வால்நட் ப்ரௌனிஸ்

தேதி: May 4, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

சாக்லேட் ப்ரௌனிஸ் சுவையான அமெரிக்கன் டெஸர்ட். இவை கேக் மற்றும் குக்கீஸ்க்கு இடைப்பட்ட டெக்ஸ்சரில் இருக்கும். பொதுவாக ப்ரௌனிஸ் மூன்று வகையாக செய்வார்கள். Cakey brownies, Fudgy Brownies and Chewy brownies. இவை பெரும்பாலும் பால்/காபியுடன் பரிமாறப்படும். டெஸர்ட்டாக சாப்பிட சிறந்தது.

 

மைதா / ஆல் பர்பஸ் ஃப்ளார் - அரை கப்
கோகோ பவுடர் - 1/3 கப்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
முட்டை - 2
சர்க்கரை - ஒரு கப்
வெண்ணெய் அல்லது வெஜிடபிள் ஆயில் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
வால்நட் - கால் கப்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை அடித்துக் கொள்ளவும். பின்னர் முட்டைகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
ஆல் பர்பஸ் ஃப்ளார், கோ கோ பவுடர், உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை சலித்துக் கொள்ளவும்.
இப்போது மாவுடன் முட்டைக்கலவையை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
இதனுடன் வால்நட் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
8X8 இன்ச் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதா தூவி வைக்கவும். இதில் தயார் செய்து வைத்துள்ள ப்ரௌனி மாவு கலவையை ஊற்றவும்.
அவனை 350 டிகிரி F ல் முற்சூடு செய்யவும். 22 - 25 நிமிடங்களில் ப்ரௌனி வெந்துவிடும். ட்ரேயின் ஓரங்களில் இருந்து ப்ரௌனி சிறிது பெயர்ந்து இருந்தால் ப்ரௌனி தயாரானதை உறுதி செய்து கொள்ளலாம்.
அரை மணி நேரம் ஆற விட்டு ட்ரேயில் கவிழ்த்து வைக்கவும். நன்கு ஆறியதும் துண்டுகள் போட்டு சர்வ் பண்ணலாம்.
மேலே க்ரிஸ்ப்பியாகவும் உள்ளே மிருதுவான சுவையான ‘வால்நட் ப்ரௌனிஸ்’ தயார்.

இதில் வால்நட்டுக்கு பதிலாக சாக்லெட் சிப்ஸ் சேர்த்தும் செய்யலாம். இவற்றின் மேல் ப்ராஸ்டிங், விப்ட் க்ரீம் வைத்து பரிமாறலாம். கோ கோ பவுடருக்கு பதிலாக டார்க் சாக்லேட்டை உருக்கியும் ப்ரௌனிஸ் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டெஸர்ட். மேற்குறிப்பிட்ட அளவில் செய்தால் 16 துண்டுகள் கிடைக்கும். Salted Butter பயன்படுத்தினால் தனியே உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் அருமையான அமெரிக்கன் குறிப்பு. நல்ல டெஸர்ட் கொடுத்து இருக்கீங்க. டேஸ்ட் பண்ண ஆசையா இருக்கு. எனக்கு டெஸர்ட் என்றால் ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா ட்ரைப் பண்ணுவேன் வாழ்த்துக்கள்.

அன்பரசி,
உங்களுக்கு "கேக் அரசி" என்று பட்டம் கொடுக்கலாம்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கள்:))) ரொம்ப அழக இருக்கு செய்யவும் ஆசையே என்ன பன்ன நொ அவன் நொ டெஸர்ட்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

வாழ்த்துக்கள்:))) ரொம்ப அழக இருக்கு செய்யவும் ஆசையே என்ன பன்ன நொ அவன் நொ டெஸர்ட்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

அருமையான ப்ரௌனிஸ் அப்படியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு வாழ்த்துக்கள்.
கவி சொன்னதுபோல கேக் அரசின்னு பேர் வச்சிடலாம் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருமையா இருக்கு...நிறைய புது போடுங்க...நான்கூட வால்நட் கேக்ல சேர்ப்பேன்..நார்மலா...கேக்ல சாப்பிடறப்ப அதன் சுவை சூப்பரா இருக்குமில்ல
மத்த ப்ரளனிஸ்ஸும் போடுங்கோ கத்துக்கறோம்...

வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரொம்ப நல்லா இருக்குங்க... பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு.......

வால்நட் ப்ரௌனிஸ் சூப்பர். அழகா செய்திருக்கீங்க. அவன் வாங்கினால் உங்க குறிப்பு எல்லாம் ட்ரை பண்ணனும். ஹர்ஷா மற்றவகை ப்ரெளனிஸூம் சொல்லி கொடுங்க, உங்க மூலமா கத்துக்குறோம்.

அன்பு ஹர்ஷா,

அழகான கேக், டேஸ்டும் நிச்சயம் சூப்பராகத்தான் இருக்கும். அவன் இருந்தால் செய்து பார்க்கலாம்.

எப்படியும் இன்னொரு தடவை யு.எஸ். வரும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசை இருக்கு.

இந்தக் குறிப்புகளை விருப்பப் பட்டியலில் சேர்த்து வைச்சுக்கறேன். நேரம் அமையும்போது, செய்து கொடுத்து, எல்லோரையும் அசத்த ஆவலாக இருக்கு.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹர்ஷு

இந்த குறிப்பும் பல நாள் என் மனதில் இருந்த குறிப்பு தான்.. பார்க்கவே யம்மியா இருக்கு..
வால்நட் ரொம்ப ஹெல்தியும்.. :) குட்டிஜாலியா உங்க பேக்கிங்க என்ஜாய் பண்றாங்களே :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

அசத்துறீங்க போங்க......ஒரு பேக்கிங் ஸ்ப்ரி ல இறங்கிட்டீங்க போல....கலக்குங்க. டிப்ஸ் சொல்லியிருக்கீங்க. கைவசம் சாக்லேட் சிப்ஸ் இருக்கு.....செய்திடுவோம் ;) வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கௌதமி,
உங்கள் அன்பான முதல் பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்து சொல்லுங்க.மீண்டும் நன்றி.

கவிதா,
நலமா? பட்டம் எல்லாம் வேண்டாம்.செய்து பார்த்து பிடிச்சதானு சொன்னாலே பெரிய சந்தோஷம் தான்.வாழ்த்துக்களுக்கு நன்றி.

விமலா,
சீக்கிரமே அவன் வாங்கியதும் கண்டிப்பா ட்ரை பண்ணுங்க.உங்க இரட்டை பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

இளவரசி,
.சாக்லேட் சிப்ஸ் சேர்த்தால் ரொம்ப ஸ்வீட்டா ஆயிடும்.ஹர்ஷாக்கும் வால்நட்ஸ் தான் பிடிக்கும்.மற்ற ப்ரௌனீஸ் குறிப்புகளும் தர முற்சி செய்கிறேன்.பட்டி பிஸியிலும் வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி இளவரசி.

ஹர்ஷா,
'வால்நட் ப்ரௌனிஸ்' சிம்ப்ளி சூப்பர்ர்!! :) ப்ரௌனிஸ் நான் அடிக்கடி செய்வதுண்டு. என் பையனோட ஃபேவரைட்! :)

லாவண்யாக்கும் எனக்கும்தான் ரொம்ப டெலிபதி வொர்க் அவுட் ஆகிட்டு இருந்தது, இப்ப உங்களோடும்!! ;) :) அடுத்து இது செய்து போடனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கிற குறிப்பு! :)

உங்க மெத்தட்ல வால்நட் சேர்த்து செய்துபார்க்கிறேன். படங்கள் எல்லாம் எப்போதும்போல 'பளிச்'சுனு அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

பிரியா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றிங்க.

வினோஜா,
விரைவிலேயே அவன் வாங்கி செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
கண்டிப்பா நாங்க இங்கிருக்கும் போதே யூ.எஸ் வாங்க. நானே செய்து தர்றேன். :-) முடியும் போது/நேரம் கிடைக்கும்போது செய்து பார்த்து சொல்லுங்க.உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி.

ரம்ஸ்,
நீங்க நினைக்கும் குறிப்பெல்லாம் நான் அனுப்பிடுறேனே...!!! வேறு வகை ப்ரௌனீஸ் செய்து நம் தோழிகளுக்காக அனுப்புங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

லாவண்யா,
’சாக்லேட் சிப்ஸ் ப்ரௌனீஸ்’காக வெயிடிங்க்.அனுப்புங்க சீக்கிரம்.பதிவுக்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ,
யூ டூ சுஸ்ரீ??!!! ஆஹா.....இத்தனை பேரை முந்திகிட்டு நான் அனுப்பிட்டேனே....கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் இதை விட பெட்டர் ரெஸிப்பி அறுசுவைக்கு கிடைச்சிருக்குமே!!!
கண்டிப்பா வால்நட்ஸ் சேர்த்து செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி சுஸ்ரீ.

Harshaa my oven is having only 250 maximum... But said 350... What can I do? Help me... How much time can I keep for 250.. Reply... I want to try this... My daughter like this brownies very much... Reply please...

இங்கு கொடுத்துள்ளது 350 டிகிரி F .உங்கள் அவனில் 180 டிகிரி C என்று டெம்ப்ரேச்சர் செட் பண்ணி செய்யுங்க.8X8 இன்ச் ட்ரேயில் பேக் செய்தால் நேர அளவு ஒன்றுதான்.22 முதல் 25 நிமிடங்கள்.செய்து பார்த்து உங்க மகளுக்கு பிடிச்சதானு சொல்லுங்க.

Thanks a lot harshaa ... Today iam going to do bcos so for I was waiting for ur reply...

It came out really well.. Iam very happy harshaa.. Thanks a lot for your recipe.. My husband liked it very much.. My daughter ate only one piece... But she also liked a lot.. Good recipe.. Keep going...

அதற்குள் செய்துட்டீங்களா? :-) ப்ரௌனீஸ் நல்லா வந்ததில் ரொம்ப சந்தோஷம்.குறிப்பை செய்து பார்த்து,பின்னூட்டம் தந்ததற்கு ரொம்ப நன்றிங்க.