இனிப்பு போண்டா

தேதி: January 15, 2008

பரிமாறும் அளவு: 30 போண்டாக்கள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குண்டு உளுந்து - 1/4 கிலோ,
சர்க்கரை - 1/2 கிலோ,
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


 

உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக, ஆனால் பொதுபொதுப்பாக அரைக்கவும்.
சர்க்கரையை 1 தம்ளர் தண்ணீர் விட்டு, கம்பி பாகு காய்ச்சவும். ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக (நெல்லிக்காயளவு) உருட்டி, எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாகில் போடவும். அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.


சர்க்கரைப் பாகு சூடாக இருக்கும் போதே போண்டா போட வேண்டும். மாவில் தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் எண்ணெய் குடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று இதைப் பார்த்ததும் திடீரென உளுந்தை ஊறப்போட்டு விட்டேன். ஆனால் இந்த கம்பி பாகு எப்படி காச்சுவது என கொஞ்சம் சொல்லுங்கள்.

நீங்கள் இதைப் பார்க்காவிட்டால், நான் ஏதோ எனக்குத் தெரிந்தவிதத்தில் செய்யப்போகிறேன். அத்துடன், உருண்டைகள் முளுவதும் பாகில் மூழ்குமளவிற்கா பாகை ஊற்ற வேண்டும்?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
நலமா? சாரிப்பா, இப்பத்தான் பார்த்தேன்.
பாகு காய்ச்சும் போது சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்கும் போது ஆள்காட்டி விரலால் தொட்டு கட்டை விரலை ஒட்டி பிரித்தால் ஒரு கம்பி போல இரு விரல்களுக்கு இடையே வரும். லேசாக வந்தால் போதும். ரொம்ப திக்காக வேண்டாம். அப்பத்தான் நன்றாக ஊறும்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நாம் நலம், நீங்கள் வீட்டில் அனைவரும் நலமா?நல்லதாப்போச்சு செல்வியக்கா,
அரைத்து விட்டேன், பொரிக்க முதல் ஒருதடவை பார்க்க வந்தேன். நீங்கள் பதில் தந்து விட்டீங்கள் நன்றி. நாளைக்கு விபரம் தெரிவிக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செல்வியக்கா, உங்கள் போண்டா மிகவும் நன்றாக வந்தது. வடை எப்பவும் செய்வதுதான், ஆனால் அதற்கு இப்படி ஒரு பாகு காச்சும் முறை, மிக நல்ல ஒரு வித்தியாசமாக இருந்தது. சுடச் சுட எல்லோரும் முடித்துவிட்டார்கள். எங்கள் வீட்டில் என்னைத் தவிர அனைவருமே இனிப்பு பிரியர்கள். படம் எடுத்தேன், சகோதரர் அட்மின் இணைப்பார், பாருங்கள், செய்தது சரிதானா என்று சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அப்பிடியே அந்த இனிப்பு போண்டாவை கொஞ்சம் கொரியரில் அனுப்பியிருக்கலாமே. ஏன் என்றால் நான் அதை படித்தேன். இடுப்பு பலம் தரும் என்று எனக்கு 2 வாரமாக இடுப்பு வலி தாங்க முடியல்லை அதனால் தான் இனியும் என் ராகசுதாவுக்கான ரெசிப்பி அனுப்பமுடியல்லை படத்துடன் ட்ரை பண்னி கொண்டு இருக்கேன்.மருந்து சாப்பிட்டு கொண்டு இருக்கேன். என் ஹ்ஸ்க்குட இணிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும்.

இந்த இனிப்பு போண்டாவையும் செய்யுங்கள். ஒரு வித்தியாசமான சுவை.
உங்களுக்கு இடுப்பு வலி எதனால் வந்தது. குளிர்நாடுகளில் குளிரால் ஏற்படும் இடுப்பு வலி, களுத்து பிடிப்பு, தலை இடி, முதுகுவலி இவைகட்கு ஒரு உடனடி மருந்து. oolong tea குடியுங்கள். இது ஒரு chinese green tea, chinese கடைகளில் கிடைக்கும்.

எனக்கு ஒரு chinese lady தான் சொன்னார். இப்போ இதுதான் என் கைமருந்து. கவனிக்கவும் குளிர் பிடித்ததால் வந்தவற்றிற்குதான் இது. ஒரு தேக்கரண்டி ஒரு கப்பிற்கு போட்டு 5 நிமிடங்கள் ஊறவிட்டு பின் வெண்சூட்டுடன் குடிக்கவேண்டும். செய்து பாருங்கள். சிகப்பு அல்லது பேப்பிள் நிற ரின்களில் கிடைக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரொம்ப நன்றி. நான் ட்ரை பண்றேன். என்னிடன் சில க்ரின் டீ இருக்கு.நான் கொஞ்சம் பேக்யார்டில் ப்ளாண்ட்ஸ் போட்டேன். நிற்ய்ய மண்ணை டிக் பண்னீட்டுந்தேன். ஆதனாலேயா என்று தெரியல்லை. இப்போ கொஞ்சம் பரவாயில்லை. நன்றி என்னிடம் க்ரின் டீ இருக்கு இன்று சாப்பிட்டு சொல்றேன்.

ஸாரி மன்னிக்கவும் இங்கு பதிவு போட்டதுக்கு வேற எங்கும் நுழய்ய முடியல்லை.

மேம் அத எப்பிடி நாங்கள் எல்லாம் உங்களை விட முடிய்மா? இங்க் பாருங்க நாங்க எல்லாரும் சேர்ந்து கேட்டதினால் தான் பாவம் கஷ்டபட்டு தேடி இதற்க்காக நிற்ய்ய டைம் எடுத்து போட்டிங்க அதற்க்காகவது நம்ம அட்மின் அவர்கள் ஒரு வாரமாது வைத்து இருக்கலாம். பாவம் நம்க்கு தெரிய்ல்லை யாரு அட்மினுக்கு கஷ்டம் கொடுத்தார்களோ அவர் வேண்டும்மென்று பண்னியிருக்கமாட்டார்கள். எல்லாம் நன்மைக்கே என்று நின்யுங்க. இந்த விஜிக்காகாவது வந்து நம்ம அருசுவைக்கு வாங்க. நாங்க உங்களை மிஸ் பண்ண விடமாட்ட்டோம். அட்மின் நல்லது தான் பண்ணுவார், கண்டிப்பாக ஒரு நன்மைக்கே என்று நினத்து கிளம்பி வாங்க, எங்க் சிரியிங்க, நிங்க எல்லாருக்கும் அறிவுரை குடுக்கிற இப்படி போய் மனம் தளராலாமா? வாங்க வாங்க அருசுவைக்கு

செல்வியக்கா அடிக்கப் போறா. பறவாயில்லை திட்டினாலும் பொறுத்துக்கொள்வோம்.

விஜி, கிறீன் ரீ நல்லதுதான். ஆனால் இந்த oolong tea . கேட்டு வாங்கி வைத்திருங்கள். என்ன தோட்டம் செய்கிறீங்களா? நானும் முன்னால் பூ மரங்கள், பின்னால் உருளைக்கிழங்கு,கரட், புறோகோளி,வெங்காயம், பீற்றுட், பீன்ஸ், கபேஜ் இவ்வளவும் கொஞ்சம் கொஞ்சம் போட்டுள்ளேன். கொஞ்சநாள் வயிற்று நோ, இடுப்பு வலி, இப்போ பறவாயில்லை. ஆனால் என்ன செய்வது, வெயில் காலத்தில் ஆசைக்கு எல்லாம் செய்ய வேண்டும். குளிர் வந்துவிட்டால் கூட்டுக்குள் இருப்பதுதானே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செல்வி மேம் ஸார், வேற எங்கும் நுழய்ய முடியாதினால் தான் இங்கு வந்தேன். மன்னிக்கவும் இந்த விஜியை.

இப்போ இங்கு ஸ்ப்ரிங் என் குழந்தைக்ள் கொஞ்சம் பூக்கள் எல்லாம் போட்டாங்க. நானும் என் ப்ரென்ஸ் எல்லாரும் போய் வாங்கினோம். ஸுக்கினி,தக்காளி,முள்ள்ங்கி,கீரை,பெரிய கத்திர்க்காய் எல்லாம் போட்டுள்ளேன். ஆமாம் உருளை எல்லாம் போட்டிங்களா, வாவ் எவ்வள்வு நாள் ஆகும் அதிரா வருவதற்க்கு. காய் வந்தவுடன் படம் எடுத்து அனுப்புங்க . எனாகு கார்டன் பண்ன ரொம்ப பிடிக்கும். நானும் அனுப்பறேன்.

அன்பு அதிரா,
பாராட்டிற்கு மிக்க நன்றி. எங்க பாட்டி அடிக்கடி இந்த பலகாரம் செய்வார்கள். இப்ப மாதிரி ஸ்நேக்ஸ் எல்லாம் அப்ப கிடையாது. உடம்புக்கும் நல்லது. இப்ப பிள்ளைங்க ரொம்ப நோஞ்சானாக இருக்காங்க. இது போல கொடுத்தால் வலுவாக இருப்பார்கள் (ஆண் பிள்ளைகளுக்கும்). நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த இனிப்பு போண்டாவின் படம்:
<br />
<img src="files/pictures/sweet_bonda.jpg" alt="sweet bonda" />

பொதுபொதுப்பாக என்றால் எப்படி?

அன்பு கவிதா,
பொதுபொதுப்பாகன்னா, நல்ல மசிய அரைக்கணும். தண்ணீரில் போட்டால் பந்து போல கரையாமல் மிதக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா
நான் கேட்டிருந்த யுகாதி பண்டிகை ஸ்வீட் இதுதான். இதில் சர்க்கரை பாகிற்கு பதிலாக வெல்ல பாகும் வைக்கலாம் அல்லவா?
பாகு பதம்தான் தெரியலை. சர்க்கரைபாகு ருசியும் சூப்பர்தான்!