கலக்கலான காதல் அரட்டை

வாங்க...காதலர் தினத கொண்டாட மாட்டோம் நு அடம் பிடிக்கற வங்களும் கொண்டடுரவங்களும் எல்லோரும் உங்க platinum டே of love பத்தி இங்க சொல்லுங்க......
அதாவது "ச இவன்தான்யா நமக்கு" அப்படின்னு உங்களுக்கு தோனின்ன ஒரு moment ...ஒரு சம்பவம்...அது கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தாலும் பரவா இல்ல ..கல்யாணத்துக்கு அப்புறம் நடந்திருந்தாலும் பரவாயில்ல...
வாங்க...வாங்க...

அங்க 20 பக்கத்த முடிச்சுட்டு இங்க வாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

எனக்கு எங்க ஆளை ஏன் பிடிச்சுதுன்னு நான் ஏற்கனவே இங்க சொல்லி இருக்கேன்...

வழக்கமா என்னை யார் பார்க்க வந்தாலும் நான் வீட்டுக்கு வர விட மாட்டேன்... நேர வந்து என் ஆபீஸ்ல பார்த்து பேசிட்டு போக வேண்டியது தான். அப்படி வரவங்க பலர் என்னை நிமிர்ந்து கூட் அபார்க்க மாட்டாங்க... நான் நிறைய கேட்பேன்.. அவங்க பதில் ஒன்னு எல்லாத்துக்கும் ஓக்கே, அல்லது அம்மாவை கேட்கனும்னு தான் இருக்கும். இது இரண்டு கேட்டகிரியும் எனக்கு பிடிக்கல... எனக்காக எதையும் செய்பவரும் கூடாது, அம்மா பேச்சுக்கு தலையாட்டுறவங்களும் கூடாதுன்னு அப்பாகிட்ட எல்லாருக்கும் நோ சொன்னேன்.

இவர் மட்டும் குடும்பத்தோட என்னை பெண் பார்க்க முதன் முதலா வீட்டுக்கு வந்தார். எனக்கு அதனாலயே கொஞ்சம் பயமாயிடுச்சுன்னு தான் சொல்லனும். நான் வாயையே திரக்கல... தலை வந்து என் ரூம்’ல உட்கார்ந்து நிறைய பேசினார்... அப்பறம் “உங்க ஐடியா என்ன... பிடிச்சிருக்கா?”னு கேட்டார்... “அப்பா அம்மா என்ன முடிவு பண்றாங்களோ... எனக்கு அது தான்”னு சொன்னேன்... “உங்களை கேட்காமலா அவஙக் முடிவெடுப்பாங்க??? உங்க ஐடியாவ சொல்லுங்க..”னு மிரட்டினார்... அப்ப தான் நேரா நிமிர்ந்து பார்த்தேன்... “மவனே என்னா துனிச்சல், என் வீட்டில் என் ரூம்ல உட்கார்ந்து என்னையே மிரட்டி கேள்வி கேட்குற...”னு நினைச்சேன்... சிரிப்பு வந்துருச்சு... “எனக்கு ஓக்கே”னு நேரா சொல்லிட்டேன். அந்த துனிச்சல்... ரொம்ப போல்டா என்கிட்ட பேசின விதம்... நான் பார்த்த எல்லாரையும் விட வித்தியாசமா இருந்தது. பிடிச்சிருக்குன்னு வீட்டுலையும் சொல்லிட்டேன்.

அவ்வளவு தான் மேட்டர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, உங்களுக்காச்சும் உங்களை உங்க வீட்டு ரூம்லயே மிரட்ட ஒருத்தர் வந்தார். நான் என்னதான் ஜல்லடை போட்டு தேடினாலும் எனக்கு யாரும் அப்படி வரலயே ;( இன்னைக்கு வரைக்கும் நம்ம மிரட்டல் தான் தொடருது. அதுவும் வருத்தம் தான்.

கன்சீவா இருந்தப்ப என்னை ஊர்ல விட்டுட்டு எங்காளு காங்கோவுக்கு கிளம்பி வர்ற அன்னைக்கு கடைசி நிமிஷத்துல வேகமா ஓடி போய் எங்கேயோ இருந்து ஒரு மியூசிக்கல் கார்ட்டை வாங்கிட்ட்டு வந்து "ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட்"னு எழுதி தந்துட்டு போனார். அதை எந்த காலத்திலும் மறக்கவே முடியாது.

முதல் முதல்ல என்னை தலைவர் காங்கோலருந்து பார்க்க வந்தப்பவே ஒரே கிப்ட் மயமா தான் வந்தார். இப்பவும் அது தொடருது. இருந்தாலும் முதல் வாலன்டைன்ஸ் டேக்கு தந்த பெர்ப்ஃயூம் மணமும், கல்யாணத்துக்கு முன்னாடி தந்த பெர்ப்யூம் மணமும் தான் எப்பவும் என்னை சூழ்ந்திருக்கும். நான் இதுவரை கேட்ட எந்த பொருளையும் முடியாது, இல்லை,கிடையாது,நடக்காதுன்னு எல்லாம் சொல்லாம வாங்கி தந்திடுவார். நான் இல்லாம எங்கும் ஷாப்பிங் பண்ணாலும், எனக்கு பிடிச்சத மட்டும் தான் வாங்கிட்டு வருவார். அந்த அன்பை இன்னும் சிலிர்த்து பார்த்துட்டே தான் இருக்கேன். இதே அன்பு என்றும் தொடர விரும்புகிறேன். மற்ற தோழிகளுக்கும் அப்படியே...

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னோட பாயிண்ட் ஆ கரெக்ட் ஆ கேட்ச் பண்ணி பகிர்ந்துகிட்ட வனிதா,கல்பனா... ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு எங்கயோ பறந்துகிட்டு இருக்குற மாதிரி தெரியுது...இறங்கி வாங்க...எங்கப்பா மத்த மக்கள் எல்லாம்...???

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

என்னை பார்க்க வந்த முதல் மாப்பிள்ளை என் கணவர் தான் அவர் என்னை நான் 10 முடித்ததும் ஒரு முறை என் சொந்த காரங்க வீட்டில் பார்த்து இருக்கார் அப்போதே நான் தான் அவரது மனைவியாக வரவேண்டும் என்று முடிவு செய்து விட்டார் அப்புறம் 5 வருடம் கழித்து என்னை முறைபடி பெண் பார்க்க வந்தார் என்னுடைய நிச்சய தார்த்தம் அன்று மிக பெரிய பிரச்சனை நடந்து என்னை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்து எங்கள் திருமணம் நடந்தது இன்று வரை என் மீது உள்ள காதல் கொஞ்சமும் குறைய வில்லை அதிகம் ஆகிக்கொண்டு தான் போகிறது என்றும் எங்கள் காதல் வளர்த்து கொண்டே இருக்கிறது

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஐயோ மேடம் ல்லாம் எதுக்கு...கோமதி ன்னே சொல்லுங்க...தனா...(நீங்கதான் எனக்கு fb குல reg அனுப்பின தனவா???)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

இல்லை உங்க id எனக்கு தெரியாது நான் அனுபவில்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

நாங்க PG ஒன்னா படிச்சுட்டு இருந்தப்போ ரெண்டு பேருக்கும் என்னமோ புடிச்சு போய்டுச்சு.அவங்கள எனக்கு UG ல இருந்தே நல்லா தெரியும்.அவங்க வெளிபடையா சொல்லிகிட்டே இருப்பாங்க..நான்தான் நமக்கு இதெல்லாம் ஒத்து வராதோ..வீட்டுல ஒதுப்பாங்கலோன்னு ரெம்ப avoid பண்ணிட்டே இருந்தேன்.ஆனா அவங்கன்னா என்னக்கு ரெம்ப பிடிக்கும்.கிளாஸ் ல நுழையும் போதே shed ல அவங்க வண்டி நின்னாதான் சந்தோசமா இருக்கும்.ஆனா நான் எதையும் காமிச்சுக்கல.அப்புறம் ஒரு நாள் நான் ஊருக்கு போறேன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு அதே பஸ் ல அய்யாவும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போட்டு கிளம்பி வந்துட்டார். நானும் இதெல்லாம் வேண்டாம் ...நடக்காது...ஆசைய வளத்துக்கிட்டு அப்புறம் கஷ்ட பட முடியாதுன்னு என்னென்னமோ சொல்லி ட்ட்ருந்தேன்.ஆனா சொல்லும் போதே எனக்கும் கண்ணுல தண்ணி வந்துடுச்சு.அவங்களுக்கும் வந்துடுச்சு.ரெண்டு பெரும் சரி வேண்டாம்னு பேசிட்டு போய்ட்டோம்.அப்புறம் நான் ஊருக்கு போய் அவங்க ஞாபகம்தான்.திருப்பி நான் நாக்பூர் போனும் ஒரு ட்ரைனிங் க்காக...சென்னைல போய் இறங்குறேன்.அங்க வந்து நின்னுகிட்டு இருக்காங்க..இல்ல என்னால மறக்க முடியல...ஒரு வாரம் கூட உன்னை விட்டுட்டு இருக்க முடியல..என்ன வந்தாலும் சமாளிக்கலாம்...ன்னு சொன்னார்.எனக்கும் அதையே அவங்க கிட்ட சொல்லணும் போல இருந்துச்சு.
அதுதான் first அவன்கிட்ட சொல்லனும்னு நினச்சது தான் காதல் பூத்த தருணமோ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

தோழி,சும்மா தேடிட்டு இருக்கும் போது உங்க பதிவு கண்ணுல பட்டுது... உங்களோடது காதல் கல்யானமா? சூப்பர்............ எங்க கதை மாதிரியே இருக்கு. இடம் காலம் மட்டும் வேற... இந்த பதிவ என்னவர் கிட்ட கண்டிப்பா காட்ட போறேன்.

அப்படியே சும்மா போனா எப்புடி...வந்து அந்த ஸ்பெஷல் moment த சொல்லிட்டே போங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

மேலும் சில பதிவுகள்