டீனேஜர்ஸ்

இந்த டீனேஜ் பருவம் என்பது, என்னுடைய்ய வயதை ஒத்திவர்களுக்கு, அது ஆண்களானாலும் சரி,பெண்களானாலும் சரி, எப்பொழுது வந்தது எப்பொழுது போனதென்றே தெரியவில்லை, தெரிந்திருக்காது. காரணம் அப்பொழுதெல்லாம் பெற்றோர்களுக்கு இந்தக் காலம் போல் பிள்ளகளை வளர்ப்பதில் அவ்வளவு பிரச்சனைகள் இருக்கவில்லை. பெற்றோர்களும், பிள்ளைகளும் ஓரளவிற்க்கு ஒரு வித புரிதலுடன் வாழ்ந்தபடியால், வீடுகளில் இப்பொழுதுள்ள பிரச்சனைகள் போல் இல்லாமலிருந்தது.
ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது. இந்தக் கால பிள்ளைகள், புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்வதை நிறுபித்து வருகின்றார்கள். அதற்க்கு காரணம் இந்த விஞ்ஞான உலகத்தில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம். மாற்றம் என்று ஒத்தை வரியில் கூறமுடியாத அளவிற்க்கு வளர்ந்துக் கொண்டிருக்கின்றது.
மேலும் அதோடு மட்டுமல்லாமல், நாகரீக வளர்ச்சியும், பன் மடங்கு வளர்ந்து அதனோடு சேர்ந்துக் கொண்டதால், இந்த வளர்ர்சிகளில் ஈடு கொடுக்க, இந்த கால பிள்ளைகள் போராடி வருகின்றார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் எத்தனை பெற்றோர்கள் அதை புரிந்துக் கொண்டு பிள்ளைகளை வழி நடத்தி செல்கின்றார்கள் என்றால் மிகவும் குறைவு தான்.

பிள்ளைகளை, அதிலும் இந்த காலத்து டீனேஜர்களை புரிந்துக் கொள்வது என்பது, மிகவும் கடினமாக உள்ளது, என்பதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு புரியும். அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.ஆனால் காலத்திற்க்கு ஏற்றவாறு பெற்றோர்கள் தம்மை மாற்றிக் கொள்வதை தவிர வேறு வழி யில்லை என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன் என்ற முறையில் கூறுவேன்.
பிள்ளைகள் செய்வது தவறானக் காரியம், போகும் பாதை தவறானது என்று தெரிந்தும் அதை கண்டும் காணாமலும் இருக்க எந்த பெற்றோர்களாலாலும் முடியாது.
ஆனால் அதே பெற்றோர்களின், தவறான அனுகு முறையாலும் பிள்ளைகள் கெடுவதற்க்கு வாய்ப்புள்ளது. அதேப்போன்று அவர்களை தவறான பாதையிலூம் போக விடாமல் தடுக்க பெற்றோர்கள்ளால் தான் முடியும் என்று திட்டமாக கூறமுடியும்.
ஆகவே பெற்றோர்கள் தங்களுக்கு அறியாமலே,பிள்ளைகளுக்கு செய்யும் தீமைகளை பார்க்கலாம்.எப்படி என்றால்.

பிள்ளைகளிடம் குழந்தையிலிருந்தே,எந்தக் காரணத்திற்க்காகவும் பேரம் பேசக் கூடாது. இந்த தவற்றை கிட்டத் தட்ட எல்லா பெற்றோர்களும் செய்கின்றோம்.அதாவது பிள்ளளிடம் நீ First rank வாங்கினால் நான் உனக்கு இதை வாங்கித் தருவேன், நீ இதைச் செய்தால் நான் உனக்கு அதை வாங்கித் தருவேன், போன்ற பழகத்தை அறவே ஒழிக்க வேண்டும். இதனால் பிள்ளைகளுக்கு நமக்கும் உள்ள பாசம் குறைந்து எதற்கெடுத்தாலும் இந்த பேரம் பேசுவதையும், அதனால் கிடைக்கும் ஆதாயங்களை மட்டும் தான் அவர்கள் நம்புவார்களே ஒழிய நாம் அவர்களின் மீது வைத்திருக்கும் அக்கறை புலப்படாமல் போய்விடும்.

நம் பிள்ளைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மற்ற பிள்ளைகளுடம் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பது.இதனால் அவர்கள் மனத்தில் தாழ்வு மனப்பான்மைய்யை நாமே ஏற்படுத்தி பிள்ளைகளை வருங்காலத்தில் தனக்கு சரி என்று பட்டதை கூட வெளியிடாமல் தாழு மனப்பான்மையாகவே வாழ நாமே வழிவகுத்து விடுவோம்.

பிள்ளைகளின் வாழ்க்கை அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களில் தான் உள்ளது என்ற மனப்பான்மைய்யை நாம் அறவே நீக்கினால் ஒழிய ஒரு நல்ல வருங்கால சமுதாயத்தை உருவாக்க முடியாது, என்று நினைக்கின்றேன். காரணம் பட்டப் படிப்பை இல்லாமல் கூட வாழ்க்கைய்யை செம்மையாக வாழமுடியும் என்பதற்க்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை காட்ட முடியும்.ஆனாலும் பிள்ளைகளிடம், வாழ்க்கைக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதையும், அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில் தான் உள்ளது போன்ற கருத்தினை மட்டுமே வலியுருத்த வேண்டுமே ஒழிய, அவர்கள் எடுக்கும் எல்லா முடிவுகளிலும் தலையிடக் கூடாது. இதனால் இரண்டு தரப்பினருமே சேதமடைய்ய வாய்ப்பிருக்காது.

பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மரியாதை தர வேண்டும். அவர்களிடம் நம்முடைய்ய எதிப் பார்ப்புகளையும், நம்முடைய்ய அனுபவங்களையும், சுமத்துவதற்க்கு பதிலாக, அவர்களிடம் அதை பகிர்ந்துக் கொண்டால், நல்ல ஆரோக்கியமான உறவை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவர்களைப் பற்றி அவர்களிடம் நாமே கேட்க்க முற்படும் பொழுது, பிள்ளைகளுக்கு அவர்களின் பேரில் தன்னம்பிக்கை வளர ஏதுவாக இருக்கும். இந்த அனுகு முறையால் பிள்ளைகள் பெற்றோர்களை தானாகவே மதித்து அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும், அதன் படி நடக்கவும் வழிவகுக்கும்.

தோலுக்கு மிஞ்ஜினால் தோழன், என்பது போல், இந்த தோழன் அல்லது தோழி என்ற உறவைப் போல் ஒரு மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் உறவு எதுவுமில்லை என்று தான் கூறுவேன். அந்த தோழனாக பெற்றோரே அமைந்து விட்டால் பிறகு பிள்ளைகள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பேயிருக்காதல்லவா. அதிலும் தோழனைப் போல் நாம் மட்டும் பழகுவதில் எந்த வேறு பாட்டையும் அவர்களால் நம்மிடம் உணர முடியாது ஆனால் அவர்களின் தோழர்களையும் நாம் மதிக்கின்றோன் என்று உணர்த்த வேண்டும். அவர்களின் மதிப்பெண்ணை கேட்பதற்க்கு பதிலாக அவரைப் பற்றி அக்கரையோடு பிள்ளைகளிடம் விசாரிக்க வேண்டும். வீட்டிற்க்கு அழைத்து வரும் படி கோரிக்கை விட வேண்டும். இதனால் பிள்ளைகளின் மனத்தில் பன்மடங்காக பெற்றோர்களின் மதிப்பு உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.
முக்கியமாக பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளால் தான் நம் பிள்ளை கெடுகின்றான் போன்ற மனப்பான்மைய்யை அறவே நீக்க வேண்டும். அதுப் போல் யாரையும் யாராலும் கெடுக்க முடியாது என்பது என் கருத்து.

சில நேரங்களில் பிள்ளைகளுக்கு மனரீதியாக உதவிகள் தேவைப்படும். அதைக் குறிப்பறிந்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை அன்பான முறையில் பூர்த்தி செய்வதை பார்க்கவேண்டும். மாறாக "உனக்கு என்ன குறை வைக்கின்றோம், நீ ஏன் இப்படி இருக்கின்றாய் போன்ற வசனங்களை தவிர்க்க வேண்டும்". கூடிய மட்டும் பிள்ளைகளுக்கு அறிவுரைச் செய்வதை தவிர்த்து ஆலோசனைகளை மட்டும் செய்வதால் அவர்களுக்கு நம்மிடம் நெருங்கி பழக வழிவகுக்கும்.

பிள்ளைகள், பெற்றோர்கள் எதிர் பார்ப்பது போல், சரியாக படிக்க வில்லை என்றாலோ, பள்ளியில் சிறந்து விளங்க வில்லை யென்றாலோ, அதர்க்காக அவர்களை பல வழிகளில் போட்டு கசக்கி பிழிய கூடாது. இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம். அடுத்த வருடமும் தோல்வி என்றால், அதற்கடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கைய்யை முதலில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். உன்னை நான் நம்புகின்றேன், நீ எப்படியும் இதைச் செய்து முடிப்பாய் என்று பிள்ளையின் முகத்தை நோக்கி கூறிப்பாருங்கள், அவர்களின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பின் ஒளி தெரிவதைப் பார்க்கலாம். அதை விடுத்து கடின வார்த்தைகளினாலும், நீ எப்படியாவது இதை செய்து தான் ஆகவேண்டும் என்று உத்தரவு போடுவதால் பிள்ளைகள் மன அழுத்தற்திர்க்கு தான் ஆளாவார்களே ஒழிய வாழ்க்கையில் முன்னுக்கு வர வாய்ப்பில்லாமல் போய்விடும்.

பிள்ளைகள் ஒரு பொருளை கேட்டால் பெற்றோர்கள், எப்பாடு பட்டாவது அந்தப் பொருளை வாங்கி தர முயற்ச்சி செய்ய வேண்டும். அந்த சமையத்தில் முடியாவிட்டால், அதன் காரணத்தை கூறி,சமையம் வரும் போது அதை வாங்கி தர வேண்டும். இல்லையென்றால் அந்தப் பொருள் நம் சக்திற்க்கு மீறிய பொருள் என்பதை நேரிடையாக கூறிவிடுவதே மேல். அதை விடுத்து பிறகு பார்க்கலாம் என்று வாக்குறுதி கூறி விட்டு,பிள்ளைகள் மறந்து விட்டார்கள் என்று நாம் தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. இதனால் பிள்ளைகள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைய்யை இழந்து விடுவோம்.

ஆகவே பெற்றோர்களே, விலைமதிக்க முடியாத நம்முடைய்ய பிள்ளைகளை விட, இந்த உலகத்தில் வேறு உயர்ந்த சொத்து எதுவுமில்லை என்பதை அவர்களுக்கு, உங்களின் அணுகு முறையினால் உணர்த்தி விடுங்கள். பிறகு பாருங்கள் உங்களின் கனவு நினைவாவதை.நான் இதை எழுதும் பொழுது இன்றைய்ய சமுதாயத்தினரை மட்டுமல்லாமல், வருங்கால டீனேஜர்களின் பெற்றோருக்காகவும் எழுதினேன். காரணம் இந்தப் பருவம் தான் பிள்ளைகளை தடம்புரள வைக்கும் நேரம், ஆபத்தான பருவம், என்பதை வலியுருத்த வேண்டுமென்று கருதினேன்.சிறு துரும்பும் பல் குத்த உதவும், என்பது போல் உங்களுக்கு இந்த கருத்துக்கள் சிறு துரும்பாக உதவினால் சரி. உதவும் என்ற நம்பிக்கையில் முடிகின்றேன். நன்றி.

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு
சுகமாக இருக்கிறீர்களா.இப்பொழுதுதான் உங்கள் கருத்துக்களை படித்தேன்.சூப்பர் மேடம் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை . நிறைய பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் எனக்கும் சேர்த்துதான் (வருங்காலத்தில்).

சில பேர் பாசம் என்ற பெயரில் பிள்ளைகளை கண்டிக்காமல் நாம் எது செய்தாலும் நம் பெற்றோர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று அதையே ஒரு அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொள்வார்கள்.சில பேர் கண்டிப்பு என்ற பெயரில் ரெம்பவும் கண்டித்து பிள்ளைகளுக்கு பெற்றோர் என்றாலே ஒரு வெறுப்பு வரவும் காரணமாக அமைந்து விடுகிறது இது போல் இல்லாமல் எதுவும் ஒரே அளவாக இருந்தால் நல்லது நாமும் தோழமையோடு பழகினால் அவர்களும் நம்முடன் மிகவும் பாசமாகவும்,அதே சமயத்தில் நம்மை மதிக்கவும் செய்வார்கள் என்பது எனது கருத்து பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

ஹலோ மிஸஸ் செய்யத், நான் நலமாக இருக்கின்றேன். நீங்களுடன் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. எப்படி இவ்வளவு அழகாக உங்களால் இந்த தலைப்பற்றி முன்னனுபவம் இல்லாமலே கூற முடிந்தது. ஆச்சரியமாக இருந்தது. உங்கள் பிள்ளை மிகவும் அதிர்ஷ்டச்சாலி தான், இந்த மாதிரியான சிந்தனையுள்ள அம்மா கிடைப்பதுவென்றால் சும்மாவா.
நீங்கள் கூறி இருப்பது முற்றிலும் உண்மை. பெற்றோர் செல்லம் கொடுப்பதில் கூட பிள்ளைகளுக்கு ஆபத்து இருக்கின்றது.தான், ஆனால் அதை அளவோடு வைத்துக் கொண்டால்,பிறகு பிள்ளைகளால் பிரச்சனை இருக்காது என்ற தங்களின் கருத்து முற்றிலும் உண்மை. என்னைப் பொருத்தவரையில் மரியாதை கூட தேவையில்லை, மனதால் நம்மை மதித்து நடந்தாலே போதும். அது போதாதா நமக்கு?நன்றி.

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நீங்கள் சொல்வது உண்மைதான் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் நானும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள தானே வேண்டும் நாளைக்கு எனது பிள்ளையும் இந்த டீனேஜ் பருவத்துக்கு வரும் போது நானும் அவன் எதிர் பர்க்கிறதை என்னால் முடிந்தவரை நிறை வேற்றி வைக்கனும் இல்லையா எனது கணவரும் சொல்லுவார் உனது மகன் அதிர்ஷ்டசாலி என்று ஆனால் அவர் என்னைவிட ஒரு படி அதிகம் எனது மகன் படிப்பு வாழ்க்கை எல்லாத்திலேயும் அவன் ஆசைபடுகிறது மாதிரிதான் நீ எதுவும் அவனை வற்புறுத்தக்கூடாது என்று அவன் பிறந்த போதே சொல்லி விட்டார்கள். நீங்கள் சொல்வது போல் மரியாதைகூட தேவையில்லை மனதால் எப்பொழுதும் மதித்தால் போதும் அதனால் தான் நாம் பிள்ளைகளை வளர்க்கும் போதே அதிகம் செல்லமும் இல்லாமல் அதிகமான கண்டிப்பும் இல்லாமலும் வளர்த்து வந்தால் நாம் நினைப்பது நடக்கும் மீண்டும் சந்திக்கலாம் மேடம்.
நன்றி

மேலும் சில பதிவுகள்