அன்னையர் தினம்.

தொட்டிலில் எனை அன்று தாலாட்டினாள் -பின்
கட்டிலில் எனையிட்டு சீராட்டினாள்,
தட்டினில் உணவிட்டு சோறூட்டினாள்,-புது
மொட்டினைப் போல் எனை அழகூட்டினாள்,
கதைகள் பல கூறி அறிவுக்கு விருந்தூட்டினாள்,
கலையாத நேசத்தை அவள் காட்டினாள்,
நற்சேயாய் எனை அவள் உருமாற்றினாள்,
உண்மை வழி நடக்க அவளே வழிகாட்டினாள்,

தோழிகளே உங்கல் அன்னையைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்,
இப்படிக்குப் பூங்காற்று.

எனது அம்மாவிற்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.எனது அம்மா நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்திக்கின்றேன். அம்மா! உனது மகள் சாதிக்கவேண்டியது இன்னும் நிறைய உள்ளது அதை எல்லாம் நீங்கள் பார்த்து மகிழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.இறைவா எனது பிரார்த்தனையை ஏற்று அங்கீகரிப்பாயாக.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

inrudhaan annaiyar dhinamaa?

vazhga valamudan

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

உயிர் தந்து உதிரமும் தந்து உன்னதமாய் வாழவைக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அன்புடன்
THAVAM

தான் பெற்ற மதலைக்கும்
தனைப்பெற்ற பெற்றோர்க்கும்
தாயும் தந்தையும் தானேயாகி
உயிர்போல் சுற்றத்தை உன்பிறந்த ஊரை
உள்ளளவும் நேசித்த எனதருமைத் தாயே
எத்தனை பிறவிகள் நான் இந்த உலகில்
எப்படி எடுத்தாலும் நீயே என் சேயாய்
நான் உன்னை நேசித்துக் கொண்டாட வேண்டும்.

தாய்மை உண்ர்வுள்ள இருபாலர்க்கும்
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

idhuvum kadandhu pogum.

happy mother's day

vazhga valamudan

அன்னையர் தின வாழ்த்துக்கள்!
உயிர் சுமந்து
உடல் வளர்த்து
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாது
மனதில் உறுதியும்
நேர் கொண்ட பார்வையுமாய்
எனை வளர்த்து
உறுதியுடன்
நான் வாழத்துவங்குமுன்னே
உடல் மறித்து
உயிர் துறந்து
இறைவெளியான
என் தாயே!
உயிர் வாழ்கிறேன்
என் மகனாய்
நீ வந்துத்து
நானும் ஒரு தாயாய்
தழைத்துவந்ததனால்
தலைவணங்கி
தலைநிமிர்கிறேன்.

மேலும் சில பதிவுகள்