அமெரிக்க தோழிகளின் அட்டகாசமான அரட்டை-2012...

அமெரிக்காவில மட்டுமில்லைங்க தூங்காம இருக்க யார் வேண்டுமானாலும் அரட்டைக்கு வாங்க!!! இது ஏன் இப்படி ஒரு தலைப்புன்னா,....... நானும் அரட்டை அடிச்சி ரொம்ப நாளாச்சு......... அதுமட்டுமில்லாம........
இங்கே தெரிஞ்சவங்க, தெரிஞ்சவங்க கூட மட்டும் தான் பேசுவாங்க போலிருக்கு!!! அதனால நாம ஏன் மத்தவங்களை தொந்தரவு செய்துகிட்டு!!!

சரி சரி....... தோழிகளே தயவு செய்து...... ஒரு வரியில பதிவு போடாம....... குறிப்பா ஏதாவது உருப்படியான விஷயத்தை பேசுங்க!!!

சம்மர் நெருங்குது...... ஹாலிடேஸ் வரப்போகுது!!! வெளிநாட்டில் இருக்கும் தோழிகள் என்ன என்ன பிளான்ஸ் வச்சிருக்கீங்க? இந்தியா போறீங்களா? இல்லை குழந்தைகள்ளுக்கு, உங்களுக்கு என, என்ன என்ன ஆக்டிவிட்டீஸ் வச்சிருக்கீங்க? பிக்னிக்ஸ், தீம் பார்க்ஸ், உங்க ஐடியாஸ் எல்லாம் எடுத்து விடுங்க....... கண்டிப்பாக பயன்படும் விதத்துல....... என்னோட(அறுசுவையோட) கண்டிஷன் """ ஒரு வரி பதிவுகள் வேண்டவே வேண்டாம்""""....... ஆங்கிலமும் வேண்டாம் இங்கே!!!

வாங்க எல்லோரும்.........

நான் முன்பே சொன்ன மாதிரி யார் வேண்டுமானாலும் வாங்க, ஆனா தீமோட இருக்கட்டும் உங்க பதிவு... ஒரே நாளில் பல அரட்டை இழை என்றில்லாமல்......... பல நாள் ஓடட்டும் இந்த இழை!!!

*** லாவண்யா இந்த பக்கமா வாங்க உங்க கூட கொஞ்சம் பேசணும்....

ஹலோ...
நீங்கள் போட்டிருக்கிற நிபந்தனைக்கு எல்லாம் ஏற்றவாறு இதை அடித்திருக்கிறேனா தெரியவில்லை... ஒன்றிரண்டு விட்டு போய் இருந்தால் மன்னிக்கவும் :)

நீங்கள் சொன்னது போல் என்னிடம் திட்டம் எல்லாம் இல்லை... யோசனை தான் வேண்டும்...

நான் இங்கே நியூ ஜெர்சி வந்து 8 மாதம் ஆகிறது... இன்னும் 3 மாதங்களில் சென்னைக்கு திரும்பி மீண்டும் வேலைக்கு போக வேண்டும் :( அதற்கு முன் முடிந்த அளவில் அருகில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கலாம் என்றிருக்கிறேன்... நயாகரா, கேம்டன் தவிர நியூ ஜெர்சி அடுத்து உள்ள நல்ல சுற்றுலா தளங்கள் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்...

நன்றி...

- பிந்து

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வந்துட்டேன்....சொல்லுங்க உமா....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்க எந்த ஊரில் இருக்கீங்க லாவண்யா? கொஞ்சம் சிம்பாலிக்கா சொல்லுங்க. நாம மீட் பண்ண முடியுமான்னு பார்த்து சொல்றேன். அப்புறம் எப்போவெல்லாம் ஃப்ரீ? சம்மர் பிளான் என்ன? சொல்லுங்க, நான் இந்த ஜுனில் கொஞ்சம் பிளான் வச்சிருக்கேன் அதனால தான்.

பெரும்பாலும் மதியம் ஒன்றிலிருந்து மூன்று வரை கொஞ்சம் ஃப்ரீ தான். இதுவரையில் ட்ரிப் ப்ளான் எதுவும் இல்லை. பசங்களை சில கம்யூனிட்டி கிளாசில் போட்டிருக்கிறேன். அப்புறம் ஸ்விம்மிங் கிளாஸ் தான் தேடிட்டிருக்கேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்களை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு சொல்லுங்க(இமெயில் கொடுங்க). நான் ஒரு வாரம் அந்த ஏரியாவிற்கு குடுப்பத்துடன் வருகிறேன். எங்க ஃபிரன்ட் வீட்டுக்கு அப்புறம் கொஞ்சம் வேலையும் கூட. நாம் மீட் பண்ண முடியுதான்னு பார்க்கலாம்.

நீங்க சதர்ன் பார்ட்ன்னு நினைச்சேன். அப்படின்னா ரொம்ப ஈசியா இருக்குமேன்னு தோனுச்சு. ஆனாலும் இப்போ பரவாயில்லை.

நானும் பையனை சம்மர் ஸ்கூலில் போட்டு இருக்கேன். அப்புறம் நிறைய ஆக்டிவிட்டீஸ் கண்டு புடிச்சி வச்சிருக்கேன். உங்க ஊரில் பாலவிஹார் நடக்குதா? ஹிந்து கம்யுனிட்டியில ஏதும் ப்ரோகிராம்ஸ் இருக்கான்னு பாருங்க.

என் பையனுக்கு pio card apply பண்ணிட்டு இருக்கேன் அதுல ஒரு சந்தேகம் யாரவது இப்ப இருந்தா பதில் போடுங்க

அன்புடன் அபி

எனக்கு உதவி செய்ய யாராவது உதவி பன்னுங்க பா

அன்புடன் அபி

Hi

Neenga online la erukeengala. Sorry enaku tamil la type pana therila. Nanum USA la erukuren. Neenga online la eruntha reply pannunga

Hi

மேலும் சில பதிவுகள்