இந்த வாரம் நகைச்சுவை வாரம்

இந்த திரெட்டில் உங்களுக்கு தெரிந்த அறிந்த நகைச்சுவைகளை அள்ளி விடுங்க. முடிந்தளவு சொந்த சரக்காக இருக்கட்டும். மற்ற இணையங்களில் 'சுட்ட'வைகளாக இருக்க வேண்டாம். அதிக பட்சம் நூறு பதிவுகள் வரை இந்த திரெட்டை கொண்டு செல்வோம். இறுதியில் இந்த நகைச்சுவை பதிவுகளில் கலந்து கொள்ளாத நபர்கள் அல்லது அட்மின் சிறந்த ஜோக்ஸ் அளித்த நபரை தேர்ந்தெடுத்து 'கலைவாணர்' விருது வழங்கலாம். என்ன ரெடியா? அள்ளி விடுங்க ஜோக்ஸ்களை! வரும் சனிக் கிழமை வரை தொடரும்.....
குலசை சுல்தான்.

எங்கே நம் நகைச்சுவை ராணிகளை காணவில்லை? ஜோக்குகளை அள்ளி விடுவார்களே? இன்னும் சமையல் வேலை முடியவில்லை போலும். எல்லாம் புத்தகத்தில் படித்தவைகளாகவே ஞாபகத்தில் வருகிறதே. தளிகா ஆரம்பியுங்களேன்.

இப்போதைக்கு அட்வான்ஸாக 2 ஜோக்ஸ்:-

சிறுவன்: மாமா...! இன்றைக்கு எனக்கு பிறந்த நாள்! என்ன அன்பளிப்பு தரப்போறீங்க மாமா?

மாமா: ஒரு ஐந்து ரூபாய் நோட்டும், ஐந்து ரூபாய் காசும் வைத்திருக்கிறேன். உனக்கு எது வேண்டும் சொல்லுப்பா..!

சிறுவன்: ஐந்து ரூபாய் நோட்டுல அந்த ஐந்து ரூபாய் காசை வைத்து மடித்து தந்துடுங்க மாமா..!

மாமா: சமர்த்து பையன் :-/ ...(மாமா முணுமுணுக்கிறார்)
=====================
அம்மா(குழந்தையிடம்): லேகியம் கசப்பா இருக்கு, சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிச்சா எப்படி? அல்வா மாதிரி நெனச்சு சாப்பிடு..

மகள்: நீ அல்வாவே கொடுத்துடும்மா... லேகியம் மாதிரி நெனச்சு சாப்பிடுறேன்...!

தோழி 1: உன் மாமியார் மேல உனக்கு எவ்வளவு பாசம் இருந்தால் நீ அவங்களை திருவிழாக்கு எல்லாம் கூட்டிட்டு போவா

தோழி 2: அப்படியாவது கூட்டத்துல காணாமல் போய்டட்டுமேன்னு தான்.

நண்பன் 1: உன் வீட்டுல உன் பொண்டாட்டியும் அம்மாவும் சண்டை போட்டால் நீ என்ன பண்ணுவே.

நண்பன் 2: நான் வீட்டை விட்டு வெளியில் வந்துடுவேன்.

நண்பன் 1: ஏன் அப்படி செய்கிறாய்

நண்பன் 2: இல்லைன்னா என்னை 2 பேரும் துரத்திடுவாங்களே அதனால தான் நானே வந்துடுறேன்.

பக்கத்து வீட்டு அம்மா : இன்னைக்கு என் புருஷனுக்கு தெவசம் அதனால பலகாரம் இந்தாங்க

இந்த வீட்டு அம்மா: அப்படியா தாங்க என்று வாங்கும் போது இவங்க பையன் அம்மா நம்ம வீட்ல எப்பம்மா தெவசம் வரும் ஏண்டா அப்படி கேட்குறே அப்பதானே நாம பலகாரம் அவங்களுக்கு கொடுக்க முடியும்.

காதலன்: கண்ணே நீ அந்த நிலவை விட அழகா இருக்கியே

காதலி: பொய்தானே சொல்கிறாய்.

காதலன்: எப்படி கரெக்டா சொல்லிட்டியே.

நண்பர் 1: என் பொண்டாட்டி என் மேல ரெம்பவும் பாசமா இருப்பாள்

நண்பர் 2: பரவாயில்லை நீ ரெம்பவும் கொடுத்து வச்சவன்.

நண்பர் 1: போப்பா அது மாச சம்பளத்தை அவள் கைல கொடுக்குற வரை தான்.

மகன் : அம்மா நான் எப்பம்மா நம்ம அப்பாவை போல வருவேன்.

அம்மா: போடா ஒரு முட்டாளை வைத்துட்டு நான் கஷ்டபடுறது போதாதா

கணவர்மார்களிடம் ஒரு கேள்வி கேட்க்கப்படுகிறது உங்களுக்கு ஒரு சான்ஸ் கடவுள் தருகிறார்.

இந்த உலகத்தில் உங்களுக்கு கிடைத்த மனைவியையே மறு உலகிலும் நீங்கள் மனைவியாக அடைந்துக்கொள்ளலாம்.

அதற்க்கு பதில்

நண்பர் 1: போங்கப்பா இங்க உள்ள தொல்லை போதாதா அங்க போயாவது இவ தொல்லை இல்லாமல் இருக்கலாம்னு பார்த்தால் அதிலும் நிம்மதில்லாமல் செய்யப்பார்கறீங்களா.

நண்பர் 2: எனக்கு இங்க உள்ள மனைவியே வரனும்னு நினைப்பேன்.

நண்பர் 1: ஏன் அப்படி

நண்பர் 2 : பின்ன் என்னப்பா தெரியாத போயை விட தெரிந்த பிசாசே மேல்.

மேலும் சில பதிவுகள்