சிலு சிலு பனிமழை அரட்டை

ஹாய் தோழீஸ் ரொம்ப நாள் கழிச்சி அரட்டை தொடங்கியிருக்கேன் எல்லாரும் வந்து கலந்துக்கோங்க பாக்கலாம் பனிமழைல நனைஞ்சிட்டே பேசலாம் வாங்க

நாட்டாமை ஆவர்களே

பட்டிக்கு எப்போ தீர்ப்பு சொல்ல போறீங்கா. உங்க தீர்ப்புகாக காத்துகிட்டு இருக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்....

கெளதமி, நலமா? உங்கள் ஆர்வத்திற்கு மகிழ்ச்சி பா. ஞாயிறு அல்லது திங்கள் காலை தீர்ப்பு வரும். இத்தனை நாள் இங்கே பவர் சப்ளை கரெக்டாக இருந்தது. நேற்று முதல் சரியில்லை. 4 முறை போய் வந்தது. பவர்கட்டை பொறுத்து தான் தீர்ப்பு வருவது தெரியும். முதல்முறையா அறுசுவை சமையல் கட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கீங்க. இன்னும் பல நூறு குறிப்புகள் தர வாழ்த்துக்கள் தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வணக்கம் தோழிகளே

தனா பார்ட்னர், வந்துட்டீங்களா? எப்படி இருக்கீங்க? பசங்க எப்படி இருக்காங்க? உங்களுக்கு கொஞ்ச வேலை, எனக்கு நிறைய வேலை இருந்தாலும் கொஞ்சமும் பண்ணல ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

முதல்முறையா சமையல் கட்டிற்கு மட்டும் இல்லாமல் அரட்டையிலும் நுழைந்திருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழியே!

நான் நலம். நீங்கள் நலமா? இன்று என்ன சமையல் செய்து அசத்தி உள்ளீர்கள்?

அப்பாடா.......... எனக்கும் companyku ஆள் கிடைச்சிடாங்க பா....எனக்கு வேலை இருந்தாலும் கொஞ்சமும் பண்ணல

ஹாய் ப்ரண்ட்ஸ் யாராவது அரட்டையில இருக்கீங்களா?

யாராவது இருக்கீங்களா... என் நிலமையை பாருங்கையா... கேஸ் தீர்ந்து போச்சு, பாதி சமையலில் பெக்க பெக்கன்னு முழிச்சுட்டு இருக்கேன். பார்ட்டிக்கு சமைக்கும் போது தானா இதெல்லாம் நடக்கனும்??? புக் பண்ணி இவ்வளவு நேரம் ஆச்சு... காணோம் :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாராவது அரட்டைல இருக்கிங்களா எல்லாரும் சாப்பிட்டு தூங்க போயிடிங்களா
ஹேய் நசீம் வந்துட்டாங்க எல்லாரும் ஒடி வாங்க வாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்