வாழைத்தண்டு சூப்

தேதி: May 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

 

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
மிளகாய் வற்றல் - ஒன்று
கொத்தமல்லி, கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
தனியா - ஒரு மேசைக்கரண்டி
உப்பு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய / துருவிய தண்டு சேர்த்து 6 கப் நீர் விட்டு சிறுந்தீயில் கொதிக்க விடவும்.
பாதி வெந்திருக்கும் நேரம் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி எடுக்கவும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழைத்தண்டு சூப் நல்லா இருக்கு வனி செய்து பார்க்கிறேன். இஞ்சி, பூண்டு இரண்டும் சேர்த்து 1/2 தேக்கரண்டியா? இல்ல தனித்தனியா அரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கனுமா?

அன்பு வனிதா,

நல்ல ஹெல்தியான சூப். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

ஆண்களுக்கு, வாழைத்தண்டு சாப்பாட்டில் சேர்த்தால், கிட்னியில் ஸ்டோன் சேராமல் இருக்கும்னு சொல்வாங்க.

நல்லதொரு குறிப்பு தந்ததற்கு பாராட்டுக்க்ள் வனிதா

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி
வாழைத்தண்டு ஜூஸ் செய்வேன்.இனி சூப் செய்து பார்க்கிரேன்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

வினோ... மிக்க நன்றி. அது பொடியா நறுக்கிய இஞ்சி பூண்டு... விழுதில்லை. சேர்த்தே 1/2 தேக்கரண்டி போதுமானது :) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.

சீதாலஷ்மி... மிக்க நன்றி. ஆண்களூக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே கிட்னி ஸ்டோனுக்கு இது நல்ல மருந்துன்னு சொல்லி கேட்டிருக்கேன். அவசியம் செய்து பாருங்க. :)

நிகிலா... மிக்க நன்றி. இப்படியும் சாப்பிட்டு பாருங்க, காரசாரமா நிச்சயம் பிடிக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதை இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன். சென்னையில் இருக்கும் சூப் ஸ்டாண்டில் எப்போவுமே இதை தான் விரும்பி குடிப்பேன். அருமையா செய்திருக்கீங்க. அப்படியே அந்த பவுல் ஸ்பூன் பேப்பர் சால்ட் கண்டேயினரோட தந்துடுங்க ;)
வாழைத்தண்டு கிட்னி ஸ்டோனுக்கு மட்டுமில்லை. உடல் எடையை குறைக்கவும் உதவும். அதில் உள்ள நார் சாது கான்ச்டிபெஷனுக்கு ரொம்பவே நல்லது.
இங்கே கிடைக்காது :( நான் எங்கே தேடுவேன்?

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி

சூப்பையும் , பாத்திரத்தை பார்த்து டக்குனு லாவினு நினைத்து, அட பாவமே..தண்டு எங்கே இங்கே வாங்கினாங்கனு நினைத்தேன்.
உங்க பாத்திர செட் சூப்பர்.. எனக்கு குடிக்கணும் போல இருக்கு .வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி,

முகப்பில் பார்த்ததுமே நீங்கதான்னு கெஸ் பண்ணேன், சரியாவே கண்டுபிடிச்சிருக்கேன்! :) வாழைத்தண்டு சூப் சூப்பர்! உடம்புக்கு ரொம்ப நல்லது என்று கேள்விப்பட்டிருக்கேன், என்ன செய்வது? இங்கெ கிடைப்பதுதான் இல்லை. :(

உங்க குறிப்பு, ப்ரசண்டேஷன், அந்த சூப் பவுல் & ஸ்பூன் செட் எல்லாமும் கலக்கல்! வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

லாவி... மிக்க நன்றி. //அப்படியே அந்த பவுல் ஸ்பூன் பேப்பர் சால்ட் கண்டேயினரோட தந்துடுங்க ;)// - கேக்குறதை பார்த்தா சூப்புக்காக கேக்குற மாதிரி இல்லையே ;)

//இங்கே கிடைக்காது :( நான் எங்கே தேடுவேன்?// - மரம் தான் நட்டு வைக்கனும் :) ஹிஹிஹீ.

ரம்யா... மிக்க நன்றி. இவங்க தான் நான் முதன் முதல்ல கல்யாணம் பண்ணி சிரியா போகும் போது டெல்லியில் வாங்கியது ;) 4 ஷிஃப்டிங்கை தாண்டி மிச்சம் உள்ளவர்கள். ஹிஹிஹீ.

சுஸ்ரீ... மிக்க நன்றி. வெளிநாடு போறவங்க எல்லாம் யாரை மிஸ் பண்றோமோ இல்லையோ... நிறைய உணவு வகைகளை ரொம்பவே மிஸ் பண்றோம் போல ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹெல்த்தியான சுவையான சூப் ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி. செய்து பாருங்க... நிச்சயம் பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சூப் சூப்பர்..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மிக்க நன்றி. செய்து பாருங்க, பிடிக்கும்னு நம்பறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா சூப்பர் சூப். நிஜமாவே நல்லா இருந்துச்சு. எப்படி செய்றதுனு ஐடியா இல்லாம இருந்தது.எல்லா பக்கமும் தேடி ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த குறிப்புனும் சொல்லலாம்.. அதுக்கு ஏத்த மாதிரி நீங்க குறிப்பும் கொடுத்துட்டீங்க. சூப்பர் . நல்ல டேஸ்ட். விருப்பபட்டியல்ல சேர்த்துட்டு இன்னைக்கு செஞ்சும் பார்த்துட்டேன். வாழைத்தண்டுனா வேணாம்னு சொல்றவங்க இன்னைக்கு சூப் குடிச்சாங்க. நல்லா இருக்குனு பாராட்டும் கிடைச்சிச்சு. உங்களுக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும். தாங்க்ஸ்கா.

செய்துட்டீங்களா??? கேட்கவே மகிழ்ச்சியா இருக்கே எனக்கு :)

எங்க வீட்டில் கூட என் மகன் ரொம்ப விரும்பி சாப்பிட்டான். அவனுக்கு க்ரீம் உள்ள சூப் வகைகளை விட நீர்க இருப்பவை பிடிக்கும். இது ஏறக்குறைய ரசம் போல் சுவை வரும். உங்களூக்கும் பிடிச்சதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நன்றி... ரொம்ப நன்றி நசீம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா