1 1/2 வயது குழந்தை- சந்தேகம் உதவுங்கள்

என் பையனுக்கு 1 வயது 5 மாதம் இன்னும் மென்று சாப்பிட பழகவில்லை கடவாய் பற்கள் இன்னும் வரல பிஸ்கட், கரட் ஏதாவது கையில் கொடுப்பேன் அதை வீசி விடுவான் கடித்து கூட பார்க்க மாட்டான் அவனுக்கு உணவு மசிக்காமல் தான் கொடுப்பேன் அப்படியே விழுங்கி விடுகிறான் அவனை எப்படி மென்று சாப்பிட பழக்குவது?
எக் பருப்பு கீரை சாதம் பனானா கொடுக்கிறேன் வேற என்ன உணவுகள் கொடுக்கலாம்?
அவன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை அம்மா என்று கூட பேசல நான் அவனுடன் அமர்ந்து பேசுவேன் அவன் என்னை கவனிக்காமல் விளையடுவான் எப்படி அவனை பேச பழக்குவது ?

கொஞ்சம் இந்த பக்கமும் வாங்கோ........வந்து பதில் சொல்லிட்டு போங்க பா......இங்க தனிய ரொம்ப குழம்பி போய் ஒரு ஜீவன் கத்துது

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

bayapadathinga,oru sila kuzhanthaigaluku lata than pal mulaikum,neenga dhinamum avanai park kootitu ponga,anga pasangali partha vilaiyatula pechu thana varum,pakathila irukuravunga,kuzhanthaigala vittu pesa vaiyunga,ini neenga sapadu kodunga paruppu sadam,idly,dosai kodukalam,veliyil kondu poi konja neram vedai parka vaithu kodungalkonja natkalil sariyagi vidum

hi,
unga kastam eanaku puriyuthu yeana nannum eatheye problem la irunthean rihana. En payan sapidurathula problem illa so sorry eanaku athu pathi theriyathu but avan 2 yrs aanathuku apparam than pesuran. avanuku eppa 2 yrs 5 months aagithu entha 5 months la nalla improvement. A to z varaikum solran animal sounds ya immitate pandran. But aana enna ennum amma nu kupida matenguran. naanum en husband yum doctor kita poi neriya avan than kasta padithitom sila Drs panam parikirathugaga scan athu eathu nu neriya panniyachu. but avana peasa arambichan 2 yrs mudichathum now he is ok. but nanga avanuku neriya rhymes , flash cards , posters nu neriya vangi kudithu avan kita peasikite irunthom.so neanga kaval pada vendam manasa free ya vachu konga.

//கொஞ்சம் இந்த பக்கமும் வாங்கோ..//வந்துட்டோம்
ஸலாம் ரிசானா,
இது உங்க முதல் குழந்தையா,சில குழந்தைகள் தாமதமாக பேசும்,சில குழந்தைகள் சீக்கிரம் பேசும்,அது பரம்பரை,இருக்கும் சூழ்நிலை போன்றவற்றை பொறுத்தது.போகப்போக சரியாகிவிடும்.எனக்கு தெரிந்த குழந்தைக்கு 2 3/4 வயசு ஆகுது.இப்பதான் பேச ஆரம்பிக்குது. அதனால் கவலைப்படாதீங்க.நீங்க தொடர்ந்து பெரிய மனுசன் கூட பேசரது மாதிரி குழந்தை கூட பேசிகிட்டே இருங்க குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து பேசனும்னு எதிர்பார்க்கதீங்க ,net ல் rhymes போட்டு விடுங்க.
இதுக்கெல்லாம் கவலைபடாம இருங்க,இறைவனிடம் வேண்டுங்கள்.
சாப்பாடு ராகி கொடுக்கலாம்.சிக்கன்,மீன் வேகவைத்து தரலாம்.சூப்,ஜூஸ் கொடுக்கலாம்

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்