விடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2

ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :)

அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த போலீசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் போலீசாருக்கு கிடைத்த செய்தியாகும். போலீசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு கார்பெண்டர், ஒரு டிரைவர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைக்கும் உத்தியோகத்தன் ஆக 4 பேர் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்றதும் தீயணைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

தோழியே ஜென்னி,, அங்கே இருந்தவர்கலில் தீயனைக்கும் வீரர் மட்டுமே ஆண் மற்றவர்கள் எல்லாம் பெண்கள் ...

விடை சரியா பா???

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

ஹாய் பர்வீன். ரொம்ப சரியாய் மாத்தி யோசிச்சுடீன்களே.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

ஈரேழு பதினாலு இறகு மயிலாட,
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட.
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

Ans பல்லாங்குழி.. Correct-a?

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

உங்க பதில் சரி.

இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்,
கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன்.
பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.
பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன்.
விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன். - அது என்ன?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்---வெற்றிலை,
பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன்------தேங்காய்,
விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன்---வாழைப்பழம்...

Ithu correct-a?

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மிக மிக சரியான விடை.

இப்போ இன்னமும் ஒன்று

தலை போனால் மறைக்கும்;
இடை போனால் குரைக்கும்;
கால் போனால் குதிக்கும்;
மூன்றும் ஒன்று சேர்ந்தால்
முந்தி ஓட்டம் பிடிக்கும். - அது என்ன?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

அதுவா வருது.......வேணாம் ஜென்னி எனக்கு இதுக்கும் பதில் தெரியும்.

Ans : குதிரை

இதெல்லாம் சின்ன வயசுல எங்க பக்கத்துக்கு வீட்டு பாட்டி சொல்லி இருக்காங்க. நிறைய கேட்ருக்கேன்.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

உங்க பக்கத்து வீட்டு பாட்டி மட்டும் கைல கிடச்சாங்க ஒன்னுமே பண்ண மாட்டேன்.

சரி இப்போ இதுக்கு பதில் சொல்லுங்க,

அஞ்சு விரல் அமர்ந்தாட;
பத்து விரல் பந்தாட;
சூரியனுடன் வாதாட;
எமனுடன் போராட - அது என்ன?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்