குடும்பத் தலைவிக்கு பயன்படும் கணினி

அறுசுவையில் சமையல், கைவினை, பிரச்னைக்கு தீர்வு என எல்லோரும் அவரவருக்கு தெரிந்த விஷயங்களில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். நமக்கு தான் அது எதுவுமே தெரியாதே, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன்.. எப்படி பார்த்தாலும் எனக்கு ஏதோ கொஞ்சமாவது தெரிந்தது கணினி குறித்து தான்.. சரி அதை பற்றியாவது பேசலாமே என்று நினைத்தேன்... அதற்கு தான் இந்த இழை. ஏற்கனவே இருக்கும் கணினி குறித்த இழை பெரிதாக இருக்கவே, நான் புதிதாக ஒன்று தொடங்குகிறேன்.

பொதுவாக குடும்பத்தலைவிக்கு கணினி மூலம் ஏற்படும் பயன்கள் என தொடங்குவோம், எப்படி போகிறது என்று பார்த்து விட்டு, மற்ற பகுதிகளையும் எடுத்துக் கொள்வோம் :P

உங்களுக்கு ஏதாவது தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இருந்தாலும் சொல்லுங்கள் முடிந்தால் இங்கே பேசுவோம்..:D

மற்றவர்களும் உங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் :D

இந்த முதல் பதிவில் நான் சொல்ல போகும் விஷயம் பலருக்கும் தெரிந்ததாக இருக்கும். ஆனால் எப்போதும் பேசிக்ஸ்ல் இருந்து தொடங்குவது தான் சரி என்பது என் நம்பிக்கை அதனால் சின்ன விஷயத்தில் இருந்தே தொடங்குகிறேன். தெரிந்தவர்கள் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் எக்சல் அல்லது ஓப்பன் ஆபிஸ் ஸ்ப்ரெட் ஷீட்:
=========================================================
இதை பயன்படுத்தி பல விஷயங்கள் செய்யலாம்.
* பட்ஜெட் அல்லது வரவு செலவு கணக்கு
* சமையல் அட்டவணை
* பொருட்களின் எக்ஸ்பைரி தேதி விவரங்கள்
* மாத தேவையான மளிகை பொருட்கள்

இப்படி அட்டவணை அல்லது கணக்கு சம்மந்தப்பட்ட எதற்கும் எக்சல் பயன்படுத்தலாம். இதை சாதாரண காகிதத்திலும் குறித்து வைக்கலாம், ஆனால் எக்சலில் செய்யும் போது, ஒரே பட்டியலை reuse செய்ய முடியும், எனவே வேலை சுலபமாகும். அதே போல் கணக்கு சம்மந்தமாக பயன்படுத்தும் போது, வேண்டிய formulaவை டைப் செய்தால் நாம் கணக்கு போட வேண்டிய அவசியம் இல்லை.

எக்சல் பயன்படுத்துவது மிகவும் சுலபம். எக்சலை சரியான விதத்தில் பயன்படுத்தினால் நேரம் மட்டும் அல்ல நல்ல விதமாக திட்டமிட்டு வேலை செய்ய முடியும் :)

அடுத்த பதிவில் எக்சல் பயன் படுத்தி எப்படி வரவு செலவு கணக்கு நிர்வகிப்பது என்று சொல்கிறேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து நல்ல இழை துவங்கியிருக்கீங்க வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சொல்லுங்க அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

naal thoru arambam valthukal

benazirjaila

தொடர்ந்து சொல்லுங்க பிந்து

நல்ல முயற்சி.. தொடர்ந்து உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லுங்கள்.. எங்களுக்கும் உதவியாக இருக்கும்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

படங்கள் இல்லாமல் நாம் எக்சல் பயன்படுத்த போவதால் இந்த பதிவில் சில அடிப்படை கருத்துக்களை பார்ப்போம்...

உங்கள் கணினியில் இருக்கும் எக்சல் அப்ளிகேஷனை திறந்த உடன் வரும் அந்த எக்சல் பக்கத்திற்கு மொத்தமாக பெயர் வொர்க் புக்(WORKBOOK). பொதுவாக ஒரு புதிய வொர்க் புக்கில் மூன்று வொர்க் ஷீட்டுகள்(worksheet) இருக்கும். ஆனால் நமக்கு வேண்டிய விதத்தில் மேலும் வொர்க் ஷீட்டுகளை சேர்த்துக் கொள்ளவோ குறைத்துக் கொள்ளவோ செய்யலாம்.

மற்ற அப்ளிகேஷன்களை போல் மெனுக்கு கிழே கட்டம் கட்டமாக இருக்கும் பகுதி தான் நம் எக்சல் ஷீட்டின் முக்கிய பகுதி. ஒவ்வொரு கட்டத்தையும் ஒரு செல்(cell) என்று சொல்வோம். ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு பெயரும் உண்டு. நம் ஷீட்டின் மேல் நெடுவரிசையை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை பார்க்கலாம். அதே போல் இடது பக்கம் நிரை வரிசையை குறிக்கும் எண்களை காணலாம். இந்த நெடுவரிசை மற்றும் நிரை வரிசை எழுத்துக்களை இணைத்து தான் ஒவ்வொரு செல்லுக்கும் தனியான ஒரு பெயர் கிடைக்கிறது. உதாரணமாக,

' A B
' ______
'1|Z |Y |
' ______

இங்கே Z என்ற எழுத்து இருப்பது செல் "A1"ல். அதேபோல் Y இருப்பது செல் B1 ல்.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சரி இப்போது நாம் எக்சல் பயன்படுத்தி பட்ஜெட் போடுவது எப்படி என்று பார்ப்போம்...

ஸ்டெப் 1:
இன்று முதல் படியாக வரவை பட்டியலிடுவோம்.

1. ஒரு புதிய எக்சல் வொர்க்புக்கை ஓப்பன் செய்யுங்கள்.

2. A1 செல்லில் வரவு பட்டியலுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரை டைப் செய்யுங்கள். உதாரணமாக "Income".

3. இப்போது A2 செல்லில் தொடங்கி வரிசையாக நெடுவாக்கில் உங்களின் வரவு குறித்த விவரங்களை டைப் செய்யுங்கள். ஒரு எடுத்துக்காட்டுக்கு, இப்போது உங்களுக்கு வரவு, சம்பளம் மற்றும் வாடகை என்று வைத்துக் கொள்வோம். A2 செல்லில் Salary என்றும் A3 செல்லில் Rent என்றும் டைப் செய்யுங்கள்.

4. இப்போது ஒவ்வொரு வரவுக்கும் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை B வரிசையில் டைப் செய்யுங்கள்.

5. இப்போது உங்களுடைய விவரங்களை கொடுத்தாகி விட்டது. எக்சல் பார்முலா பயன்படுத்தி மொத்த வரவை கண்டுபிடிப்போம். உங்கள் கடைசி வரவின் பெயருக்கு கீழ் Total என்று டைப் செய்யுங்கள். அதற்கு நேரான B வரிசை செல்லில் மொத்த தொகை கண்டு பிடிக்கும் பார்முலா டைப் செய்ய வேண்டும். நீங்கள் இரண்டு வரவு விவரங்கள் கொடுத்திருந்தால், உங்களின் மொத்த தொகை விவரம் B4 செல்லில் வரும். எனவே அதில் <b>=sum(B2:B3)</b> என டைப் செய்து Enter பட்டனை பிரஸ் செய்யுங்கள்.
இந்த பார்முலா உங்களுடைய வரவு விவரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி மாறும். உதாரணமாக, நீங்கள் ஐந்து வரவு விவரங்களை டைப் செய்திருந்தால் B7 செல்லில் <b>=sum(B2:B6)</b> என்று டைப் அடிக்க வேண்டும்.

ஒரு சின்ன உதாரணம்:
<b>
' A&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;B
' ____________
'1|Income |&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;|
' _____________
'2|Salary &nbsp;| 5000 |
' _____________
'3|Rent &nbsp;&nbsp;| 5000 &nbsp;|
' _____________
'4|Total &nbsp;&nbsp;| 10000 |
' _____________
</b>

இப்போது ஒருவேளை நீங்கள் புதிய வரவு விவரம் ஒன்றை சேர்க்க வேண்டும் என்றால், கவலையே படவேண்டாம். உங்கள் மவுஸ் கொண்டு ஏதேனும் ஒரு வரவு விவரத்தை செலக்ட் செய்யுங்கள் உதாரணமாக A3 B3 செல்களை செலக்ட் செய்யுங்கள். பின் உங்கள் மவுசின் வலது பக்க பட்டனை கிளிக் செய்யுங்கள்.இப்போது "Insert" என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். பின் "Shift cells down" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து ஓகே என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு வேண்டிய விவரங்களை புதிய செல்ல்களில் டைப் செய்து கொள்ளலாம்.

தனியாக பார்முலாவை மாற்றும் அவசியம் இல்லை. நீங்கள் முன்பு அடித்த பார்முலாவே ஆட்டோமேட்டிக்காக இந்த புதிய தொகையையும் சேர்த்து காட்டும்.

இதுவும் எக்சல் பயன்படுத்துவதின் மூலம் கிடைக்கும் ஒரு பெனிபிட் ஆகும்.

ஒரு சின்ன உதாரணம்:
<b>
' A&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;B
' ____________
'1|Income |&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;|
' _____________
'2|Salary &nbsp;| 5000 |
' _____________
'3|Salary2&nbsp;| 5000 |
' _____________
'4|Rent &nbsp;&nbsp;| 5000 &nbsp;|
' _____________
'5|Total &nbsp;&nbsp;| 15000 |
' _____________
</b>

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து,

நல்ல முயற்சி..தொடருங்கள்..
தெரிந்த தோழிகள் இதில் நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
//பிந்து இதில் உங்களுக்கு ஆட்சேபம் இருக்காது என்று நினைக்கிறேன்//
இழை வெற்றி பெற வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பிந்து, இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பகுதியை தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்களின் பயனுள்ள பணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பிந்து, உங்கள் இழை வெற்றீ பெர வாழ்த்துகள்.

மேலும் சில பதிவுகள்