ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது

எல்லாரும் இன்னைக்கு செம டென்ஷன் ல இருக்கறதுனால..நம்ம கோவத்த எல்லாம் இந்த ஆண்கள் பக்கம் திருப்பிடுவோம்....ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது...ன்னு உங்க கருத்துகளை எல்லாம் வந்து கொட்டு கொட்டுன்னு கொட்டுங்க...கொட்டி வையுங்க...

பின் குறிப்பு:எங்க வீட்டு காரர் என்னையும் நம்பி ரெண்டு பேரை நைட் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருக்காரு...அவர் பேர காப்பாத்த வாவது எதாச்சும் செய்யணும்... நிறைய வேல இருக்கு...நான்னும் இந்த கேள்விக்கு அப்புறம் வந்து பதில் சொல்றேன்

ஓன்னு மட்டும் சொல்லி தொடங்கி வச்சுட்டு போறேன்..இது விவாதம் இல்ல...ஒரு ஆண் இதை படிக்க நேர்ந்தால் கொஞ்சமாவது பெண்கள் மனசு புரியிற அளவிற்கு இருந்தா நல்லா இருக்கும்...நம்ம பெண்களோட எதிர்பார்ப்புகள் என்னன்னும் நம்மளே தெரிஞ்சுக்கலாமே..அதான் மன நலம் பக்கம் இந்த இழையை தொடங்கிருக்கேன்...

ஒரு ஆண் மகன் என்பவன் எந்த சூழ்நிலையிலும் பொறுப்ப தட்டி கழிக்க கூடாது...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி ரொம்ப வில்லங்க புடுச்ச ஆளாவுல்ல இருக்கிங்க பதில் தரலாமா வேண்டானுல்ல யோசிக்க வேண்டியிருக்கு.... நீங்க கொட்ட சொல்லிருக்கிங்க நான் பாட்டுக்க கொட்டி தீர்த்துட்டு அவரு வந்து மண்டைய கொட்டி பொடைக்க வைச்சுற போறாரு....சும்மா சொன்னேன் பா தப்பா நினைக்காதிங்க யோசிச்சு திரும்ப வந்து அவர பத்தி நிறைய போட்டுவிடுறேன் வரட்டா....கண்டிப்பா வருவேன் கோமதி...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அய்யய்யோ...உங்க அவர பத்தில்லாம் வேண்டாங்க..பொதுவா சொன்ன போதும்...நல்லா இருக்குற குடும்பத்துல நான் எப்பவும் குழப்பம் பண்ண மாட்டேன்ப்பா... நேத்து என் ஸ்கூல் friend கூட பேசிட்டு இருந்தேன்..அபப அவ ரெம்ப பீல் பண்ணி சில விஷயங்கள் சொன்ன..அதான் எல்லாரும் என்ன நினகுரான்கன்னு தெரிஞ்சுக்கலாமே

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

கோமதி பயப்படாதிங்க நானும் பொதுவா தான் வந்து சொல்லுவேன் .... நானும் ரொம்ப சீரியஸான ஆளும் இல்ல பா காமெடி பீஸ் தான் ஓகே

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பொதுவாவே ஆண்கள் குறிப்பா கணவன் மார்கள் மனைவி எதிர்ப்பார்ப்பதை புரிஞ்சு உடனே செய்தால் நல்லாஇருக்கும்...உங்கலால் முடிந்த விஷயத்தை மட்டும் தான் பா....பெரும்பாலும் மனைவிங்க எதிர்பார்ப்பது பாசத்தை மட்டும் தான் ....தன்னுடைய தாய் வீட்டுல எந்த அளவு பாசத்தோட இருந்தாங்கலோ அந்த எதிர்பார்ப்பு கண்டிப்பா எல்லா பெண்கள் கிட்டையும் இருக்கும்

கணவன்மார்களே மனைவிமார்களை பாசத்துக்கு அடிமை ஆக்கி பாருங்க வாழ்க்கை பசுமையா இருக்கும்....பாசத்துக்கு அடிமையாகாத எந்த உயிரும் இந்த உலகத்துல இல்லை ....

அது மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோவிச்சுக்காதிங்க 2 பேரும் நல்லா விட்டு கொடுத்து வாழுங்க வாழ்க்கை சுகமா இருக்கும்,சுமையா தெரியாது.... சின்ன சின்ன விஷயங்கலுன்னா சமையல்ல உப்பு,காரம் கூடிருச்சுன்னா அத மனைவிட்ட பக்குவமா எடுத்து சொல்லுங்க சில பேர் இருக்காங்க காரம் கூடிருச்சுன்னா சாப்பிடாமா தட்டை தூக்கி எறிஞ்சுட்டு போயிருவாங்க எனக்கு அது பெரிய தவறா தோணுபா....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்னா பெண்களை மதிக்க தெரிஞ்சவங்களாகவும், அடுத்தவங்களோட ஞாயமான கருத்துக்களை வரவேற்கரவங்களாகவும் இருக்கனும். அப்படி ஒரு ஆண் மகனை உருவாக்குறது அம்மா அப்பா கையில் தான் இருக்குது. நல்ல பழக்கவழக்கங்களை சொல்லித்தருவதோடு மட்டுமல்லாமல் நம்ம கருத்தை அவர்களிடம் தினிக்காம்ல் அவங்களோட நல்ல கருத்துக்களுக்கும் முக்கயத்துவம் கொடுக்கனும். இது அவர்களுக்கு பின்னாளில் சுயமாக சிந்திக்கவும் (யாருடய பேச்சிற்கும் தலையாட்டாமல்) நல்லது கெட்டது ஆராயவும் உதவும்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

வனக்கம் ப. நல்ல டொபிc. கவிதா சொன்னது மிக மிக சரி. யெச் எல்லாரும் முக்கியம இ லிகெ பசம், அவங சொன்ன கருது. தன். ட்ய்பிங் டமில் தெரியல. சரிய.

anakkam pa. nalla topic. kavithaa sonnathu miga miga sari. yes ellaarum mukkiyama i like pasam, avanga sonna karuthu. than. typing tamil theriyala. sariya

கவிதா செல்லம் உன் செயலும் சிந்தனையும் அப்படியே என்னை போலவே இருக்குதடா........செல்லம் நீ என் இனமடா.......................ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இவளும் என்ன மாதிரியே பாதிச்சுருப்பா போல.......நீ ரொம்ப நல்லவ டீ.............ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

//எல்லாரும் இன்னைக்கு செம டென்ஷன் ல இருக்கறதுனால..நம்ம கோவத்த எல்லாம் இந்த ஆண்கள் பக்கம் திருப்பிடுவோம்...//

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் மடத்து ஆண்டிங்கிற கதையா, எதாவது நடந்தா ஆம்பிளைங்க தலையத்தான் உருட்டணுமா? பொம்பளைங்களால ஆம்பிளைங்க படுற பாட்டுக்கு நான் ஒரு உதாரணம் போதாதா? :-)

//குறிப்பு:எங்க வீட்டு காரர் என்னையும் நம்பி ரெண்டு பெற நைட் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருக்காரு.//

ஆம்பிளைங்க மேலே கோபத்தை திருப்பறது எல்லாம் இருக்கட்டும். மேலே உள்ள வரியில "பெற" ங்கிறதை "பேரை"ன்னு மாத்திட்டீங்கன்னா, நான் எதுவும் விபரீதமா கற்பனை பண்ணிக்க மாட்டேன். ;-)

மேலும் சில பதிவுகள்