வீட்டிலிருந்தே யோகா வகுப்பு எடுப்பது

நான் போரூர் அருகில் வீட்டிலிருந்தே யோகா, கைவினைப் பொருட்கள் சொல்லித்தரலாம் என நினைக்கிறேன். ஏற்கனவே இவ்விதம் வகுப்பு எடுக்கும் தோழியர் எப்படி துவக்கலாம், எவ்வளவு கட்டணம் வாங்கலாம் போன்ற வழிகாட்டுதலை தரவேண்டுகிறேன். மேலும் டெக்கோபாஜ் ஒவியங்களை எங்கு எப்படி நல்ல விலைக்கு விற்கமுடியும் என்றும் தெரிவிப்பீர்களா தோழியரே!

வணக்கம்.
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
நான் முன்பு ஒரு வாரம் ஒரு யோகா பயிற்சிக்கு சென்றிருந்தேன்..
அங்கு காலை 5:30 முதல் 6:30 வரை பின்பு 11:00 முதல் 12:00 வரை என்று இரு வகுப்பு எடுக்கப்பட்டது..
மாதத்திற்கு 400 ரூபாய் வாங்கினாங்க. வாரம் ஐந்து நாட்கள் பயிற்சி இருந்தது.
அருகில் இருக்கும் அபார்ட்மென்ட் பெண்கள் வந்தார்கள்

நன்றி தோழி. நான் வீட்டிலிருந்தே செய்யும் தொழில் வளம் பெற தேவையான அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்கிறேன் தோழியரே!

மேலும் சில பதிவுகள்