தேதி: March 28, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மாங்காய் - அரை கிலோ
மிளகாய் வற்றல் - 100 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
கடுகு - 25 கிராம்
பெருங்காயத் துண்டு - சிறு கோலி குண்டு அளவு
உப்பு - 2 மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 200 மில்லி
மிளகாய் வற்றலை காம்பை கிள்ளி விட்டு எடுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தை துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகாய் வற்றல், வெந்தயம், கடுகு, உப்பு, பெருங்காயத் துண்டு ஆகியவற்றை போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

மாங்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்து விட்டு ஒரு மாங்காயை நான்கு துண்டுகளாக போடவும். அதைப் போல எல்லா மாங்காவையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு ப்ளாஸ்டிக் வாளி அல்லது கண்ணாடி பாத்திரத்தில் நறுக்கின மாங்காய் துண்டுகளை போட்டு அதில் நுணுக்கி எடுத்து வைத்திருக்கும் பொடியை போடவும்.

பின்னர் அதில் 200 மில்லி அளவு நல்லெண்ணெயை பரவலாக ஊற்றி விடவும். நல்லெண்ணெய் ஊற்றி செய்வதால் அதிக நாட்கள் மாங்காய் கெடாமல் இருக்கும்.

பிறகு பொடி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்ததும், வாளியை கையில் எடுத்துக் கொண்டு எல்லாம் ஒன்றாக சேரும்படி அடியிலிருந்து குலுக்கி விடவும். கரண்டியை வைத்து மாங்காவை கிளறக் கூடாது.

அந்த வாளியை நன்கு இறுக்கமான ஒரு மூடியை வைத்து மூடி விடவும். தண்ணீர் படாமல் வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு மூன்று முறை எடுத்து குலுக்கி விடவேண்டும். 7 நாட்கள் கழித்து உபயோகப்படுத்தலாம். ஊற ஊற தான் வெந்தய மாங்காய் ருசியாக இருக்கும்.

காரசாரமான வெந்தய மாங்காய் ரெடி. இதை தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். தண்ணீர் படாமல் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை வீணாகாமல் இருக்கும் வெயிலில் வைக்க தேவையில்லை. இதே போல் வடு மாங்காவிலும் செய்யலாம். மசாலா பொருட்கள் எல்லாம் அதே தான் ஆனால் நல்லெண்ணெய்க்கு பதிலாக விளக்கெண்ணெய் ஊற்றி செய்யவும். மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நாட்கள் ஊற வைக்கவும்.

அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.

Comments
sumathi madam
சூப்பர் சூப்பர் நா ஊருது:)
என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)
நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!
வெந்தய மாங்காய்
சுமதி மேடம், சீசனுக்கேற்ற சுவையான குறிப்பு தந்திருக்கீங்க. நார்மல் ஊறுகாயிலிருந்து புதுமையாகவும் உள்ளது. நிச்சயம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வாவ்..
சீசனுக்கேற்ற ரெசிபி.. பார்க்கும் போதே நாவூருகிறது்.. :) செய்ய முயற்சிக்கிறேன்.. நன்றி.. :)
சுமதி மேம்
சீசனுக்கு முன்னே அருமையான குறிப்பு. வாழ்த்துகள்.
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
வனிதா
சுமதி அம்மா, ரொம்ப எளிமையாகவும் படங்களுடனும் இருக்க உங்க வெந்தய மாங்காய் நல்லா ருசியா இருக்கும்னு பார்க்கும்போதே தெரயுதுங்க அம்மா. செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் அம்மா.
அன்புடன்,
வனிதா
venthaya mangai
venthayam kaduku milakai kayam ivatrai varukka vendama appaadiye podanuma enpathai sollavum
Dhatchinamoorthy.G
வெந்தய மாங்காய்
வெந்தய மாங்காய் அப்படியே எனக்கே எனக்கு :)
சுமதி மேடம் அருமையா இருக்குங்க...வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
mango pickle
Nice.pls continue.
வெந்தய மாங்காய்
வாவ்! சூப்பர்..அருமையான ரெசிப்பி இனி சாப்பிடறவரைக்கும் என் நாக்கு விடாது...மிக்க நன்றி;)
Don't Worry Be Happy.
sumathi madam, enaku oru
sumathi madam, enaku oru doupt, oil ah heat panni dhana oothanum, appadiye
ootralama, kettu poividatha. pls sollungal.
sumathi madam, enaku oru
sumathi madam, enaku oru doupt, oil ah heat panni dhana oothanum, appadiye
ootralama, kettu poividatha. pls sollungal.
வெந்தய மாங்காய்
அன்பு சுமதி
சீசனுக்கேற்ற குறிப்பு, நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சீதாலஷ்மி
சுமதி மேம்
மாங்காய் எனக்கு மிகவும் பிடித்தமான காய்.எப்படி கொடுத்தாலும் சாப்பிடுவேன். மிகவும் சுலபமாக இருக்கிறது.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
Expectation lead to Disappointment
வெந்தய மாங்காய்
சுமதி,
உங்க குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.மாங்காயும் வாங்கியாச்சு.விரைவில் செய்துடுவேன். ’உங்களுக்கு ரொம்ப அழகான முகம்’.முன்பே சொல்லணும்னு நினச்சேன்.இப்போ சொல்லிட்டேன். :-)