தாய்ப்பால்

தாய்ப்பால் அதிகமாக இருக்க என்ன உணவு வகைகள் எடுத்துக்கொள்ளலாம்? ஆனால் உடம்பு எடை ஏறாமல் இருக்கவும் வழி சொல்லுங்கள்

பூண்டு சாப்பிடனும். Avoid excessive caffeine(coffee,tea,soda and choclate drinks) as that may affect your baby.Caffeine also reduces iron.

முற்றிலும் எனது மருத்துவரால் சொல்லித் தரப்பட்ட டிப்ஸ்..சூப்பராக வேலை செய்யும்

5 பல் பூண்டை பொடியாக நறுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் வறுத்து 1 பிடி சாதத்துடன் சாப்பிடுங்கள்
பால் கருவாடு கிடைத்தால் பொரித்து சாப்பிடுங்கள்
தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்
மார்க்கெட்டில் கிடைக்கும் மதெர் ஹார்லிக்ஸ் போன்ற தாய்மார்களுக்க்ன்றே வரும் பொருட்களை வாங்கி பாலில் கலக்கி குடியுங்கள்
எடை கூடும் என பயப்படவே வேனாம் பால் கொடுக்க கொடுக்க உடம்பு நல்ல குறையும்.

மிகவும் நன்றி. ஹலோ தாளிகா அக்கா நான் யு.எஸ்.ஏ -யில் இருக்கிறேன். பால் கருவாடு என்பதின் ஆங்கிலப் பெயர் என்ன? இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. மதர் ஹார்லிக்ஸ் இங்கு கிடைக்கவில்லை. அதனால் இந்தியாவில் இருந்து வாங்கி அனுப்பினார்கள்.

நீங்க இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த ஊர்? நான் பழனிக்கு அருகில் உள்ள கிராமம்.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

ஹாய் எனக்கு தமிழ்நாட்டில் கோவை தான் என் ஊர்.மதெர் ஹார்லிக்ஸ் இல்லட்டியும் வெளிநாட்டில் இன்னும் பலபல ப்ரோடக்ட்ஸ் உண்டு மாளில் ஒரு ரவுன்ட் அடியுங்கள் கிடைக்கும்.
பால்க் கருவாடு என்னன்னு தெரீலயே..ஊர்ல தான் தந்தாங்க..

தாய்ப்பால் கொடுக்க ஆசைப்படும் உங்களுக்கு முதலில் என்னுடைய அன்பை தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தை பிறந்து எத்தனை மாதம் ஆகிறது என்று நீங்கள் சொல்லவில்லையே. சாதாரணமாக குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பால் கொஞ்சம் குறைய தொடங்கிவிடும். இன்னும் ஆறு மாதம் ஆகவில்லை என்றால் கவலை படாதீர்கள். நல்ல சத்தான ஆகாரத்தை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பாலை அதிகரிக்கலாம்.
உணவில் பூண்டு நிறைய சேர்த்துகொள்ளுங்கள். சுறாமீன், சுறாமீன் கருவாடு பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள். இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் அதில் தயிர் ஊற்றி பிசைந்து சாப்பிடவும். ப்ரட்-ஐ டோஸ்ட் செய்து அல்லது பச்சையாக கூட பாலில் நனைத்து தோன்றுபோதெல்லம் சாப்பிடுங்க. டாக்டர்களிடம் கேட்டால் மாத்திரை தறுவார்கள். அதை எடுத்துக்கொள்ளலாம். இந்த சமயத்தில் வெய்ட் போடுமே என்று கவலைப்படாதீர்கள். பால் கொடுப்பது நிறுத்தியவுடன் தானாக வெய்ட் குறைந்துவிடும்.
இன்னுமொரு சின்ன டிப்ஸ்: குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மனதில் எந்தவிதமான கவலையோ, டென்ஷனோ, கோபமோ இருக்ககூடாது. நல்ல சந்தாஷத்துடன் மனதை ஃப்ரீயாக வைத்துக்கொண்டு குழந்தை மேல் கவனத்துடன் பால் கொடுக்கவேண்டும் அப்போதுதான் குழந்தைக்கு புரை ஏறுதல், வாந்தி போன்றவை இருக்காது.

மணிசரா! ( மணிமேகலை ) உங்களுடைய ரெஸ்யூம்ஸ் பார்தேன் அதில் சமையலில் சிறப்புத்திறன் என்ற இடத்திற்கு நேரே Nil என்று ஃபில் பண்ணி இருப்பதை படித்தால் சிரிப்பாகவும், இப்படி அப்பாவியாக ஒரு குழந்தையா? அதற்கு ஒரு குழந்தையா? என்றும் தோன்றுகிறது. ஒன்றும் கவலைப்படாதீர்கள். நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேளுங்கள்.

ஹலோ மாலதியக்கா நீங்கள் அம்மாவா? அல்லது அக்காவா? தெரியவில்லை.அதனால் அக்கா என்றே அழைக்கிறேன். தங்களின் தைரியமான ஆதரவுக்கு மிகவும் நன்றி. சமையலில் எனக்கு நார்மலா என்ன செய்வமோ அது செய்வேன். வைரைட்டி அயிட்டங்கள் செய்யத் தெரியாது. எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்களாகிறது. பெண் குழந்தை பெயர் செல்வ இலக்கியா.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

Manisara, Mothers Horlicks USAல் Subzi Mandiல்(NJ) கிடைக்கிறது.

ஹலோ கவிதா எப்படியிருக்கிறீர்கள்? நான் ஹுஸ்டனில் இருக்கிறேன். இங்குள்ள இந்திய கடைகளில் கிடைக்கவில்லை. அதனால் இந்தியாவில் இருந்து வாங்கி அனுப்பினார்கள்.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

hai thalika,
i'm arthi and i'm also frm kovai. where r u right now? i'm here in u.s.a

மேலும் சில பதிவுகள்