சுவாரசியமா நியூ டாபிக் கடல் [anjali]

எல்லோரும் நலமாக இருக்கீங்களா ?அப்புறம் அனைவரின் குட்டீஸ் ம் நலமா? என்னடா இது, திடீர்னு ஒது பதிவுன்னு பாக்குறீங்களா? ஒன்னுமில்ல,இன்னிக்கு என்னான்னு தெரியலியே புதிசா, சுவாரசியமா நியூ டாபிக் எதாவது ஓபன் பண்ணி எல்லாருக்குமே நல்ல இன்டரஸ்டிங்காக இருக்கவேண்டும் என்று நான் யோசித்து யோசித்து பார்த்தேன் ஒன்றும் புதிதாக தோன்றவில்லை.கடைசியா கடல் பற்றிய பொதுவான தகவல் நிச்சயம் எல்லோரும் இன்டரஸ்டிங்காக இருக்குமென்று நினைக்கிறேன்.சைட்டில் பார்த்து கடல் பற்றிய தகவலை தெரிந்துக்கொண்டேன்.அதை உங்களுக்கும் எழுதுகிறேன்.நீங்களும் உங்களுக்கு தெரிந்த கடல் பற்றிய தகவலை எழுதுங்கள் சரியா! நல்ல ஃபாஸ்ட்- ஆக ஓப்பன் ஆகிறது. பதிவுகளை ஈஸியாக போடமுடிகிறது. இது தொடர்ந்து இப்படியே இருக்கவேண்டும் என்று ப்ரார்த்தனை செய்வோம். ஏதோ என்னால் முடிஞ்ச தகவலை எழுதுகிறேன்.

முதலில் மனிதனால் கடலுக்கு ஏற்ப்படும்தீமை:-
வரலாற்று ரீதியாக மனிதன் கடலின் வளத்தை மனித உபயோகத்துக்காக தொடர்ந்து அழித்துக்கொண்டிருப்பதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.'எல்லா கடற்கரை ஓரங்களிலும் பெரும் விலங்குகள் பெரும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்திருக்கின்றன. ' ஆராய்ச்சிக்கட்டுரையின் முக்கிய ஆசிரியராக இருக்கும் இவர், 'இன்று பார்க்கும் கடற்கரை, நீங்கள் முன்பு பார்த்திருக்கக்கூடிய கடற்கரையை விட மிக மிக வித்தியாசமானது ' என்று ஜெரமி ஜாக்ஸன் கடல்ஆராய்ச்சி ஆசிரியர் கூறுகிறார்.
கரீப்பியன் கடலில் 4 கோடி ராட்சத பச்சை ஆமைகள் இருந்ததாகவும், 100 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் சீஸபேகே கடற்கரையில் திமிங்கலங்களும், பெரும் சுறாக்களும் அதிக அளவில் வாழ்ந்து வந்தன என்றும் கடல் ஆராய்ச்சி கண்டறிந்திருக்கிறது.
இந்தக் கடற்கரையில் படகு ஓட்டுவதும் கப்பல் விடுவதும் கூட கடினமாகிற அளவுக்கு ஷெல் மீன்கள் இருந்தன.
மக்களுக்கு இன்னும் எவ்வளவு இழப்பு நடந்திருக்கிறது என்று தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
'நூறு வருடங்களுக்கு முன் மைன் மாநிலத்தில் இருந்த காட் மீனின் சராசரி அளவு ஒரு மீட்டர் நீளம் ' காட் மீன்கள் இன்றுசிறியவை.அதிக அளவில் மீன் பிடிப்பதால், சுற்றுச்சூழல் கேடும், மீன்கள் வாழும் இடங்களின் அழிவும், வியாதிகளும், மனிதன் உருவாக்கும் தட்பவெப்ப மாறுதலும் அதிகரிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.பல்கலைக்கழகங்களும், பல நாட்டு அறிவியல் அமைப்புக்களும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக, கடல்வளத்தின் அழிவைப்பற்றி வரலாற்று ரீதியாக ஒரு முடிவுக்கு வர முடிகிறது. வால்ரஸ், கடல்பசு, கடல் ஆமைகளும், பெரும் காட் மீன் களும் திரிந்துகொண்டிருந்த கடலும், கடற்கரைகளும் வெற்றிடங்களாக ஆகி வருகிறது. என்ற தகவல் மனிதனால் கடலுக்கு ஏற்ப்படும்தீமை உணர்த்துகிறது.

இரண்டாவதாக கடலால் மனிதனுக்கு தீமை:-
கடலால் தீமை என்றால் நினைவுக்கு வருவது சுனாமிதான். செம்பர் 26ஐ துயரநாளாகக் கூட அறிவிக்கலாம். அத்தகையதொரு பேரழிவும் பேரிழப்பையும் நடத்திய சுனாமி என்கிற பெயரைக் கேட்டாலே நடுநடுங்குகிற அளவிற்கு 2004 - ல் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி விட்டுப்போனது அந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட அந்த உயர் நிலநடுக்கம் கடல்வழியே பரவி இந்தியா, இலங்கை, அந்தமான் - நிக்கோபால் தீவுகளென கதிகலங்க வைத்தது இன்றும் நினைவில் சுவடாய் பதிந்திருக்கிறது.
நிலநடுக்கம்தான் மீண்டும் மீண்டும் அந்தமானை அச்சுறுத்தி வந்தது. 2004 டிச.26 க்குப் பிறகு எண்ணிலடங்காத முறை அப்பகுதியில் நிலநடுக்கமும், நில அதிர்வும் ஏற்பட்டு அச்சுறுத்திக்கொண்டேயிருந்தது.ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையும் அதற்கு ஒரு காரணமாய்ச் சொல்லப்படுகிறது. சுனாமிக்குப் பிறகு உலக வரைபடத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பள்ளமானப் பகுதி கடலில் புதையுண்டும் கடலிலிருந்த மேடானப் பகுதி வெளித்தெரிவதாகவும் கூறப்படுகிறது. சுனாமிக்குப் பின் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் சில மாற்றங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று கடலில் புதையுண்டு கிடந்த பாறைச் சிற்பங்கள் வெளித்தெரிவதாகும். அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கடல் ஆராய்ச்சியின் மூலம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சிற்பக்கோயில்கள் பல்லாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலில் மூழ்கிப் போயிருப்பதாக இந்த கடல் ஆராய்ச்சி தெரிவிக்கிறது
. இது விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் ஆராய்ச்சிக்கும் சுனாமியால் ஏற்பட்ட லாபம் என்றாலும் தற்போதைய கடல் மட்டம் நிலமட்டத்தை சற்று நெருங்கி வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை தூண்டியிருக்கிறத சுனாமிக்குப்பின் அடிக்கடி கடல் உள்வாங்குவதும் வெளியேறுவதுமாய் இருப்பதும் ஒருவித அச்சஉணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
“சுனாமி வந்ததற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமில்லை,அறிவியல் வளர்ச்சியால் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் உலகெங்கிலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற பல அடுக்குமாடி கட்டிடங்களும் உலக நாடுகள் தங்கள் பலத்தை பரிசோதித்துக் கொள்ளவும் சோதனையின் பேராலும் அவ்வப்போது நிகழ்கிற அணுகுண்டு சோதனைகளும் போர்களும் ஒருவகையில் காரணமாய் இருக்கும்” என்று அறிவியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
அணுஆயுத சோதனையாலும் அடுக்குமாடிகள் பெருகிவருதாலும் நிலத்தில் ஏற்படுகின்ற அழுத்தத்தின் காரணமாக பூமிக்குள் இருக்கிற நெருப்புப் பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி எரிமலை வெடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட சுனாமி, நிலநடுக்கம், எரிமலை, புயல், ஓசோன் ஒட்டை, அளவிற்கு அதிகமான மழை - வெள்ளம் அனைத்திற்கும் தீர்வு இயற்கையோடு ஒன்றி வாழ்வதைத்தவிர மனிதச் சமுதாயத்திற்கு வேறுவழியில்லை. விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தை இயற்கைக்கு எதிராக பயன்படுத்துவதை மனிதச் சமுதாயம் தவிர்க்க வேண்டும்.இத்தகையதொரு மாற்று வழிகளே இயற்கைப் பேரிடரிலிருந்தும் பேரழிவிலிருந்தும் உலகையும் மக்களையும் காக்கும்.

மேலும் இன்டரஸ்டிங்கான தகவல்

கொல்கத்தா அருகே இரண்டு தீவுகள் கடலில் மூழ்கின:-

பூமியின் தட்பவெப்பநிலை மாறிவருவதால் கடல்நீர் மட்டம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டிய சுந்தரவன டெல்டா பகுதியில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட.பூமியின் தட்பவெப்ப நிலை மாறிவருகிறது. இதன்காரணமாக கடல்நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. அத்துடன் கடல் அரிப்பும் தொடர்கிறது. இதன்காரணமாக மேற்கு வங்க மாநிலத்தை ஒட்டியுள்ள சுந்தரவன டெல்டா பகுதியில் உள்ள நூறு தீவுகளில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன. இவற்றை செயற்கை கோள்கள் மூலமும் கண்டுபிடிக்க முடியவில்லை.1940 களில் இருந்து இந்தத் தீவுகள் மூழ்கி வருகின்றன.சுந்தரவனப் பகுதியில் உள்ள நூறு தீவுகளில் 10 ஆயிரம்பேர் வசிக்கின்றனர்.

ஐயோனியன் கடல்:-

கீரீஸ் நாட்டின் மேற்கு எல்லையில் ஐயோனியன் கடலில் இருக்கும் குட்டிக் குட்டித் தீவுக் கூட்டங்களே ஐயோனியன் தீவுகள் என்று அழைக்கப் படுகின்றன. 1960ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து உல்லாசப் பயணிகள் இந்தத் தீவுகளுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
மத்தியத் தரைக்கடல் தட்ப வெட்ப நிலையைக் கொண்ட இயற்கை அழகு கொஞும் இந்தத் தீவு பெயரின் காரணகர்த்தா இந்தத் தீவுகளைச் சூழ்ந்திருக்கும் ஐயோனியன் கடல். ஐயோனியன் கடலைப் பற்றி வரலாற்று உண்மையை அறிவோம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்ரேல் நாட்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கற்கால மீனவ கிராமம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அங்குக் கிடைத்த அரிய பொருட்களை ஆராய்ந்து பார்க்கும் போது அந்த கிராமம் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அதிரடியாகக் காலி செய்யப் பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அந்த கிராமம் மாயமாய்ப் போனதன் காரணம் தெரியவில்லை.
இந்த நிலையில் இத்தாலிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சிசிலித் தீவின் கிழக்குக் கரைப் பக்கமாக ஐயோனியன் கடலின் அடிப்பாகத்தில் ஆராய்ச்சி செய்த போது அது ஒழுங்கீனமாகக் கலைக்கப் பட்டிருப்பது தெரிந்தது. அப்படி இருக்கக் காரணம் என்ன என்று மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது சிசிலித் தீவில் உள்ள எட்னா என்ற எரிமலை பயங்கரமாக எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்து இருக்க வேண்டும், அதன் விளைவாக ஐயோனியன் கடலில் மிகப் பெரிய சுனாமி உருவாகி இருக்கிறது. அந்த சுனாமியின் அலைகள் ஏறக்குறைய ஐம்பது மீட்டர் உயரமாகவும், மணிக்கு 725 கிலோ மீட்டர் வேகமாகவும் கடலின் நான்கு பக்கங்களிலுள்ள கடற்கரைகளை கபளீகரம் செய்து விட்டது. இன்றைய நாடுகளான கீரீஸ், எகிப்து லிபியா இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கடற்கரைகளைத் துவம்ஸப் படுத்தியிருக்கிறது இந்த சுனாமி. ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப் படி இந்தியப் பெருங்கடலில் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பேரழிவு ஏற்படுத்திய சுனாமியை விட மிகப் பெரியது.
நமது வாழ்வில் தினம் தினம் நடப்பது தான் சரித்திரம் ஆகிவிடுகிறது.சுனாமி பற்றியதகவலால் , இதயம் அதிர்கிறது அல்லவா? .படிச்சத மனசிலிருந்து அழிச்சிருங்கோ. சுனாமி பற்றி நினைக்காமல் ஜாலியா!சந்தோஷமாக இருங்க சரியா.மீண்டும்சந்திக்கலாம் நன்றி. இப்படிக்கு
anjali.

நீங்க எப்படி இருக்கீங்க. நான் நலம் என் பையனும் நலமே.அடேங்கப்பா எவ்வளவு பெரிய பதிவு இதை எப்படிப்பா சுலபமாக டைப் பண்ணுனீங்க சுவாரஸ்யமான தகவல்களை தந்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள். சுனாமி பற்றி எப்ப படித்தாலும் மனசு கனக்கிறது உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

மறந்திருந்த சுனாமியை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் நலம் .[கதீஜா,அதிரா ]நீங்க எப்படி இருக்கீங்க ?
கதீஜா,அப்ப அப்ப notepadல டைப் பண்னி வைச்சுட்டு புள்லா எழுதிமுடிச்சவுடனே அனுப்புகிறேன்.
[கதீஜா,அதிரா ! ]சரி ரெண்டுபேரும் சாப்பிட்டாச்சா?
நான் சாப்பிட்டாச்சு!
இன்னைக்குஎங்க வீடுல வத்தகுழம்பு கேரட் பீன்ஸ்,முட்டைகோஸ் பொரியல் .
என் மகன் சாப்பிட்டுகிட்டே........இருக்கான்!
....வரீங்களா சாப்பிட? கதீஜா,அதிரா onlineனா? நீங்க!

naturebeuaty

haiarusuvai friens,எல்லோரும் நலமாக இருக்கீங்களா ?nann anjali.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.
குறிப்பு :-ஃபேஷியல் செய்யும் போது இவற்றால் எதாவது அலர்சியா என கண்டறிய முதலில் கையில் தடவி பார்க்கவும் ok.

வைட்டமின் ஏ அதிகமுள்ள பழங்கள் தோலுக்கு நல்லது. இது மேல் தோல் வளர்வதற்கு உபயோகமாக இருக்கும்.

பப்பாளி, ஆரஞ்சு, தக்காளி, அவ்கோடா பழம் போன்ற பழ வகைகளைக் கொண்டு ஃபேஷியல் செய்தால் கண்டிப்பாக முகம் பளபளப்பாகக் காணப்படும்.

ஃபேஷியல் செய்யும் முறை:

முதலில் க்ளன்சிங் மில்க் (cleansing milk) கொண்டு முகத்தில் உள்ள அழுக்கை நீக்குங்கள்.

பின்பு, பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது தக்காளி அல்லது அவ்கோடா பழம் போன்ற பழவகைகளைக் கொண்டு முகத்தை 20-25 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். ஃபேஷியல் மஸாஜ் எப்பொழுதும் மேல் நோக்கியே இருக்க வேண்டும்

ஒரு சுத்தமான டவலை வெந்நீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இப்படி முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கையில் அழுக்கு வெளியே வரும். சுத்தமான பஞ்சை எடுத்து அழுக்கைத் துடைக்க வேண்டும்.

நிறைவாக ஃபேஸ் பேக் முகத்தில் பூசலாம்.

பச்சைப் பயறு மாவு ஒரு டீஸ்பூன், அரிசி மாவு ஒரு டீஸ்பூன், இத்துடன் சிறிது பால் கலந்து முகத்தில் 15 நிமிடம் வைத்திருந்து சில்லென்ற தண்ணீரீல் கழுவலாம் . மீண்டும் சந்திக்கலாம் நன்றி. இப்படிக்கு,
anjali.

naturebeuaty

மேலும் சில பதிவுகள்