பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?

அறுசுவை நட்சத்திரங்களுக்கு அன்பு வணக்கமுங்கோ:)

இந்த பட்டிமன்ற தலைப்பு நம்ம ரம்யாவோடதுதாங்க

( தலைப்புகள்ல லேட்டஸ்டா பதிவானதில இருந்து தலைப்பைத்தேடி

பின்னோட்டம் ஓடலாமின்னு நினைச்சு கடைசில இருந்து

பார்த்தா ,பார்த்தவுடனே கடைசியா இருந்த இந்த முதல் தலைப்பு நச்சுன்னு

ஒட்டிக்கிச்சு…எடுத்துட்டேன்..நன்றி ரம்யா..:)

“பள்ளியிலோ , வீட்டிலோ பிள்ளைகளை அடித்தும் , அதட்டியும் கண்டிப்பது நல்லதா? இல்லை பேசி திருத்த முயல்வது சிறந்ததா ?"

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அது நல்லவனாவதும்,கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே”

"மாதா,பிதா ,குரு தெய்வம்"..
இப்படியெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லப்படுகிறது..

அவ்வளவு முதலிடப்படுத்தப்படும் இவர்களில்

அன்னையோ/தந்தையோ/ஆசிரியரோ / அனைவருமோ சேர்ந்து

கடுமை ,கண்டிப்பு கலந்து பிள்ளைகளை வளர்ப்பது சரின்னு நினைக்கிறோமா?

அல்லது

அன்பாக பேசி புரிய வைத்தாலே கடுமை,கண்டிப்பு, போன்றவை

அவசியப்படாதுன்னு நினைக்கிறோமா?

ஒரு கருத்த யுத்தத்துக்கு தயாராகலாமே..

இன்றைய பிள்ளைகள்தானே நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்…..

அந்த நட்சத்திரங்கள் பிரகாசமா ஜொலிக்க
நாம என்ன செய்யலாம்…?

எது சரியான வளர்ப்பா இருக்கமுடியும்? என்ற கேள்விக்கெல்லாம்

நீங்க சரின்னு எதை /என்ன நினைக்கிறீங்களோ அத வந்து வாதங்களாகவும்,பிரதிவாதங்களாகவும் இங்க சொல்லுங்கோ….:)

குச்சிஐஸ்,இலந்தைவடை,பஞ்சுமிட்டாய்,தேன்மிட்டாய்,ஜிகர்தண்டா,ஐஸ்க்ரீம்,சாக்லேட் எல்லாம் இருக்கு..

அவங்கவங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கிட்டு நம்ம நண்டு,சிண்டு மற்றும் வளரும் இளம் பிள்ளைகளுக்காக ஆரோக்கியமான ,அவசியமான வாதங்கள வைங்க..
ஆவலுடன் காத்திருக்கேன்…

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொருந்தும் பெயரிட்டு அழைப்பது கூடாது.

நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

அன்புடன்
இளவரசி

மக்களே,தலைப்பை ஒரு நாள் முன்னாடியே போட்டுட்டேன்...
எந்த அணிப்பக்கம் பேசலாம்..என்ன கருத்துக்கள் முன் வைக்கலாமின்னு ஒரு நாள் அவகாசம் எடுத்து யோசிச்சுட்டு ,நாளையிலிருந்து வாதங்களை அள்ளி விடுங்க..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இனிய காலை வணக்கம்!

மிகவும் அருமையான தலைப்பு. இந்தகால கட்டத்திற்கு தேவையான தலைப்பு. அன்பு காட்டி பேசி புரிய வைப்பது என்பது முடியாத காரியம். நம்முடைய காலத்தில் எல்லாம் நம் ஆசிரியர்கள் பெற்றோர் எல்லாம் கண்டித்து அடித்து தான் வளர்த்தார்கள். அப்போது எல்லாம் தற்கொலை என்பதே கிடையாது. கண்டித்து வளர்த்தால் தான் பிள்ளைகள் நேர் வழியில் சென்றனர். பெற்றோர் மேல் பயம் இருந்தது. தோழிகள் எல்லாருமே இதை ஒத்துக்கொள்ள வேண்டும் நமக்கு நம் பெற்றோர் இன்றும் பயம் இருக்கிறது இல்லையா? இன்று செய்திதாள் செய்திகளை பார்த்தால் மாணவர் தற்கொலை என்று அடிக்கடி வருகிறது

காரணம்?
அளவுக்கு அதிகமாக அன்பு கொட்டி வளர்த்து அவர்கள் தப்பு செய்து கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்காமல் பின்பு அவர்கள் செய்யும் தவறுகள் அளவுக்கு மீறி போகவே பெற்றோர் கண்டிக்க ஆரம்பிக்கவே, தீடீரென்று அன்பு காட்டிய பெற்றோர் கண்டிக்க ஆரம்பித்தவுடன் அதை தாங்கிக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து விடுகின்றனர்.

அதே போல் அவர்கள் கேட்ட உடன் எதையும் வாங்கி தர கூடாது. அவர்களுக்கு அதன் அருமை தெரியாது. கேட்ட உடன் கிடைத்து விடுகிறது என்ற எண்ணம் வந்துவிடும். பின்னாளில் நமக்கு கஷ்டம் ஏற்படும்போது சூழ்நிலையும் வரும் அப்போது அவர்கள் கேட்கும் போது வாங்கி தர முடியாது அப்போது அவர்களால் தாங்கி கொள்ள முடியாது தவறான முடிவுகள் பல எடுக்கின்றனர் திருடுகிறார்கள், பணத்துக்காக மற்றவர்களை கடத்துகிறார்கள், கொலை செய்கிறார்கள் என பட்டியல் நீள்கிறது. அதற்காக எந்நேரமும் கண்டிக்கா வேண்டும் என்று கூறவில்லை.

பிறகு வந்து வாதங்களை பதிவு செய்கிறேன்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :) பட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அருமையான தலைப்பை தந்த ரம்யாக்கு நன்றி. :) இன்றைய காலத்தில் யோசிக்க வேண்டிய உண்மையான தலைப்பு.

நம்ம ஓட்டு “அன்பாக சொல்வதே”

நடுவரே... இப்படி சொல்றேன்னு நான் ரொம்ப அன்பா தான் சொல்வேன், கண்டிக்கவே மாட்டேன்னு நினைச்சு போடாதீங்க... கடுமையான கோபக்காறியாக்கும் ;) ஆனா என் கோவம் என் பிள்லைகளிடம் எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வந்திருக்குன்னு புரிஞ்சவ நான்... அதனால் எது அவர்களிடம் சரி வரும் என்பதையும் நன்றாக அறிவேன். ;)

அன்பால் சாதிக்க முடியாதது இல்லை நடுவரே.

என் மகனை நான் திட்டினாலோ அடித்தாலோ உடனே வேறு யாரும் பார்த்துவிட்டார்களா என சுற்றி பார்ப்பான்... யாரும் பார்த்திருந்தால் உடனே முகம் வாடிவிடும்... “ஏய்... “ என் ஒரு விரல் நீட்டி என்னை மிரட்டுவான்... நான் அடித்திருந்தால் எத்தனை அடி வைத்தேனோ அத்தனையும் இரண்டு மூன்று மடங்காக எனக்கு திரும்ப வரும். இது தான் இந்த கால குழந்தைகள் மனநிலை. அவர்கள் நாம் அதட்டினாலோ, அடித்தாலோ ஷேமாக ஃபீல் பண்றாங்க. அன்று கண்டிப்பு இருந்த போது தற்கொலை இல்லை, இன்று இருக்கிறது... உண்மை காரணம் இன்றைய குழந்தை நம்மை போல் எல்லாத்தையும் வாங்கிட்டு இருக்குறதில்லை... அவர்கள் பிறக்கும் போதே நம்மை விட பல படிகள் புத்திசாலிதனம் உள்ளவர்களாகவே பிறக்கிறார்கள். அவர்கள் பழகும் விதம் நம்மை போல் இல்லை... மாறுபடுகிறது. மிகுந்த சுய மறியாதை, கவுரவம் எல்லாம் பார்க்கும் பிஞ்சுகள் இன்று அதிகம். அது நாம அன்பா நடத்துறதால வருவதில்லை, இயற்கையாகவே இன்றைய குழந்தைகள் அப்படி தான் இருக்காங்க.

என் மகள் ஒரு படி மேல்... அடுத்த நிமிஷம் என்னிடம் இருந்து எழுந்து போயிடுவா... என் கையால சாப்பிட கூட மாட்டா. அவளிடம் யார் அன்பாக பேசுறாங்களோ அவங்க ஊட்டினா தான் சாப்பாடு கூட உள்ள இறங்கும்.

இருவரும் கோரஸாக சொல்வார்கள்... “அம்மா பேட் கெர்ள்”!!!

ஆசிரியர் எழுதி கொடுத்தால் அதை கண்டு கண்டிப்பாக தந்தை நடந்ததால் ஆசிரியரை கொன்ற மானவன் பற்றி அறியவில்லை தமிழகம்???!!!

ஊருக்கு கிளம்பும் அவசரம் நடுவரே... முடிஞ்ச போது வர பார்க்கிறேன். உங்க பட்டியில் பதிவிடாம போக மனமின்றி வந்தேன் கிளம்பும் நேரத்தில். கோவிக்காதீங்க சின்ன பதிவென்று :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க முதல் ஆளா வந்து பதிவு போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்..:)

// நம்முடைய காலத்தில் எல்லாம் நம் ஆசிரியர்கள் பெற்றோர் எல்லாம் கண்டித்து அடித்து தான் வளர்த்தார்கள்.
அப்போது எல்லாம் தற்கொலை என்பதே கிடையாது. கண்டித்து வளர்த்தால் தான் பிள்ளைகள் நேர் வழியில் சென்றனர் //

நம்மள எல்லாம் கண்டிச்சு வளர்த்ததால ,நாம எல்லாம் நல்லாத்தானே இருக்கோம்…என்ன கெட்டுபோச்சு..

கண்டிச்சு வளர்க்கறதுதான் நேர்வழின்னு அழகா சொல்லிட்டாங்க..எதிரணியில இருந்து வந்து சுருக்கு வழி,மாற்று வழி என்னன்னு சொல்லுங்கோ

// தீடீரென்று அன்பு காட்டிய பெற்றோர் கண்டிக்க ஆரம்பித்தவுடன் அதை தாங்கிக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து விடுகின்றனர்.//

அன்பு கோழைத்தனத்தை வளர்க்குதுன்னு சொல்றாங்க…எல்லாமே கரெக்ட் பாயிண்டா அடிக்கிறாங்க..

//கேட்ட உடன் எதையும் வாங்கி தர கூடாது//

ஆமாங்க சில வேளை ரொம்ப கண்டிப்பா இருந்தா,அப்பா இந்த அம்மாவ

கடையில கொடுத்துட்டு திட்டாத நல்ல அம்மாவா வாங்கி கொடுங்கன்னு கூட

பிள்ளைகள் கேட்குதாம்…..:(

அது யாரு வீட்டிலன்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது ..அப்புறம் நான்

கர்சீப் வாங்க கேடைக்கு போக வேண்டி இருக்கும்..

அப்படிபட்ட கேள்விகளால் அப்பாக்கள குஷியாக விடலாமான்னு எதிரணிதான்

வந்து சொல்லணும்..:)

இந்தாங்கோ குச்சி ஐஸ்...:)தொடர்ந்து வந்து பாயிண்ட்ஸ் அள்ளி விடுங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவருக்கு, இனிய வந்தனங்கள், இன்றைய காலத்துக்குப்பொருத்தமான தலைப்பு. ஆனா எதை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் பிரசினை, உண்மையா என் நிலையில் இருந்து வாதிடுவதா இல்லை நான் எதிர்பார்க்கும் நிலையில் இருந்து வாதிடுவதா? என யோசித்து விட்டு வந்து பதிவிடுகிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வாங்க அன்பணிக்கு ஆள் வந்தாச்சா..! வாழ்த்துக்கள்..!

//என் கோவம் என் பிள்ளைகளிடம் எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வந்திருக்குன்னு புரிஞ்சவ நான்...//

புரியவைக்கிறதுக்கு அவங்கள மிஞ்ச ஆளே இல்லங்க

//அன்பால் சாதிக்க முடியாதது இல்லை நடுவரே//

அன்பை அடிச்சுக்க ஆளே இல்லன்னு அழகா சொல்லிட்டீங்க

//உண்மை காரணம் இன்றைய குழந்தை நம்மை போல் எல்லாத்தையும் வாங்கிட்டு இருக்குறதில்லை... அவர்கள் பிறக்கும் போதே நம்மை விட பல படிகள் புத்திசாலிதனம் உள்ளவர்களாகவே பிறக்கிறார்கள்.//

ஆமாங்க வட்டியோட திருப்பி கொடுக்கிறதும்..என்ன இதுகூட தெரியலயே உங்களுக்குன்னு சொல்றதும் அலம்பல் தாங்கலதான்..:(

//இருவரும் கோரஸாக சொல்வார்கள்... “அம்மா பேட் கெர்ள்”!!!//

சேம் பிஞ்ச்..

//ஊருக்கு கிளம்பும் அவசரம் நடுவரே... முடிஞ்ச போது வர பார்க்கிறேன். உங்க பட்டியில் பதிவிடாம போக மனமின்றி வந்தேன் கிளம்பும் நேரத்தில். கோவிக்காதீங்க சின்ன பதிவென்று :)//

அடடா அடிக்கடி பதிவு போட முடியாதா..பரவாயில்லங்க முடியறப்ப வந்து போடுங்கோ….சின்ன பதிவா இருந்தாலும் கூட கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதில்ல..
சூப்பர் பாயிண்ட்ஸ் வச்சீங்க ..இந்தாங்கோ ஜிகர்தண்டா..

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வாங்க....வாங்க..!

நல்லா யோசிச்சுட்டு நச்சுன்னு வந்து பாயிண்ட்ஸ் வைங்கோ...

காத்திருப்பேன்:)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள். கண்டிப்பான வணக்கங்கள் னு சொல்லிப் பாருங்க... நல்லா இருக்கா? இல்லேல்ல :). புரிஞ்சிடுச்சா... அதே தான் குழந்தைகளை அன்பாக பேசித்தான் நல்வழிப் படுத்த முடியும் என்பதே என் வாதம். பிடிவாதம் இல்லை நடுவரே அன்பான வாதம் :). இந்தவாட்டியும் கூட்டணி அமைச்சுட்டோம்ல. ஜெயிக்குமா ஊத்திக்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கோணும் :)

நாம் வளர்ந்த காலத்தில் பெற்றோர் கண்டிப்பாக இருந்தாங்க. நாமும் பயந்து நடந்தோம். ஆனால் மனசுல வருந்தினோம் அப்படித்தானே. எப்படா பெரிய ஆளா வருவோம் இவங்க திட்டுல இருந்து விடுதலை கிடைக்கும்னு நினைச்சோம் தானே. அன்றைய சூழலில் நமக்கு கிடைத்த எக்ஸ்போஷர் குறைவு. அதனால் இதைத் தாண்டி நமது சிந்தனைகள் போகவில்லை.

ஆனால் இன்று குழந்தைகளுக்கு கிடைக்கும் எக்ஸ்போஷர் மிக அதிகம். நாம் திட்டினால் கண்டிப்பாக நடந்து கொண்டால் அவர்களது எண்ணம் மிக அதிகமாக வேலை செய்யும். நம்மை எப்படி நோக வைக்கலாம் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். நமது காலத்தில் பயன் கொடுத்த கண்டிப்பான வளர்ப்பு முறை இன்றைய கால கட்டத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

இன்றைய குழந்தைகளிடம் அப்படிச் செய்யாதே அப்படீன்னு கண்டிப்பான குரலில் மட்டும் சொன்னால் நிச்சயம் கேட்க மாட்டார்கள். மாறாக அன்பாக கோபப் படாமல் நிதானமான குரலில் அந்த செயலின் விளைவுகளை எடுத்துச் சொல்லி அதனால் அடுத்த முறை அதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் கேட்டுக் கொள்வார்கள். ஒருவேளை மீண்டும் அதே தவறை செய்தால் கூட "அன்னிக்கே நான் சொன்னேனே இப்ப பார் நீ மீண்டும் அதையே செய்ததால் என்னாச்சுன்னு" என்று அந்த விளைவை சொன்னால் அவர்கள் மனதில் சிறிய குற்ற உணர்ச்சி தோன்றி நம்மிடம் மன்னிப்பு கேட்பதோடு மீண்டும் அதே தவறை செய்யாமல் தவிர்ப்பார்கள். இதையே நாம் கண்டிப்பாக இருக்கிறேன் என்று கடுமையாக நடந்து கொண்டால் நம் மீது வெறுப்பு ஏற்படுமே தவிர அவர்கள் செய்த செயலால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். மீண்டும் அதே தவறை செய்வார்கள் நம்மிடம் இருந்து மறைக்கவும் முயல்வார்கள். இதுதான் இன்றைய குழந்தைகள்.

குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்கும் பெற்றோரிடம் குழந்தைகள் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். கொஞ்சம் விலகியே இருப்பார்கள். ஆனால் அன்பாக தோழமை உணர்வுடன் அணுகும் பெற்றோரிடம் குழந்தைகள் எதையும் மனம் திறந்து வெளிப்படையாக பேசுவார்கள். தன்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக பிறரை நாடாமல் பெற்றோரை அணுகுவார்கள். இதுதான் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு முறையாக இருக்கும்.

என் அண்ணன் குழந்தை. அவள் மிகச்சிறியவளாக இருக்கும் போது காம்பவுண்ட் கேட்டைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அது முழுவதும் தூசியாக இருந்ததால் அவளின் கையை எடுத்து எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டிருந்தாள். நான் குரலை சற்று உயர்த்தி செய்யாதே என்றேன். அவ்வளவுதான்... திரும்பி நின்று "ஏய்..." அப்படீன்னு ஒரு கத்து கத்தினாள். அப்போதுதான் எனக்கு என் தவறு புரிந்தது. உடனே அவளிடம் "செல்லம் இது ரொம்ப தூசியா இருக்குல்ல. இதில் கை வச்சுட்டு அப்புறமா அதே கையை வாயில் வைத்தால் அழுக்கெல்லாம் வயிற்றுக்குள் போயிடும். அப்புறம் குட்டிம்மாக்கு உடம்புக்கு முடியாம போயிடும்ல. அதான் அத்தை அதை தொடாதேன்னு சொன்னேன். இனிமே குட்டிம்மா தொட மாட்டீங்க இல்ல" அப்படீன்னு நிதானமா சொன்ன பின் சமத்தா கேட்டுக்கிட்டா. கண்டிப்பெல்லாம் குழந்தைகளிடம் அதுவும் இன்றைய குழந்தைகளிடம் எடுபடவே செய்யாது.

பள்ளியில் கூட அன்பாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்டு நடப்பார்கள். இதே கண்டிப்பான ஆசிரியர் என்றால் அவர் முன் மட்டும் சமத்தாக இருப்பது போல் நடிப்பார்கள். நம் குழந்தைகள் நல்லவனாக நடிக்க வேண்டுமா அல்லது நல்லவனாக நடக்க வேண்டுமா?

மீண்டும் வருவேன் நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு நடுவருக்கு இனிய வணக்கங்கள். பட்டி ஜோரா ஆரம்பம் ஆயிடுச்சு!!! வாழ்த்துக்கள். சூப்பரான தலைப்பை தந்த ரம்யாக்கு பாரட்டுக்கள். \\ அன்பாக பேசி புரிய வைத்தலே \\ அணிக்கு வாதாட வந்துருக்கேன்.

அ‌ன்புக்கு அடிப‌ணியாதவர் இந்த உலகில் யாரவது உண்டா நடுவரே. அப்படியிருக்க குழந்தைகளை கண்டித்தால் எப்படி நடுவரே அவங்க நம்ம பேச்சைக் கேட்பாங்க??? குழந்தைகள் இறைவன் கொடுத்த வரம். அவர்கள் சரி தவறு எல்லாம் நம்ம கிட்ட இருந்து தான் கத்துகிறாங்க. குழந்தைகள் முதல் தடவை தவறு செய்யும் போதே அன்பால சொல்லி புரிய வைக்கனும். உடனே கேட்க மாட்டாங்க, திரும்பவும் அதே தப்பை செய்வாங்க தான் இல்லனு சொல்லல ஆனா நம்ம டென்சன் ஆகி கத்தினா நமக்கு தான் BP எகுரும். அதே சமயம் அவங்களை கூப்பிட்டு நம்ம மடியில் உட்கார வைத்து அன்போட சொல்லி பாருங்க அவங்க மனசுல போய் நீங்க சொன்னது சேர் போட்டு உக்காந்துக்கும். அடுத்த முறை அவங்க அந்த தவறை (தெரிந்து செய்வதில்லை) செய்தால் அந்த குழந்தையே முன் வந்து மன்னிப்பு கேட்கும் (இதெல்லாம் நீங்க அன்போடு கையாண்டால் மட்டுமே சாத்தியம்). குழந்தைக்ள் கண்ணாடி மாதிரி நம்மை தான் பிரதிபலிப்பார்கள்.

இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் முதல் தடவை தவறு செய்யும் போது அதை ரசிக்கிரார்களே அன்றி அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதில்ல்லை.

உதாரனத்துக்கு இப்போ ஒரு குழந்தை ஒரு பொருளுக்காக முதல் தடவை (நோட் திச் பாயிண்ட் உவர் ஆனர்) அடம்பிடித்தால் வேரிலே அதை கிள்ளி எறியனும். இல்ல தங்கம் இப்ப அம்மாவால வாங்கித்தர முடியாது கடைக்கு போகும் போது வாங்கித் தர்ரேன்னு சொல்லிட்டு குழந்தையோட எண்ணத்தை திசை திருப்பனும். அப்ப குழந்தையோட மனசுல சரி நம்ம அம்மா கடைக்கு போகும் போது வாங்கித்தருவாங்க ங்கிறது பதிஞ்சுடும். அப்பரமா நீங்க கடைக்கு அழைத்துக்கொண்டு போகும் போது ஞாபகம் வச்சு கண்டிப்பா சர்ப்ரைசா வாங்கி கொடுத்து பாருங்க, அப்பரமா உங்க குழந்தை அடம் புடிக்கவே மாட்டாங்க. அதையெல்லாம் விட்டுட்டு முதலில் கேட்கத் துவங்கும் போது எல்லாத்தையும் கேட்டவுடனே வாங்கி கொடுத்துட்டு அப்பரமா ஒரு கட்டத்துல அவங்களுக்கு கேட்டவுடனே கிடைக்கவில்லையென்றால் அட்ம்புடித்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் அன்பாக பேசி புரிய வைக்க நமக்கு பொருமையில்லை, நேரமில்லை. கொஞ்சம் நேரம் குழந்தைகளுக்காக ஒதுக்கி அன்பைப் பொழிந்து பாருங்கள், அப்பரமென்ன அவர்கள் எப்பவும் உங்கள் வசம் தான். குழந்தைகள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே, ஒரு போதும் கண்டிப்பை அல்ல...

அதனால் குழந்தைகளை திருத்த முயல்வது அன்பாக பேசி புரிய வைத்தலே அன்பாக பேசி புரிய வைத்தலே அன்பாக பேசி புரிய வைத்தலே!!!னு சொல்லிகிறோம்ங்க!!!

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

வாங்கோ ...வந்தனம்

ஓ கூட்டணி ஆரம்பமாச்சா...அடிச்சு கிளப்புங்க;)

//நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள். கண்டிப்பான
வணக்கங்கள் னு சொல்லிப் பாருங்க... நல்லா இருக்கா? இல்லேல்ல :). //

நீங்க அன்பா இப்படியெல்லாம் கேட்டா கண்டிப்பா என்னாலே ஒண்ணும் சொல்லமுடியாதுங்கோ……

//நாம் வளர்ந்த காலத்தில் பெற்றோர் கண்டிப்பாக இருந்தாங்க. நாமும் பயந்து நடந்தோம். ஆனால் மனசுல வருந்தினோம் அப்படித்தானே. எப்படா பெரிய ஆளா வருவோம் இவங்க திட்டுல இருந்து விடுதலை கிடைக்கும்னு நினைச்சோம் தானே. //

எப்படிங்க கூட இருந்து பார்த்தாப்போல சொல்றிங்க…சேம் சேம் ஸ்டோரி ரீப்பீட்டா...

//. நாம் திட்டினால் கண்டிப்பாக நடந்து கொண்டால் அவர்களது எண்ணம் மிக அதிகமாக வேலை செய்யும். நம்மை எப்படி நோக வைக்கலாம் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். நமது காலத்தில் பயன் கொடுத்த கண்டிப்பான வளர்ப்பு முறை இன்றைய கால கட்டத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது. //

எதிர்மறை விளைவுகளா,நேர்மறை விளைவுகளான்னு எதிரணிதான் வந்து சொல்லணுங்கோ..

//இன்றைய குழந்தைகளிடம் அப்படிச் செய்யாதே அப்படீன்னு கண்டிப்பான குரலில் மட்டும் சொன்னால் நிச்சயம் கேட்க மாட்டார்கள்.//

ஆமாங்க அப்படியெல்லாம் பிரகாஷ்ராஜ் ஸ்டைலுல சொன்னா யாரு கேட்கறாங்க..

// மாறாக அன்பாக கோபப் படாமல் நிதானமான குரலில் அந்த செயலின் விளைவுகளை எடுத்துச் சொல்லி அதனால் அடுத்த முறை அதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் கேட்டுக் கொள்வார்கள். ஒருவேளை மீண்டும் அதே தவறை செய்தால் கூட "அன்னிக்கே நான் சொன்னேனே இப்ப பார் நீ மீண்டும் அதையே செய்ததால் என்னாச்சுன்னு" என்று அந்த விளைவை சொன்னால் //

அதானே இப்படியெல்லாம் சிவாஜி குரல்ல மாத்தி சொன்னாதான் கேட்கிறாய்ங்க

//என் அண்ணன் குழந்தை. அவள் மிகச்சிறியவளாக இருக்கும் போது காம்பவுண்ட் கேட்டைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அது முழுவதும் தூசியாக இருந்ததால் அவளின் கையை எடுத்து எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டிருந்தாள். நான் குரலை சற்று உயர்த்தி செய்யாதே என்றேன். அவ்வளவுதான்... திரும்பி நின்று "ஏய்..." அப்படீன்னு ஒரு கத்து கத்தினாள். அப்போதுதான் எனக்கு என் தவறு புரிந்தது. //

அடடே அப்படியெல்லாம தவறு செஞ்சு மாட்டினீங்க உஷாரா இருக்கப்படாதோ…கேட்கிற எனக்கே பீதிய கிளப்புது..

//உடனே அவளிடம் "செல்லம் இது ரொம்ப தூசியா இருக்குல்ல. இதில் கை வச்சுட்டு அப்புறமா அதே கையை வாயில் வைத்தால் அழுக்கெல்லாம் வயிற்றுக்குள் போயிடும். அப்புறம் குட்டிம்மாக்கு உடம்புக்கு முடியாம போயிடும்ல. அதான் அத்தை அதை தொடாதேன்னு சொன்னேன். இனிமே குட்டிம்மா தொட மாட்டீங்க இல்ல" அப்படீன்னு நிதானமா சொன்ன பின் சமத்தா கேட்டுக்கிட்டா. கண்டிப்பெல்லாம் குழந்தைகளிடம் அதுவும் இன்றைய குழந்தைகளிடம் எடுபடவே செய்யாது.//

செல்லம்,வெல்லம் அப்ப்டின்னு எல்லாம் சொன்னாதா வேலை நடக்குமின்னு சொல்றாங்க எதிரணி வாங்க….வந்து பதில் சொல்லுங்கோ

//பள்ளியில் கூட அன்பாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்டு நடப்பார்கள். இதே கண்டிப்பான ஆசிரியர் என்றால் அவர் முன் மட்டும் சமத்தாக இருப்பது போல் நடிப்பார்கள். நம் குழந்தைகள் நல்லவனாக நடிக்க வேண்டுமா அல்லது நல்லவனாக நடக்க வேண்டுமா? //

அவங்க நல்லவனுக்கு நல்லவன் ஸ்டைலாச்சே..எதிரணி அதுக்கு என்ன மறுப்பு சொல்ல முடியுமின்னு எனக்கு புரியல..

கவி,இந்தாங்கோ தேன்மிட்டாய்….அப்படியே ஜில்லுன்னு ஆப்பிள் மில்க்ஷேக் எடுங்க குடிங்க

தொடர்ந்து வாங்கோ

அன்புடன்
இளவரசி.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்