தேதி: August 9, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காலிஃப்ளவர் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
உப்பு - தேவைக்கு
அரைக்க 1:
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
இஞ்சி - அரை இஞ்ச்
தேங்காய் துருவல் - கால் கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
அரைக்க 2:
தக்காளி - 3
அரைக்க 3:
முந்திரி - 10
பால் - 25 மில்லி
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கு
பட்டை, கிராம்பு
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
அரைக்க கொடுத்த சின்ன வெங்காயம் கலவை தனியாக அரைக்கவும். தக்காளி தனியாக அரைக்கவும். முந்திரியில் பால் சேர்த்து தனியாக அரைக்கவும்.

காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடு வேக வைத்து எடுக்கவும். உருளையையும் வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா கலவை, உப்பு சேர்த்து வதக்கியதும் தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.

சுருள வதங்கியதும் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

கிரேவி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

காலிஃப்ளவர் கிரேவி தயார். இது சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு பொருத்தமாக இருக்கும்.

Comments
hai
யம்மி,டேஸ்டி கிரேவி
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
சுவர்ணா அக்கா
சுவர்ணா அக்கா ...தொடர்ந்து கலக்கலான குறிப்புகளா கொடுக்குறீங்க:) ம்ம்ம்...... சூப்பர்!
கடைசி படம் செம அழகு ....வாழ்த்துக்கள் !
காலிபிளவர் ரொம்ம்ப பிடிக்கும்
காலிபிளவர் ரொம்ம்ப பிடிக்கும் விருப்ப பட்டியலில் சேர்திட்டேன் சுவா
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
musi
musi மிக்க நன்றி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஜெபி
ஜெபி விடாம எல்லா குறிப்புகளிலும் பதிவிட்டு உற்சாகப் படுத்துறீங்க மிக்க நன்றி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நிக்கி
ஹாய் நிக்கி சேம் பிஞ்ச் எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)
விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சா மிக்க நன்றி,என்னை சுவான்னு நம்ம கல்ப்ஸும்,ரேவும்தான் கூப்பிடுவாங்க இப்போ நீங்களும் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வரு
ஸ்வரு
இத்தனை பொருட்களை அரைத்து செய்யும் கிரேவி எப்படி இருக்கும்னு கற்பனை பண்ண முடியுது ..
செய்துட்டு சொல்றேன். வீட்டுல எல்லா பொருட்களுமே இருக்குது :)
வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சுவர்ணா
சூப்பர் யம்மி க்ரேவி. ட்ரை பண்றேன். காலிஃப்ளவர் கிடைக்கட்டும். இப்போ இல்ல. சப்பாத்திக்கு எத்தனை வகை சொல்லி கொடுத்தாலும் ட்ரை பண்ணிடுவேன். :) வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
காளிஃப்ளவர் க்ரேவி
காளிஃப்ளவர் க்ரேவி ......எனக்கும் ரெம்ப பிடிக்கும் சப்பாத்தி செய்யும் போது இதை செஞ்சு பாக்குறேன் வாழ்த்துக்கள் .
ஸ்வர்ணா
ஸ்வர்ணா நல்லா இருக்கு கிரேவி செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
ரம்ஸ் :)
ரம்ஸ் எப்படிப்பா இருக்கீங்க? பார்க்கவே முடியல
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க மிக்க நன்றி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வனி
வனி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி,கிடைத்ததும் செய்து பாருங்க கண்டிப்பா பிடிக்கும் உங்களுக்கு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மஹா
மஹா மிக்க நன்றி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
குமாரி
குமாரி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவா
சுவா, அரைக்க, அரைக்க மாளல பா ;)) காலிபிளவர் - உருளை என் பேவரட் காம்பினேஷன்ஸ். அதில் எனக்கு பிடிச்ச சரக்கு அத்தனையும் அரைச்சு தள்ளி மணக்க மணக்க வச்சிருக்கீங்க. இத்தனை நாள் எப்படி பார்க்காம விட்டேன்னு தெரியலப்பா. இன்னைக்கு தான் போட்டோவில் பேக் க்ரண்ட் பார்த்தேன். அடாடா.. நம்ம சுவா குறிப்பாச்சேன்னு உள்ளே வந்தேன் பா. சீக்கிரமே நானும் காலிப்ளவர் வாங்கி அரைச்சு தள்ளி சாப்ட்டு பார்த்துடறேன் பா. வாழ்த்துக்கள் சுவா. :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
ஸ்வர்
ஹாய் ஸ்வர்,
கரெக்டா கண்டு பிடிச்சுட்டேன் நீங்கதான்னு,கிரேவி சூப்பராயிருக்கு ஸ்வர்.
போட்டோஸ் எப்பவும் போலவே அழகு ஸ்வர்.
சுவையான குறிப்பு,அசத்தலான படங்களோடு,வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்
தங்கப்பெண்ணே.
அன்புடன்
நித்திலா
கல்ப்ஸ்
கல்ப்ஸ் நீங்களா நீங்களா !!!! எங்க போய்ட்டீங்க பார்க்கவே முடியல அப்பாடா இந்த மாதிரி பேக் க்ரவுண்ட்லாம் கொடுத்துதான் ஆளை வெளில கொண்டுவர வேண்ட்டியிருக்கு :)
ஆனா இப்படி மாளலன்னு சொல்லிட்டீகளே அய்யகோ ;)
எவ்வளவோ சமாளிச்சீங்க இத சமாளிக்க மாட்டீங்களா சும்மா அடி(ரை)ச்சி விடுங்க அப்பால வந்து சொல்லுங்க ஹிஹிஹி ;)))
மிக்க நன்றிப்பா வாழ்த்துக்களுக்கு.....
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நித்தி
ஹை நித்தி :)
கரெக்டா கண்டு பிடிச்சிட்டியா பா குட்கேர்ள்:) வாழ்த்திற்க்கும்,பாராட்டிற்க்கும் மிக்க நன்றி நித்தி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
காலிஃப்ளவர் கிரேவி
romba arumai, I like it.
nice
காலிஃப்ளவர் கிரேவி நேற்று செய்தேன், திக்கா கிரேவி சப்பாத்திக்கு நல்லா இருந்தது, ஆனா குருமா டேஸ்ட் மாதிரி இருக்கு
தோழி சுவர்ணா காலிஃப்ளவர்
தோழி சுவர்ணா காலிஃப்ளவர் கிரேவி நேற்று சப்பாத்திக்கு செய்தேன். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்
துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன
Swarna...
Nethu nyt ku unga cauliflower gravy thaan chappathi kooda:) sema combination... romba tasty ah vandhadhu. thanks swar...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
superb
simple and supberb this cauliflower gravy i tried at home really easy.thanks for sharing this dish................good combination for chappathi thanks a lot onceagain
i like kaliflower
hi friends in all so, joint
swarna
Intha grave seithen romba nalla irunthathu
ஹாய் Swarna....
உங்கள் குறிப்பு செய்து பார்த்தேன்் ரொம்ப நல்லா இருந்தது, குட்டீஸ் வாசனண பிடித்து சமயலறைக்கு தட்டை தூக்கிட்டு வந்தாச்சு,வாழ்த்துகள்****