்பனையை எதிர்பார்கிறேன். இது ஒரு தேவைக்காகவே... வேறு எதுவும் இல்லை.

என்னங்க ஒரு பதில் கூட இல்ல... இது எனக்கு தெரிஞ்ச விஷயம் தான்...
பார்க்கலாம்.

கேட்ககூடாத கேள்வியா இது........ அப்படி இருந்தா கூட பதில் வருது.......... எல்லோரும் பதில் தெரிஞ்சாலும் சொல்ல மாட்றீங்க!!! தெரியலன்னாலும் சொல்ல மாட்றீங்க!!! நன்றிங்க அனைவருக்கும்......

சாரிங்க எனக்கு தெரியலே.யாராவது சொல்லுவாங்க

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

சாரிங்க... எனக்கும் தெரியாது. காத்திருங்க... ஒரு மேடை நாடகம்னா சும்மாவா... அதுக்காக ஒவ்வொருத்தர் வருட கணக்கா உழைக்கறாங்க :)

தெரியலன்னாலும் சொல்ல மாட்றீங்கன்னு வேற சொல்லிட்டீங்க... அதான் சொல்லிட்டேன். இன்னும் எத்தனை பேர் வந்து தெரியலன்னு சொல்ல போறாங்களோ!!! கோவிக்காதீங்க... சும்மா தான் சொன்னேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த இழையை இப்போ தான் பார்க்கிறேன். பழைய என்றால் எவ்வளவு பழசு என்று சொன்னால் சொல்லலாம். நீங்கள் சோவின் நாடகம், எஸ் வி சேகர், மௌலி, கிரேசி மோகன் அவர்களின் நாடங்கள் சீடியில் கிடைக்கிறது. ஆன்லைனில் கூட கிடைக்கும். நீங்கள் நெட்டில் தெனாலி ராமனின் நகைச்சுவை நாடகம் என்று தேடினால் நிறைய வரும். இருந்தாலும் இந்த மாதிரி ஏற்க்கனவே உள்ள நாடங்களை நீங்கள் உபயோகிக்க எதாவது தடை இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொள்ளவும். அது சரி என்ன காரணத்திற்க்காக என்று சொல்லவே இல்லையே....அது சரி...ரகசியமா இருந்தால் என் காதில் மட்டும் சொல்லுங்கோ.....நம்ப அறுசுவை கதாசிரியர்கள் எழுதிக் கொடுத்தால் என்ன சன்மானம் என்று சொன்னால் எல்லோரும் எழுத ட்ரை பண்ணுவாங்க இல்லையா? அப்போ நமக்கு தருமி நக்கீரன் மாதிரி சீன் எல்லாம் கூட வருமில்லையா?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு தெரியல, ஆனால் யாராவது வந்து சொல்லுவாங்க நானும் தெரின்சுக்கலாம் நு தான் காத்திருந்தேன், :(

அன்புடன் அபி

இப்படியே எல்லாத்துக்கும் கூப்பாடு போட்டு கூப்பிட வேண்டிய நிலைமை பார்த்தீங்களா எனக்கு!!!
சரி விடுங்க...தெரியலன்னு வந்து சொன்ன பாத்திமா, வனிதா, லாவண்யா, அபிராமி அனைவருக்கும் மிக்க நன்றி......

ஒரு கெட்டுகெதர் அதுல பொழுது போக்க ஒரு நாடகம் இருக்கட்டுமேன்னு தான், கண்டிப்பா டான்ஸ், பாட்டு எல்லாம் உண்டு... சின்ன விழா தான். எல்லாமே இப்படி இருக்கேன்னு நான் தான் கொஞ்சம் வித்தியாசமா செய்ய முயற்சி எடுத்தேன்! ( உங்களை நம்பி!!!!!!!) அது நடக்காது போல.......
லாவண்யா........ என்ன ஒரு நூறு டாலர்........ இல்ல இல்ல....... சும்மா சொல்றதே சொல்றோம்........ ஒரு பத்தாயிரம் டாலர் போடலாமே........ ஒரு நாடகத்துக்கு.....
விதி முறை எல்லாம் உண்டுங்க......... நான்கு காட்சியாவது குறைந்த பட்சம் இருக்கணும்.
ஆபாசம், இரட்டை அர்த்த சொற்கள் கண்டிகாக கூடாது..........

..........குட்டி மனிதர் அழறார்........திரும்ப வரேன்.....

வாங்க வாங்க சீக்கிரமா எழுதி சன்மானத்தை அள்ளிக்கிட்டு போங்க.....

உமா நீங்க இங்கே என்ன வேலை/ தொழில் பண்றீங்க? தெரிஞ்சா நாங்களும் சம்பாதிக்காலாம்னு ஒரு சின்ன (பெரிய !!!!!!!!!!!!!!!) ஆசை ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இந்த கான்ஸப்ட் வொர்க் ஆகுமா பாருங்க...

(எல்லாம் நேற்று நண்பன் படம் பார்த்த எஃபக்ட்டு தான் ;))

ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு 10ஆம் வகுப்பு மர்க் வைத்து ஒரு க்ரூப் சேர்ப்பது போலவும், அவன் 12ஆம் வகுப்பில் சரியான மார்க் எடுக்காத போது அவனுடன் கலந்து பேசி அவன் விரும்பும் துறையில் சேர்ப்பது போலவும்... அப்பா தான் இங்க மெயின்... தான் விரும்பாதா கம்பியூட்டர் ஸைன்ஸ் தன் தந்தை வேலை கிடைக்கும் என் கட்டாயப்படுத்தி சேர்த்ததால் இன்றும் தான் பெரிய அளவில் முனேர முடியவில்லை, தனக்கு ப்ரோக்ராமிங் பெருசா வரல, அதனால் தான் இன்னும் சாதாரண நிலையிலேயே இருப்பதாக சித்தரிக்கலாம்.

அடிக்க வராதீங்க... இதுல நீங்க கேட்ட காமெடி, சீரியஸ்னஸ், கருத்து எல்லாம் வரும். பிடிச்சா பாருங்க... இல்லன்னா திட்டாம விட்டுடுங்க வனியை. :) எனக்கு மேடை நாடங்கம் பற்றிய அனுபவம் இல்லை... பார்த்ததும் இல்லை. மேலே சொன்ன விஷயத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதுறது சுலபம் தான்னு தோணுச்சு... அதனால் கொடுத்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறது? ஏனென்றால் ரொம்ப நாளாகிறது. கொஞ்சம் refresh பண்ணனும். எவ்வளவு முடியும்ன்னு தெரியல.குட்டியம்மா allow பண்ணும்போது ட்ரை பண்ணுகிறேன்.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

மேலும் சில பதிவுகள்