weakly positive

அன்பார்ந்த தோழிகளே ,

எனக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன . திருமணத்திற்கு முன்னர் எனக்கு இர்ரெகுலர் பிரிட்ஸ் இருந்தது.திருமணத்திற்கு பின்னர் மாத மாதம் சரியாக பிரிட்ஸ் வருகிறது .மேலும் கடந்த வருடம் laproscopy செய்தேன் .இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போய் உள்ளது 48 நாள் .கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் டாக்டரிடம் சென்று urine டெஸ்ட் பார்த்தபோது weekly positive என்று கூறினார் .மேலும் 44 வது நாள் நானாக பார்க்கும் போது நெகடிவ் காட்டியது.இன்னும் எனக்கு periods வர வில்லை so ப்ளீஸ் தோழிகளே விவரம் அறிந்தவர்கள் கருத்து கூறவும்

எதுக்கும் ரத்ததில் ஒரு முறை பார்த்துடுங்களேன்.

நன்றி தோழி .உடனே பதில் அனுப்பியதற்கு.dr. 52 வது நாள் வர சொல்லி உள்ளார் .என்னக்கு கொஞ்சம் பயமாக உள்ளது .ஆலோசனை கேட்க உறவுகள் யாரு இல்லை.அதுக்குதான் .நன்றி தோழி .

ஒன்னும் பயம் வேண்டாம்... டென்ஷன் இல்லாம ரிலாக்ஸ்டா டாக்டர் சொன்ன மாதிரி கொஞ்சம் வெயிட் பண்ணி செக் பண்ணுங்க. ஏன்னா சிலருக்கு கரு உண்டாக லேட் ஆகி இருக்கும்... அவங்க எதிர் பார்க்கும் 45 நாள் ஆயிருக்காது, ஆனா டாக்டர்கள் பீரியட்ஸ் வந்த முதல் நாளில் இருந்து தான் ஓவுலேஷன் டேட், இம்ப்லாண்டேஷன் டேட் கணக்கு எடுப்பாங்க. ஆனா அது அப்படியே ஆகும்னு அவசியம் இல்லை. அதனால் கூட வீக்லி பாசிடிவ்னு காட்டலாம். நீங்க கொஞ்சம் காத்திருந்து ரத்தம் பரிசோதனை செய்யுங்க, யூரின் டெஸ்ட்டை விட இது தான் சரியான பதிலை தரும்.

சீக்கிரம் நல்ல செய்தியை எங்களூக்கும் சொல்லுங்க :) ஆலோசனை சொல்ல உறவுகள் நாங்க இருக்கோம்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u வனிதா.sorry உறவு க்குள் தேங்க்ஸ் கூடாது .

ஆங்... இப்ப தான் இப்ப தான் நீங்க அறுசுவையில் சரியா நுழைஞ்சிருக்கீங்க :) குட். உறவுக்குள் சாரி, தேன்க்ஸ் இரண்டுமே கூடாது. பயப்படாம இருங்க, அதுவே பாதி நல்லது நடக்க உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கடந்த மாதம் hsg டெஸ்ட் செய்தேன்.அதனால் நாள் தள்ளி இருக்குமா ?

அதுவா இருக்குமோ இதுவா இருக்குமோன்னு மனசை குழப்பிக்கிட்டே இருக்காதீங்க. இதைப் பற்றியே யோசிக்காதீங்க. டாக்டர் சொன்ன மாதிரி 52வது நாள் போய் பாருங்க. எல்லாம் நல்ல செய்தியாகவே இருக்கும். நல்ல இசை அல்லது உங்கலுக்கு பிடிச்ச விஷயங்களில் கவனத்தை திருப்புங்க. அதே நேரத்தில் ரொம்ப அலையாமல் சாதாரணமாக உடம்பை பார்த்துக்கோங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சரி தோழி

அன்புள்ள தோழிகளே.... நன் ஏற்கனவே weakly positive சொல்லிருந்தேன் .என்னக்கு இப்பொழுது என்ன டவுட்ன்னா என்னோட laparoscopy ரிப்போர்ட்ல் tube பிளாக் என்றும் ivf தான் சரி என்று சொன்னார்கள்.பிறகு எங்கள் ஊரில் உள்ள சிறப்பு மருத்துவரிடம் சென்றோம் .அவர் ரிப்போர்ட் பார்த்து நார்மல் கர்ப்பம் ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறி சிகிச்சை அளித்து வருகிறார் .அவர் எடுத்த hsg test ரிப்போர்ட் பார்த்த என்னவர் சித்தி (அவரும் dr தான்).1 tube பிளாக் (ரைட் சைடு) left side tube "limited peritoneal spill '' என்று உள்ளது கர்ப்பம் ஆக கொஞ்சம் தான் வாய்ப்பு உள்ளது என்று கூறினார். அதிலும் ரிஸ்க் உள்ளது என்று கூறினார்.ரிஸ்க் பற்றி நான் கவலை படவில்லை. என்னுடய ? என்னவென்றால் peritoneal spill அப்படி என்றால் என்ன. என்னக்கு இன்று 50 வது நாள்.என்னால் கர்ப்பம் அடைய வாய்ப்பு உள்ளதா? பரிச்சைக்கு போகும் மாணவனின் மன நிலையில் இப்பொழுது இருக்கிறேன்.plse விவரம் அறிந்த தோழிகள் என்னக்கு உதவ வேண்டும்.

9

இன்னும் இம்முறை தள்ளி போனதோட ரிசல்ட் தெரியாம ஏன் குழப்பிக்கறீங்க??? இப்பவே கர்ப்பமா இருந்தா?? இந்த கவலை எல்லாம் வீண் தானே??? நீங்க சொன்ன டெர்ம் பற்றிலாம எனக்கு தெரியாது... ஆனா எதுவா இருந்தாலும் யாரும் கர்ப்பமாக மாட்டீங்கன்னு சொல்லலயே... எல்லாருமே சான்ஸ் இருக்கு, ஆனா எத்தனை சதவீதம் என்பதில் தானே சந்தேகம் சொல்றாங்க. அப்பரம் ஏன் கவலை??? எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காம முதல்ல இந்த 52வது நாள் செக்கப் போய் தெரிஞ்சுக்கங்க. பயப்படாதீங்க எதை நினைச்சும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்