சத்தான உணவு உதவுங்கள் தோழிகளே

வணக்கம் தோழிகளே.என் மகனுக்கு வயது 21/2 ஆகிறது.அவன் மெலிந்து இருப்பான்.அவனுக்கு உடம்பு சரியில்லாத போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என doctor சொல்கிறார்கள். அவன் sweets chocolates biscuits vegetables fruits spicy என எதையும் சாப்பிட மாட்டென்றான். பேச்சு கூட அவ்வளவா வரலை. கீரை கடைந்தால் நெய் விட்டு தந்தால் சாப்பிடுவான்.2 மாதம் முன்பு வரை daily morning orange juice குடித்தான். ஆனால் இப்பொ fruits juice or cut பண்ணி தந்தால் சாப்பிட மாட்டென்றான்.chicken,mutton,fish fry மென்று விரும்பி சாப்பிடுகிறான். ஆனால் சாப்பாடு breakfast அப்படியெ முழங்கி விடுகிறான்.அவன் சத்தான உணவு தர உதவுங்கள்.அவன் food schedule:
morn 6.30 pediasure milk(150ml} sipper bottle,
9.00 breakfast(idly egg dosa, no chutney, pongal idyappam)
1.00 rice with daal,or keerai (vegetables தந்தால் vomit எடுப்பான்)
5.00 complan milk
8.30 rice
10.30 pediasure milk இரவில் பால் கேட்கிறான் இதை எப்படி நிறுத்துவது. பால் தந்தால் தான் தூங்குவான்.உங்கள் குழந்தைகளின் உணவு பட்டியல் இருந்தால் தரவும். சத்துள்ள நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை சொல்லவும். pls help
அவன் உடம்பு கூட வழி சொல்லவும்.pls

தோழி ஜெயா,மதியம் பருப்பு சாதத்துடன் கேரட்,பீன்ஸ்,உருளை போன்ற காய்களை மிகவும் பொடியாக போட்டு குக்கரில் வேக வைத்து தரவும்.காய் இருப்பதே தெரியாது.குழந்தைகள் ஒரே சுவையில் அதிக நாள் விருப்பம் கொள்ளாது.எனவே மாற்றி,மாற்றி முயற்சி செய்யவும்.வெஜிடபிள் சூப் கொடுக்கலாம்.பழ மில்க் ஷேக் தரலாம்.இன்னும் நினைவு வந்தால் சொல்கிறேன்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

சத்துமாவு குறிப்பு அருசுவையில் நிறைய இருக்கு,அது குடுங்க.ப்லேவர்ட் யோகர்ட்,சீஸ்,நட்ஸ்,பொரிகடலை குடுங்க.அவித்த முட்டை கொடுக்கலாம்.சாப்பாடு நீங்க சாப்பிடும் போது பக்கத்தில் உட்காரவைத்து ஒரு ப்ளேட்டில் போட்டு குடுங்க.முதலில் வேஸ்ட் பண்ணினாலும்,மெதுவா பழகிடுவாங்க.நல்லா விளையாட விடுங்க.உங்க உணவு பட்டியலில் ரொம்ப இடைவெளி இருக்கிற் மாதிரி இருக்கு4மணிநேர இடைவெளியை2 மணிநேரமாக்குங்க,காலை 11 மணிக்கு ஜூஸ்,அல்லது சூப்,மதியம்3 மணிக்கு சத்துமாவு கஞ்சி,ஓட்ஸ்,அல்லது எதாவது நட்ஸ்உருண்டை குடுங்க.ரொம்ப கம்பெல் பண்ணினாலும் பிள்ளைகள் சாப்பிடமாட்டாங்க,அவங்க போக்கில் விட்டு பிடிங்க.
http://www.arusuvai.com/tamil/node/8471
http://www.arusuvai.com/tamil/node/13806சத்து மாவு குறிப்புகள்.
யாரும் சமைக்கலாம்,கூட்டாஞ்சோறு,க்ளிக் பண்ணுங்க அங்கு வலது பக்கம் ஆரோக்கிய சமையல் தலைப்பில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் அதில் பாருங்க,நிறைய ஐடியாஸ் கிடைக்கும்.

ஜெயா
REEM சொல்றது ரொம்ப சரி.
உங்க மகன நல்லா விளையாடவிடுங்க.
பசி நல்லா எடுக்கும்
காலை உணவு மதிய உணவுக்கு இடையில் ஏதாவுது ஜூஸ் கொடுங்க
சாயங்காலம் ஏதாவுது food கொடுங்க சத்து மாவு, புட்டு, பயறு வகைகள், கேக் etc
டெய்லி different'ah ஏதாவுது try பண்ணி கொடுங்க. கண்டிப்பா அவனுக்கு ஏதாவுது பிடிக்கும்

என் பொண்ணுக்கு 2 வயது 2 மாதங்கள் ஆகுது. சில நேரங்களில் அவ சாப்பிட மறுத்தால் அவளுக்கு புடிச்ச கேம், வீடியோ, சாங், பேபி மூவி போட்டு அவ தன்னை மறந்து பார்க்கும்போது ஊட்டி விட்டுடுவேன். சில நேரம் வீட்டுக்கு வெளியே கூட்டிட்டு போய் ஊட்டுவேன். நீங்களும் இந்த மாதிரி முயற்சித்து பாருங்கள்.

this is my baby food schedule.
7 am - drink milk (am giving lactogen)
10 am - carrot milk, mixed fruit juice (grapes, apple, peer, papaya, orange, carrot) or one bread
1.30 - rice with any mixed vegetable soup or chicken soup, fish
3 pm - pediasure 250 ml
5 pm - sathumaavu kanji or boiled sprouts
9.30 - rice with soup
10.30 - lactogen milk 250 ml
midnight la 1 or 2 time mulichu paal ketpaa...

காரட் நல்ல வேக வைத்து மிக்சி ல அடிச்சு பால், சிறிது சரிக்கரை கலந்து குடுப்பேன் or முட்டைய நல்ல அடிச்சி சிறிது சர்க்கரை சேர்த்து பிரட் மேல ஊத்தி டோஸ்ட் பண்ணி குடுப்பேன்.

நான் bintan ல இருக்கேன், சத்துமாவுகான எல்லா பொருட்களும் எனக்கு கிடைகாது அதனால் Aachi Nutrimalt முஸ்தபா ல வாங்கினது everyday milk powder சேர்த்து கஞ்சி செய்து குடுப்பேன். வேக வாய்த்த பயறு (பாசி பயறு, கொண்டக்கடலை, காராமணி பயறு) குடுப்பேன்.
ஆனால் அறுசுவையில் குடுத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மிகவும் நல்லது, நீங்கள் அதையே செய்து குடுத்து பாருங்கள்.

சிக்கன் சூப் ல சிக்கன், உருளை கிழங்கு, காரட் சேர்த்து செய்து குடுக்கலாம்.

பப்பாளி துண்டுகள் செய்து போர்க் வச்சு சாப்பிட குடுங்கள், சப்போட்டா பழமும் ஊட்டி பாருங்கள். என் பொண்ணுக்கு ஸ்பூன் குடுத்தா சாப்பிட மாடா, போர்க் வச்சி குடுத்தால் அவளே ஆசையா எடுத்து சாபிடுவா... தினமும் வாழப்பழம் குடுங்கள்.

தினமும் ஒரே மாதிரி குடுக்காமல் வித விதமா செய்து குடுங்கள் மற்றும் உங்கள் குழந்தை வாந்தி எடுகரான்னால் வாய்முழுக்க குடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுங்கள்.

உங்க குழந்தைக்கு வயிறு மந்தமா இருந்தால் சரியா சாப்பிட மாட்டான், தினமும் காலை குளித்து முடித்ததும் grip water (woodwards or bonnisan) குடுங்க. வாரத்திற்கு இரு முறை சுட்ட சுக்கு, பெருங்காயம் இழைத்து குடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை ஜாதிக்காய் இழைத்து குடுங்கள் ஜாதிக்காய் உடம்பு போடும் நு சொல்லுவாங்க.

அதுமட்டுமுலாமல் குழந்தையை நன்றாக ஓடி ஆடி விளையாட விடுங்கள், மாலை பொழுதில் வெளியே வாக்கிங் கூட்டிட்டு போங்கள்.

எனக்கு என்ன பிரச்சினைனா என் பொண்ணு சாம்பார் தவிர நம்ம இந்தியன் கொழம்பு எதுவும் சாப்பிட மட்டேன்கரா... chinese or indonesian style soup தான் சாப்படரா... நானும் ஏதோ சாபிட்டால் சரின்னு விட்டுட்டேன்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

தோழிகளே அவனை தினமும் மாலையில் விளையாட அழைத்து செல்வென். bicycle 2 to 3hours ஒட்டுவான். அவன் பிரச்சினைனா nuts,fruits,biscuits sprouts கடித்து சாப்பிடமாட்டென்றான்.All fruits juice with milk shake எல்லாம் ட்ரை பண்ணிட்டென். சாப்பிடுவது இல்லை.தினமும் அருசுவையில் பார்த்து செய்து தருவென். எல்லா முயற்சி எடுத்து விட்டென். அதனால் தான் உங்களிடம் கேட்கிறென்.உடம்பு அப்படியெ இருக்கு பா.3 மணிக்கு தூங்கினால் 51/2 to 6 மணிக்கு எழுவான்.Last time india போன போது பூச்சி மருந்து கூட தந்துவிட்டென்.

jaya

pediasure 90daysக்கு மேல் குடுக்கூடாது. underweight or any medical opservation இருந்தால் மட்டும் கொடுக்கலாம்.ஆனால் கொடுக்கும் பொது அதில் உள்ளது பொல தான் கொடுக்க வேண்டும்.(that is 225ml--5scoop 3or4 times a day).pediasure is not a milk its a foodsupliment.எனக்கு pediasure company docter (abbott)சொன்னது.

என் மகனுக்கு 3-1/2வயது ஆகிறது.அவனுக்கு இன்னும்pediasure தான் கொடுக்கிறேன்.இது நல்லதா.

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

your son should weight between 13 and 24.if he under weight u can give him.but better is homemade foods.வீட்டில் சமைத்து எதுனாலும் கொடுங்க.but don't compare with adults quantity.குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும் குண்டாக இருக்கவெண்டிய அவசியம் இல்லை.means not to be very much regular to the hospital.

its really good to read. im also having 9 month baby boy.rompa kasdam sappadu kodukka.avanuku morning nan milk,then cerelac after nestum(sometime apple juice),then evening cerelac,night cows milk.is it right food for my baby? pls give some ideas....

ALL IS WELL

மேலும் சில பதிவுகள்