அக்ஷயதிரிதியை

நேற்று முடிந்த அக்ஷதிரிதியை எத்தனை பேரு வீட்டில் தங்கம் மற்றும் பொருட்கள் வந்து சேர்ந்தது. யார் கொண்டு வந்தது இந்த புது பழக்கத்தை? எத்தனை வருடங்களாக இந்த பழக்கம் இருந்து வருகிறது. என்ன ஒரு வியாபார யுக்தி பாருங்களேன்? அதையும் மக்கள் நம்பி ஏமாந்து போகிறார்கள். ஏன் மற்ற நாட்களில் அவர்கள் பொருட்கள் வாங்கியதே இல்லையா? அதுவும் இந்த முறை வெள்ளை நிற பொருட்கள் வாங்க வேண்டுமாம். ப்ளாடினம் தான் வெள்ளை நிறமா? உப்பு, சர்க்கரை கூடதான் வெள்ளை நிறம். அதை எத்தனை பேர் வாங்கி இருப்பார்கள் என்பது தெரியவில்லை. இந்த விதமான மூட நம்பிக்கையை பற்றி அறுசுவை தோழிகளின் கருத்து என்னவோ?

நீங்கள் சொன்னது 100% உண்மை. ஆனால் இதை யாரும் ஒற்றுகொள்ளமாட்டார்கள்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

நான் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள். அந்தக் காலத்தில் நல்ல சிந்தனையை வளர்த்தார்கள். அட்சய திருதி அன்று தயிர் சாதம் கலந்து தானம் செய்வார்களாம். பாருங்கள். நல்ல கோடைகாலம். வயிறு குளிர தயிர் சாதம் தானம் செய்தார்கள். வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் என்பார்கள்.
இதெல்லாம் நீங்கள் சொல்வது போல் வியாபார யுக்தி தான். தங்கம் வாங்கி மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்று சொல்லிப்பாருங்களேன். எல்லா நகைக்கடைகளும் அன்று காலியாக இருக்கும்.
அன்று நான் செய்தது.
செய்ததை வெளியே சொல்லக் கூடாதுதான். ஆனாலும் இதைப் படித்து யாராவது ஒருவர் நல்லது செய்தாலும் நமக்கு சந்தோஷம்தானே.
வயதான ஒரு ஏழைத் தம்பதிக்கு காட்டன் புடைவை, சட்டை, வேஷ்டி, துண்டு வாங்கிக் கொடுத்தேன்.
ஒரு குழந்தைக்கு கொஞ்சம் ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் வாங்கிக் கொடுத்தேன்.
தயிர் சாதம் கலந்து அந்தத் தம்பதிக்கும், ஆபீஸில் நண்பர்களுக்கு விநியோகித்தேன்.
ரொம்ப வருடங்களாக இது போல் மிகச் சிறிய அளவில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி'கா,
நல்ல வேலை செய்தீர்கள்...
இது போல நல்ல உபயோகமாக செய்ய நம் ஊரில் இருந்தால் தான் நல்லது.
இங்கே யாருக்காவது தர யோசித்தாலே ஜெயில் தான் நியாபகம் வருகிறது.

இனி அடுத்த அட்சய திருதிக்கு தடபுடலா தயிர் சாதம் தான் விநியோகம்...

கோவிலில் வைத்து அனைவருக்கும் கொடுக்கலாம் அல்லவா???
ஒரு 4 குடும்பம் இருக்கிறோம்... எல்லாம் சேர்ந்து கண்டிப்பாக செய்யலாம்...

பார்ப்போம் கடவுள் என்ன செய்கிறார் என்று!!!

தொடருங்கள் இது போல என்ன விஷயத்திற்கு என்ன செய்யலாம் என டிப்ஸ் கொடுங்கள் ப்ளீஸ்....

நான் இப்போதான் இத பார்த்தேன், மேடம் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். உண்மையிலேயே அந்த தம்பதியும், குழந்தைகளும் உங்களை மனதார வாழ்த்தி இருப்பார்கள், atleast நன்றியாவது சொல்லி இருப்பார்கள். செய்ததை வெளியில் சொல்ல கூடாது தான் ஆனாலும் இதை போல் தோழிகளுடன் பகிர்ந்துக் கொண்டால் மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும். தொடரட்டும் உங்கள் சேவை. அதிகமாக செய்யவில்லையென்றாலும் மற்றவர்கள் பயனடைய செய்தாலே ரொம்ப சந்தோஷம் இல்லையா?

நிச்சயமா இப்டி கொண்டாடுற விஷேஷம் ரொம்ப திருப்தியா இருக்கும்..

கொஞ்ஜம் என்னை கவனிங்களேன் .. :)

கொஞ்ஜம் கர்பிணி பெண்கள் பகுதில என் கேள்விக்கு பதில் சொல்லுங்க friends..

மேலும் சில பதிவுகள்