Give Me Suggestion

தோழிகளுக்கு வணக்கம் ...
என்னுடைய குழந்தைக்கு ஒரு வருடம் 3 மாதம் ஆகிறது...நான் தாய்ப்பால் குடுப்பதை நிறுத்தலாம் என்று நினைக்கறேன்..ஆனால் குழந்தை பால் குடிச்சா தான் தூங்குறா..நைட் 11 மணிக்கு படுக்குறா..நல்லா வயிறு நிறைய குடுத்து தான் படுக்க வைப்பேன் ..ஆனால் 3 அல்லது 4 முறை எந்திரிகிரா...பால் குடிச்சா தான் தூங்குறா..என்னக்கும் பால் வருவது குறையவில்லை...அடிக்கடி breastpain வருது..பால் கட்டுது...முதுகு வலி இருக்கு ...என்ன பண்ண?

--

அப்பொ நீங்க இரண்டு வயசு வரை தொடரலாமே நல்லது தானே..ஆனால் ரெஸ்ட் கிடைக்க கஷ்டம் தான்...குழந்தை தாய்ப்பாலை மறந்தபின் தான் ஒழுங்கா தூங்கவும் தொடங்கும் அதுவரை இது தொடரும்.உங்களுக்கு ரொம்ப படுத்துசுன்னா மறக்கடிக்க வேண்டியது தான்

consult doctor

epdy marakka vaikarathu thalika?tell me plz..ava paal kudicha tha thugura?kudukala na kathura...dress a pidichu ilukura?na enna panurathunu therila?

Hope is necessary in every condition:)

நீங்க எடுத்தவுடன் நிருத்துவது கஷ்டம். நீங்க யவலவு பால் குடுக்கிறிங்கலொ அவளவு உங்க குழத்தைக்கு நல்லது. அட்வைஸ் பண்னுறெனு தப்பா எடுதுக்காதிங்க
இப்ப உள்ள காலத்துக்கு நம்ம 2 வயது வரைக்கும் குடுத்தால் தப்பில்லை.
கடவுள் நமக்கு குடுத்த வரம் தாய்பால். தாய்பால் இல்லமல் தன் குழந்தைக்கு பால் குடுக்க முடியாமல் யவலவு கஷ்டபடும் அம்மாக்கள் இருக்காங்க தெரிவுமா. தாய்பால் பொல ஒரு சிறந்த மருந்து எதுவும் இல்லை. 2 வயதில் நிருதுங்கல் தோழி ப்லிஸ்.

1) தாய் பால் குடுத்து கொண்டெ இணை உணவு குடுங்கல்,
காலையில் சத்து மாவு நல்லா தண்ணிராக தரவும்.
ஆப்பில் வேக வைத்து அதை மசித்து தரலாம்.
மதியம் சாததில் கஞ்சி வைத்து தரலாம்.
இது பொல தந்தா குழந்தை உங்களிடம் பால் குடிப்பதை கொஞ்சம் மறக்கும்.
2) பால் கட்டி கொண்டால் ஒரு பெரிய சிரஞ்சி எடுத்து ஊசியில்லாமல் சிரஞ்சியை மட்டும் எடுத்து பால் சுரக்கும் இடத்தில் வைத்து சிரஞ்சி முலம் பால் எடுக்கவும்
3) சுடுத்தண்ணீரில் ஒத்தடம் கொடுங்கல்
4) பால் கட்டிக்கொண்டு கஷ்டமாக இருக்கிறது என்றால் டாக்டர்ரிடம் மாத்திரை வாங்கி பொட்டுக்கொங்க..பால் வருவது நின்று விடும்
5) உங்கள் குழந்தை பால் கேட்க்கும் போது மார்பக காம்பில் வேப்ப இலையை அரைத்து தடவுங்கல் வாய் வைத்து குடிக்கும் முன் பாப்பா இத்து ஆய் குடிக்ககுடாதுனு சொல்லுங்க குடிக்காது.அதையும் மீறி குடிக்கும் என்றால் பால் கேக்கும் பொதுலாம் அதை தடவி குடுங்கள். கண்டிப்பாக பால் குடிப்பதை மரந்துவிடும். பின்பு நிங்கள் மாத்திரையை போட்டு பாலை நிருத்தலாம்

all is made up of love.

ஒன்னேகால் வருடம் தானே ஆகிறது. முடியுமால் இரண்டு வயது வரையிலும் கொடுக்கலாம். ஆனால் இரவில் பால் புகட்டும் பழக்கம் ரொம்பவே தப்பு. அது குழந்தையின் பார்க்கலை பாதிக்குமாம். இது என் குழந்தைகளின் மருத்துவர் சொன்னது. உங்களின் குழந்தை படுத்துவதை போலவே என் குழந்தைகளும் செய்தது. அதற்க்கு மருத்துவரின் ஆலோசனைப் படி நான் செய்தது.

இரவு தூங்க வைக்கும் முன்னர் பால் கொடுத்தீர்களே ஆனால் கண்டிப்பாக அதற்க்கப்புறம் சிறிதளவு தண்ணீர் கொடுக்கவும். இல்லையென்றால் சிறிதளவு பாலாவது அவர்கள் வாயிலே வைத்திருப்பார்கள். இது பல்லுக்கும் பல் ஈரலுக்கும் நல்லதல்ல. தீடீரென்று நிறுத்தினால் அவர்கள் பகலில் ரொம்பவே க்ரான்கியாகவே இருப்பார்கள்.

குழந்தை பால் எப்பொழுது குடிக்கிறது என்று நேரத்தை குறித்துக் கொள்ளுங்கள். ஒரு வாரம் வரை அவர்களின் ஷெட்யூல் பார்த்து நோட் பண்ணி வைக்கவும். பொதுவாக அவர்கள் ஒரே நேரத்தில் தான் எழுந்து பாலுக்கு அழுவார்கள். அதனால் அவர்கள் எழும் முன்னர் நீங்களே எழுப்பி பால் கொடுங்கள். ஆனால் எப்பொழுதும் கொடுக்கும் நேரத்தை விட ஐந்து நிமிடம் குறைவாகவே கொடுங்கள். இதே போல் ஒவ்வொரு முறையும் கொடுக்கவும். ஒருவாரம் வரையிலும் இதையே ஃபாலோ பண்ணவும்.

மறுவாரம் அதே போல் நீங்களே அவர்கள் எழும் முன்னரே எழுந்து மேலும் நேரத்தை கம்மி பண்ணவும். இதே போல் கொஞ்சம் கொஞ்சமாக கம்மி செய்யவும். கடைசியில் இரண்டு நிமிடம் அதற்க்கு பின் ஒரு நிமிடம் என்று அப்படியே நிறுத்தலாம். ஒருமுறை நிறுத்திவிட்டால் கண்டிப்பாக அந்த பழக்கத்தை திரும்பவும் ஆரம்பிக்கவே கூடாது.

இப்படி செய்வதால் நமது தூக்கம் கண்டிப்பாக கெடும். இது சில காலம் மட்டும் தான் அதற்க்கு பிறகு தானகவே அவர்கள் தூங்குவார்கள். இல்லையென்றால் இந்த இரவு ரொட்டீன் தொடருந்துட்டே இருக்கும். ஆல் த பெஸ்ட்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வணக்கம் ரேகா. தாய் பால் ஓரு சிறந்த மருந்து. என் குழந்தைக்கும் 1.3 வயதுதான் ஆனால் நான் 1.1 வயதில் பால் நிறுத்திட்டேன். ஆனால் இப்போ வருத்தபடரேன். அதன் பிறகு அவன் எடை கூடவே இல்லை. புட்டி பால் குடிக்கிராளா?. புட்டி பால் குடிக்கும் வரை பால் நிருத்துவது கஷ்டம். நான் தவிடு சாப்டேன் இது என் அனுபவம்.
இல்ல நீங்க நிருத்த நினைத்தால் முதலில் இனை உணவு பழக்கி விடுங்க.அதெய் போல் நீங்கலும் உங்கள் உணவில் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்திடுஙள். பத்திய சாதம் போல் சாபிடுங்க. நான் அப்படிதான் செய்தேன்.ஒரு மாததில் பால் குறைந்துவிட்டது.
எனக்கும் முதுகுவலி இருந்தது பால் குடுக்கும் போது தலையனைமுதுகுக்கு குடுத்துக்கோங்க. பால் குடுத்த பிறகு நிமுந்து படுத்துக்கங்க. ஒரு 5 நிமிடம் படுத்து ரெஸ்ட் எடுங்க. சத்து எல்லாம் பாலா மாறி வரதால அப்படி வலிக்கும்னு என் எண்ணம். பொறுக்கவே முடியலனா கன்சல்ட் டாக்டர்.

ஓரு வயசு ஆனதால தாய் பால் சீக்கிரம் செரிமானம் ஆகிடும். அதனலா திட உனவு எளிதா செரிமானம் ஆகிற மாரி குடுங்க. செரிலாக் ஓகே வா நு ட்ரை பன்னி பாருங்க இரவில்.ராகி கூழ் நான் குடுத்தென்.

Dreams Come True..

ans pana elarukum nantri pa..nan kandipa try pantren...enaku time ilathanala tamil la type pana mudila...sorry frnds...na kandipa two yrs varai en papa ku milk tharuven..thanks frnds...

Hope is necessary in every condition:)

மேலும் சில பதிவுகள்