பென் ஸ்டாண்ட்

தேதி: May 30, 2012

4
Average: 4 (19 votes)

 

பேப்பர்
க்ளு
வட்ட வடிவ அட்டை

 

தேவையான அளவு பேப்பர்களை கட் செய்து மடித்து கொள்ளவும். இதில் சிவப்பு மற்றும் லைட் க்ரீன்நிற பேப்பரை தேர்வு செய்து முக்கோணங்களாக மடித்து வைக்கப்பட்டுள்ளது.
முதலில் இரு சிவப்புநிற முக்கோண பேப்பரை சேர்த்து வைத்து, அதனை இணைக்க மற்றொரு சிவப்புநிற முக்கோண பேப்பரை வைத்து சொருகி விடவும். இரண்டு மற்றும் ஒன்று என ஐந்து வரிசை சேர்க்கவும். இதுக்கு 15 பேப்பர் வேண்டும், அதன் கீழ் பச்சை நிற பேப்பர்களை இதே போல் இணைத்து வைக்கவும்.
3 சிவப்பு மற்றும் 3 பச்சை நிறம் வர வேண்டும். மொத்தம் 30 வரிசை. 30 வரி வந்ததும் இரு முனைகளையும் இணைத்து வட்ட வடிவ ரிங் ஆக்கவும்.
இதே போல் ஐந்து ரிங் செய்யவும்.
படத்தில் உள்ளவாறு அடுக்கி ஒன்றோடு ஒன்று க்ளு தடவி இணைக்கவும்.
வட்ட வடிவமாக கட் செய்த ஒரு அட்டையை ஸ்டாண்டின் ஏதாவது ஒரு பக்கத்தில் வைத்து ஒட்டவும்.
பேப்பரில் செய்த அழகான பென் ஸ்டாண்ட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர். கலர்லாம் அப்பிடி பளிச். பேசாம வளையலாவே மாட்டிரலாம் போல இருக்கு.
பக்கத்துல இருக்குற பொம்மை குறிப்பு சீக்கிரம் வரும்ல!

‍- இமா க்றிஸ்

வழக்கம் போல் இதுவும் கலக்கல். சூப்பர்ப் பென் ஸ்டாண்ட்.... குட்டி பொம்மை ரொம்ப க்யூட்...

supera eruku....

பென் ஸ்டாண்ட் ரொம்ப அழகா இருக்கு. கலரும் அசத்தல். பக்கத்துல உட்கார்ந்து இருக்கற பொம்மையும் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்.

என்ன சொல்ல... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல ;) ஒவ்வொரு மாசமும் கைவினை அவார்ட் உங்களுக்கே கொடுத்துடலாம் போல :) இதில் நீங்க செய்ததை விட இந்த வகை கைவினைக்கு அந்த பேப்பரை எல்லாம் மடிச்சு நீங்க தயார் பண்ண எவ்வளவு நேரமாகும்னு தான் ஆச்சர்யமா இருக்கு. அநியாயத்துக்கு பொறுமை வேணும். எனக்கு ரொம்ப கம்மி. ஆனாலும் ட்ரை பண்ண ஆசை... எப்படியும் பிடிச்சுடுறேன்... மாலேவில் கிடைக்குதா பார்க்கிறேன். பொம்மையும் அழகு, பென் ஸ்டாண்டும் அழகு... அடுத்த மாதம் பொம்மை குறிப்பா?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்... வேறென்ன சொல்ல.. :)

romba superrrrra iruku paaaaa...congrats.. antha pommai romba superr next pommai ebdi seiyarathunu solunga paaa..

ரொம்ப நல்லா இருக்கு மேடம் உங்க பேப்பர் பென் ஸ்டாண்ட். ஆல் தி பெஸ்ட்.

Nothing is impossible in this world
Because impossible itself means
I'm Possible.

இமா நலமா? கலர் கலரா செய்து டிரெஸுக்கு மேட்சா மாட்டிக்கலாம்,வெளியே எங்கேயும் இப்படி டிசைன் கிடைக்காது அல்லவா?:)
மொம்மை குறிப்பு போட்டோ எடுக்கலையே,பொம்மைக்கு வடிவம் குடுக்க கஷ்டமா போச்சு,6 அல்லது 7 முறை முயன்று ஒரு வழியா செய்து முடித்தேன்,பென் ஸ்டாண்டும் அதே கதைதான்,
இன்னும் ஒரு உண்மை சொல்லவா இமா,போன தடவை வந்த வால் ஹங்கிங் ஸ்டாண்ட் செய்ய ஆரம்பித்தது.கடைசி வரை முடிக்க பொறுமை யில்லாமல் பூ ஜாடியா மாத்திட்டேன்:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

சுபா உங்க பாராட்டுக்கு நன்றிப்பா.

சுகன்யா தேன்க் யூ

வினோ எப்படிபா இருக்கீங்க? வால்ஹாங்கிங் ல் பதிவு போட்டனே பாத்திங்களா?லேட்டா போட்டதுக்கு சாரிப்பா,

கிரேட் 2020 உங்க பேரு சொன்னா கூப்பிட வசதியா இருக்கும்,மிக்க நன்றி.

சத்யா மற்றும் சந்தினி ரெம்ப நன்றிப்பா.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனி நலமா? குட்டிஸ் எப்படி இருக்காங்க?இது தானே வேணாம்ங்கிறது,உங்க அளவு ஆல் இன் ஆல் ஆகமுடியுமா?நானும் எல்லாத்திலும் கலந்துக்க ஆசைபடறேன்,ஆனால் முடியல,
வனி எனக்கு பேப்பர் மடிப்பதை விட அதை கட் செய்ய பிடிக்காது,யாராவது கட் பண்ணி கொடுத்துட்டா சந்தோஷபடுவேன்.ஆனால் கட் பண்ணி கொடுக்க ஆள் இல்லை:(,பேப்பரை கட் செய்து வைத்தால் வேலை முடிந்த மாதிரி,நேரம் கிடைக்கும் போது மடித்து விடலாம்,பேப்பர் மடிக்க டைம் எடுக்குமே தவிர உருவம் கொடுக்க டைம் எடுக்காது, ஒன்னும் மட்டும் உண்மை முதல் முறை நான் இதை செய்ய நினைத்த போது ரெம்ப பெரிய வேலையா தெரிந்தது,ஆனால் இதனுடைய அழகு நிறையா செய்ய ஆர்வத்தை தூண்டுது,

கட்டாயம் செய்து பாருங்க வனி,நான் இன்னும் குட்டியா செய்து அனுப்பறேன்.ரெம்ப ஈஸியா செய்து முடிக்கிற மாதிரி
பகலில் ராகுலை வச்சுகிட்டு ஒன்னும் முடியாது,அதானால தினம் நைட் அவன் தூங்கிய பிறகு ஒரு மணி நேரம் எதாவது இது போல செய்ய உட்காந்துடுவேன்,
எனக்கு பட்டம் எல்லாம் வேணாம் வனி,அதான் ஒரு தடவை வாங்கிட்டேனே, மத்தவங்களுக்கு கொடுத்து ஊக்கப்படுத்துங்க எல்லாத்துக்கும் முடிஞ்சதும் மீண்டும் எனக்கு கொடுங்க,:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணுகா,

கலர் காம்பினேஷன் அருமை.

கைவேலை செய்வதற்கே இவ்வளவு அழகாக கலர் செலக்ட் பண்றீங்க, ட்ரெஸ் செலக்‌ஷன் எல்லாம் சூப்பர் ஆக செய்வீங்கன்னு நினைக்கிறேன்.

ஸ்டாண்ட் பக்கத்தில் குட்டி பொம்மை கொள்ளை அழகு!

மனம் நிறைந்த பாராட்டுக்கள், ரேணுகா

வியப்பும் பிரமிப்புமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

அன்புடன்

சீதாலஷ்மி

ஐ சீதா அம்மா நீங்களும் ஆன்லைனில் தான் இருக்கீங்களா?
உங்க பாராட்டு எனக்கு நிச்சயம் ஆசிர்வாதாமே,
ட்ரெஸ் செலக்ஷன் நான் ரெம்ப வீக்,
சின்ன வயதில் இருந்து இப்ப வரைக்கும் நான் எனக்கு இப்படி தான் வேனும் என்றே எடுத்ததில்லை,என்ன வாங்கி தராங்களோ அதான் எனக்கு பெஸ்ட்,
இவர் கிட்ட கூட நிறையா திட்டு வாங்குவேன்,ஒரு டிரெஸ் செலக்ட் பண்ண தெரியமாட்டிக்குதுன்னு,
நான் ஊரில் இருந்திருந்தால் இப்பவே உங்கவீட்டு அனுப்பி விடுவேன்.இங்கும் பிரெண்ட்ஸ் யாரையும் விட்டுவைக்கல, எல்லாத்துக்கும் ஒன்னு செய்து கொடுத்து இருக்கேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்னவென்று சொல்வது, பெண் ஸ்டான்ட் அவ்ளோ அழகு, அதும் அந்த குட்டி பொம்மை இன்னும் அசத்தல் எனக்கு அப்படியே குடுதிடுங்களேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

வால்ஹேங்கிங்ல கொடுத்த பதிவ இன்னைக்கு தான் பார்த்தேன். குழந்தைகளை வைத்து கொண்டு க்ராஃப்ட்காக நேரத்த ஒதுக்கி எங்களுக்காக செய்து அனுப்புறீங்க. ரொம்ப நன்றி. அன்ன பறவை பொறுமையா செய்து அனுப்புங்க ரேணு, ஒன்னும் அவசரம் இல்லை. நானும் பேப்பரை மடிக்க கற்றுக் கொண்டேன். 50 முக்கோணங்கள் தான் தேறி இருக்கு. இன்னும் நிறைய மடிச்சு வைச்சுக்குறேன்.

ரேணு,

பென் ஸ்டாண்ட் ரொம்ப அழகா இருக்கு. கலர் செலக்ஷன் அசத்தல்! பக்கத்துல போஸ் கொடுக்கிற அந்த குட்டி பொம்மை அதைவிட சூப்பர்! :) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!

ரொம்ப நாளாவே நினைச்சிட்டே இருக்கேன் ரேணு, உங்களோட இந்த பேப்பர் மடித்து செய்யும் முறையை கொஞ்சமா ஒரு சின்ன அளவில் ஒரு முறையாவது முயற்சி செய்துபார்க்கனும் என்று. இப்ப பொண்ணுக்கும் லீவும் விட்டாச்சு. இந்த முறையில் முதலில் செய்வதற்கு ஏற்றது எது, எப்படி ஆரம்பிக்கனும் என்று எதாவது எக்ஸ்ட்ரா டிப்ஸ் இருந்தால் சொல்லுங்களேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

wow romba azhaga iruku eppadipa ungaluku intha yosanai ellam thonuthuparkum bodhe ring ringa kalarpula iruku,very nice naan romba naala thediyathu kidaichiduchu,romba esiya iruku,naanum seithu vachikuren ,romba thanks

பிரேமா எப்படி இருக்கீங்க?உங்களுக்கு பிடித்ததில் ரெம்ப மகிழ்ச்சி.அட்ரஸ் கொடுங்க அனுப்பி வைச்சுட்டா போச்சு,ஆனால் இப்ப இந்த ஸ்டாண்ட் வீட்டில் இல்லை இவருடைய ஆபிஸில் இருக்கு,உங்களுக்கு வேற செய்து அனுப்பறேன்.

வினோ பேப்பர் மடிக்க ஆரம்பிச்சாச்சா?நல்லது தொடர்ந்து மடிங்க.குறைந்தது 100 லிருந்து 200 க்குள் வேணும்.என்ன பேப்பர் யூஸ் பன்றீங்க?

பூரணி உங்களுக்கு பிடித்ததில் ரெம்ப மகிழ்ச்சி.என் கணவர் ஆபிஸில் வைப்பது போல் அழகா ஒரு ஸ்டாண்ட் செய்து கேட்டார்,நானும் நிறையா வரைந்து காமிச்சேன்.ஆனால் அவர் ஒன்னுமே சொல்லல,நல்லா இருந்த ஆபிஸுக்கு எடுத்து போவேன் இல்லைன்னா நீயே வைச்சுக்கோனுட்டார்.எத்தனை டிசைன் பண்ணி பார்த்தேன்.கடைசியா இது எனக்கு இந்த டிசைன் பிடிக்கவே இப்படி செய்துட்டேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஸ்ரீ எப்படி இருக்கீங்க? பசங்க எப்படி இருக்காங்க?உங்க வேலை எப்படி இருக்கு?இன்னும் பிஸி டென்ஷன் தானா?பார்த்து பேசி எவ்வளவு நாள் ஆகுது?உங்க வாழ்த்து மற்றும் பாராட்டுக்கு ரெம்ப நன்றி ஸ்ரீ.

கட்டாயம் செய்து பாருங்கபா, செய்த பிறகு மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.

அண்ணப்பறவை பெரிது - 400+
அண்ணப்பறவை சிறிது - 150+
கேக் - 150+
பூ ஜாடி - 450+
வால் ஹங்கிங் பூ ஜாடி - 500+
பட்டாம் பூச்சி - 100+
மீன் - 25
குட்டி பிளவர் வேஸ் - 100+ இது கேனி படத்தில் இருக்கும் பாருங்க.
இதுல சிலது இன்னும் நான் அனுப்பல.அனுப்பனும் என்கிற எண்ணம் இருக்கு.ஒவ்வொன்னா அனுப்பறேன்.

ஸ்ரீ இதில் உங்களுக்கு எது ஆசைன்னு முடிவு பன்னுங்க,ஏ4 ஸைஸ் கலர் பேப்பர் கடையில் கிடைக்குது,வெள்ளை பேப்பருக்கு பழைய பேப்பர் பிரிண்ட் எடுத்தது இருந்தா கூட ஓ.கே.ஒரு பேப்பரை 2 மடிச்சு மடிச்சு கட் பண்ணுங்க ஒரு பேப்பர் 32 பீஸ் வரும்.இந்த லின்க் பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/15022

http://www.arusuvai.com/tamil/node/15023

வேனும்ங்கற அளவு மடிச்சுட்டு சொல்லுங்க,சேர்த்தறது ரெம்ப ஈஸி.

வேற தகவல் வேணும் என்றாலும் சொல்லுங்கப்பா கட்டாயம் சொல்றேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆர்காமி பேப்பர் கிடைக்கல. ஏ4 ஷீட் வெள்ளைநிறம் கொஞ்சம் வாங்கி வைச்சு இருக்கேன் ரேணு. சின்ன அன்னப்பறவைக்கு 150 போதும் சொல்லி இருக்கீங்க அதுவரைக்கும் மடிச்சு வைச்சுக்குறேன்.

வினோ ஆரிகாமி பேப்பர் வேண்டியதில்லை,நார்மல் ஏ4 சைசில் கலர் பேப்பர் கிடைக்குதுப்பா,நான் உங்களுக்காக குட்டி அண்ணபறவை தான் செய்திருக்கேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பென் ஸ்டண்ட் சூப்பரோ சூப்பர்.முக்கோண்மாக மடிக்க எப்படி பேப்பர் கட் செய்யனும்,எப்படி மடிக்கனும் என்று தனியாக செய்து காட்டியிருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு புரியும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா அக்கா எப்படி இருக்கீங்க?இப்ப எங்க இருக்கீங்க? அக்கா நான் ஏற்கனவே அப்படி அனுப்பி இருக்கேன்.இந்த லின்க் பாருங்க,http://www.arusuvai.com/tamil/node/15022

இது அனுப்பி 2 வருஷத்துக்கு மேலாகுது அல்லவா, அதான் யாருக்கும் தெரிவதில்லை,ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த லின்க் எல்லா குறிப்போடும் அனுப்புவேன்,இந்த முறை மறந்துட்டேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணு மிக்க நலம்.நான் அல் ஐனில் தான் இருக்கேன்.பதிலுக்கு நன்றி.அப்பா இதற்கெல்லாம் ரொம்ப பொறுமை வேணும்.எனக்கு அது நிச்சயமாக இல்லை.என் மகளிடம் காட்ட வேண்டும்.மிக கைதேர்ந்த வேலை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரேணு,

அப்பவே பதில் போடனும்னு நினைச்சேன். முடியாமப் போச்சு. :(
ஆமா, எவ்வளவு நாட்களுக்குபிறகு பேசறோம். நல்லா ஞாபகம் வைச்சி, ஆபீஸ், வேலை பத்தியெல்லாம் கேட்கறீங்க. மகிழ்ச்சியா இருக்கு! இப்ப பரவாயில்லை ரேணு, அப்பப்ப பிஸி, அப்பப்ப ஓக்கே! ;) சோ, நானும் அப்பப்ப காணாமப்போயிடுவேன்! :D

அப்புறம், எனக்காம எவ்வளவோ அழகா டீடெய்ல் கொடுத்திருக்கிங்க. ரொம்ப சந்தோஷம். உங்களோட மடிக்கும் முறை லிங்க்கை பார்த்து, மகள் போன வாரமே பேப்பர் மடிக்க ஆரம்பித்து விட்டாள். :) வெள்ளை பேப்பரில் 94 மடித்து வைத்திருக்கிறாள். இன்னும் கொஞ்சம் மடிச்சிட்டு எதாவது செய்துபார்க்கலாம்னு ஐடியா! மீண்டும் நன்றி ரேணு, உங்க பதிலுக்கு.

அன்புடன்
சுஸ்ரீ

ரொம்ப அழகா இருக்கிறது.
அக்கா நான் புதிய அங்கத்தவா்

அன்புடன்
ஜெயம் மெரினா

Give respect and take respect

நானும் உங்களை போல் பென் ஸ்டாண்ட் செய்யுது விட்டேன்.இன்று என் அவர் அலுவகத்தில் வைக்க கொடுத்து அனுப்பி உள்ளேன்.உங்களின் ஒரிகமி பூக்களின் decoration மாடல் க்காக காத்திருக்கிறேன். அடுத்த ப்ராஜெக்ட் அதுதான் .உங்களின் கைவினைகள் மிக அழகாக இருக்கின்றது . மிக்க நன்றி

pen stand supera irukku . i will prepare for it but i want to method (i can't paper cutting which size)

good hand craft pen stand i will try it but which size cutting the paper please send the method