தொலைக்காட்சி நிகழ்சிகள்

வணக்கம் தோழிகளே, நான் இந்த தளத்திற்கு புதியவள் என்னை உங்களுடன் இணைத்து கொள்வீர்கள் என நினைகிறேன்.எனக்கு சில தொலைக்காட்சி நிகழ்சிகள் பெரும் வேதனையை தருகிறது. ஏக.. மானாட மயிலாட,போன்றவை. மானாட மயிலாட நிகழ்ச்சியை என்னவென்று சொல்ல?அதில் ஆடல் கலைஞர்கள் என்று தங்களை சொல்லி கொள்பர்கள் உடுத்தும் ஆடைகளை கண் கொன்று பார்க்க முடியவில்லை.இதற்கு நாம் ஏதும் செய்ய முடியுமா தோழிகளே! உங்கள் கருத்துகளை சொல்லி என்னை உங்களுடன் சேர்த்து கொள்ளுங்கள்
பாரதியின் கன்னமாவாக,
சரண்யா.

நான் ஜென்னி. நீங்க சொல்றது 100 க்கு 100 உண்மைப்பா. "மானாட மயிலாட" நிகழ்ச்ச்சிய கண் கொண்டு பார்காவே முடியாது. ஒரு டிவி ஷோ மாதிரியா நடத்துறாங்க. ரொம்ப அநியாயம். cinema தான் இப்படி போச்சுன்னா அதுக்கு இணையா இப்போ டிவி ஷோ கூட வந்துடுச்சு. இதுக்கு நாம கண்டிப்பா எதிர்ப்பு தெரிவிக்கணும். இது ஏன் இப்படி பண்றாங்க ? கோடி கொடியாய் பணத்தை கொட்டி கொட்டி படம் எடுத்தாலும் ஹீரோயன்க்கு மட்டும் ஏனோ பத்தாத நம்ம வீடு சிறு பிள்ளைகள் போடும் கவுன் தான் ஆடை. என்ன கொடுமை ?
நம் ரசனைகளை ஏன் இப்படி தரக்குறைவா நினைக்குறாங்க நம்ம இயக்குனர்கள் ? இதுக்கு ஒரு முடிவே இல்லையா ?

ஜென்னிவினோ

Dare To Paly With Life

புதிய தோழி சரண்யா,நல்ல தமிழில் சரியான உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.இப்போது TRB Rating என்று நிகழ்ச்சிகளை வரைமுறை இல்லாமல் ஓளிபரப்புகின்றனர்.சன் டிவி சீரிய்ல்களும் அப்படிதான்.ம்யூசிக் சேனல் தொகுப்பாளினிகளின் உடையும் அப்படிதான். நாம் அதை பார்க்கமல் இருந்தால் TRB Rating குறையும்.இளைய சமுதாயத்தை முடிந்த அளவு கெடுத்து விடுவார்கள் போல் இருக்கிறது

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

வணக்கம் ஜென்னி, எப்படி இருக்கீங்க? ஆமா ஜென்னி எனக்கு இந்த நிகழ்ச்சி எல்லாம் பாக்க பாக்க பயங்கர கோவமா வருது ஜென்னி, கோடி கோடியாக செலவு செய்யுது படம் எடுப்பார்கள் ஆனால் heroineகு மட்டும் துண்டுதான் குடுப்பார்கள்,இதை மாற்ற என்ன செய்ய நம்ம எதாவுது எதாவுது மனு எழுதி குடுக்க முடியுமாnu உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க,கண்டிப்பா நம்ம செய்யலாம் தோழி
என்றும் அன்புடன்,
சரண்யா

வணக்கம் பாதிமாஹ்,
நன்றி தோழி,எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் அதான் தமிழில் எழுதினேன்,ஆமாம் தோழி trb ratingkaga தான் இப்படி பன்றாங்க,vg துணிகளை போடறதுக்கு துணி போடாமலே இருக்கலாம் தோழி,நான் அந்த மாதிரி நிகழ்சிகள் எதையும் பார்பதில்லை தோழியே,

ஹாய் அன்புத்தோழி சரண்யா..... தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அபத்தங்கள் தான் நிறைய இருக்கு. மானாட மயிலாட ஜட்ஜஸ் ஐ பார்த்தாலே வாமிட் தான் வருது. தற்போது விஜய் டிவி சரவணன் மீனாக்ஷி தொடரிலும் அபத்தமான காட்சிகள் வந்துகிட்டு இருக்கு.நிறைய எதிர்ப்புகள் வரத்தான் செய்யுது. ஒவ்வொரு நிமிஷமும் கோti ரூபாய் களில் வருமானத்தை தருவதால் எல்லா எதிர்ப்பையும் சரி கட்டிடுவாங்க.

நியூஸ், ஸ்போர்ட்ஸ், அனிமல் பிளானட், நேஷனல் ஜியோகிராஃபி சேனல் தான் பெஸ்ட் அவுட்லெட்.

நாம ஏதும் செய்ய முடியுமான்னு கேட்டு இருக்கீங்க. அதை பார்க்காமல் வெளியில வாக்கிங் போவது, அக்கம் பக்கத்தினரோடு பேசுவது, குழந்தைகளுடன்(பல்லாங்கிழி, கேரம், செஸ், பில்டிங் செட், கிராஃப்ட் ஒர்க் செய்வது), அறிவையும் பண்பையும் வளர்க்கும் புத்தகங்கள் படிப்பது நம்மை கண்டிப்பாக "முட்டாள் பெட்டி"யிடம் இருந்து காப்பாற்றும்.

சரி தானே தோழீஸ்........

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு செரி தான் தோழி,விஜய் டிவி யின் நிறைய நிகழ்சிகளை பார்பதே இல்லை,நீயா நானா,ஒரு வார்த்தை ஒரு லட்சம்,அது இது எது போன்ற நிகழ்சிகள் பார்க்கலாம்,கலைஞர் இல் நாளைய இயக்குனர் பார்க்கலாம் வேர் எதற்காகவும் நான் இந்த டிவி யை பார்பதே இல்லை தோழி,காலை மற்றும் மாலை நடை பயிற்சி போயிடுவேன்,வீட்டில் இருக்கும் நேரம் புக் தான் படிபேன்,.இந்த டிவி இல் நேரத்தை கழிப்திலை
என்றும் அன்புடன்
சரண்யா

எனக்கும் இதே அபிப்ராயம்தான். சினிமாவில் வரும் டான்ஸ் எல்லாம் 2 நிமிஷ பாட்டுக்கு, கிட்டத்தட்ட 1 வாரம் ஷூட் பண்ணுவாங்க. ஆனா, இந்த ப்ரோக்ராம்ல ரெண்டே நிமிஷத்துல இவ்வளவு ப்ரஷர் ஏத்திக்கணும்னா, கண்டிப்பா பார்டிசிபேட் பண்ணுறவங்களுக்கும் மன அழுத்தம் மிக அதிகமாகும்.

அதோட, எஃப்.எம் ஸ்டேஷன்களும் இப்படித்தான். ப்ரைவேட் ஸ்டேஷன்கள் எல்லாத்திலயும் லொட லொடன்னு பேசறது, அர்த்தமில்லாம எஸ்.எம்.எஸ் அனுப்ப சொல்றதுன்னு ஒரே எரிச்சலாக இருக்கு.

சிம்பிளாக, போரடிக்காம, திகட்டாம, கேக்கணும்னா, ரெயின்போ எஃப்.எம். போதும்.

நான் நலம். நீங்க ?

எனக்கு ஏதும் தெரியலப்பா. கண்டிப்பா நாம எல்லாரும் சேர்த்து மனு ஏதாவது நம் அரசுக்கு அனுப்பினா நல்லா தான் இருக்கும். இங்க வர்ற தோழிகள் யாருக்காவது இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள். இதில் அட்மின் அண்ணா வோட கருத்தையும் நான் எதிர் பார்க்குறேன். நாம இன்னும் அமைதியா இருக்க கூடாது. trb பண்ணலாம். மனுவும் அனுப்பலாம்.

கருத்துக்களை அதிக ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

இன்னைக்கு கூட பேப்பர்ல படிச்சேன் தமிழ்நாட்டு சேனல்களில் ரொம்பவும் மோசமான சீரியல் நிறைய வருதாம்,அதுவும் கஸ்தூரி,உறவுகள்,தென்றல்,செல்வம் போன்ற சீரியல்களில் ஏதாவது ஒரு முக்கிய பாத்திரத்துக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குமாம்,அதுமட்டுமில்லே இன்னும் கள்ளத்தொடர்பு,ஓடிபோறது,மாமியார் மருமகளை வெட்டிவிடுறது,மருமகள் மாமியாரை கொடுமைபடுதுறதுன்னு எல்லாத்துக்கும் டிப்ஸ் தரமாதிரிதான் இருக்காம் ,சினிமாக்காவது சென்சார் உண்டு (ஆனால் அதுவும் பிரயோஜனம் கிடையாது)இதுக்கு அதுவும் கிடையாது,முக்கியமா நாம பார்க்கும்போது நம்ம குழந்தைகளும் பார்த்து கெட்டு போறாங்க இந்த மாதிரி நிகழ்ச்சிகள் செய்றவங்களோட நோக்கம் பணம் மட்டும்தான் ,அதனாலே நாமதான் ஜாக்கிரதையா இதெல்லாம் பார்க்காம தவிர்க்கணும்.
இப்படி சமுதாயத்தை கெடுத்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கிறவங்க இருக்கறவரைக்கும் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வந்துகொண்டுதான் இருக்கும். மேலும் நல்லா இருக்கிற மாமியார் மருமகள் கூட இதெல்லாம் பார்க்கும் பொது உளவியல் ரீதியா பாதிக்கபடுகிறார்களாம். பவர்கட்னாலே பல குடும்பங்கள் தப்பிச்சது :-)

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்