சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

ஸ்கந்தா,
இன்றைய என்னுடைய கணக்கில தேங்காய் பால் ரசம் (நிஷா) & அரைத்த குடைமிளகாய் கறி (மங்கம்மா)சேர்த்துக்கோங்க...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஷமீலா, ஸ்கந்தா, கனிமொழி, அனுஷ்யா,
புது அக்கவுன்ட் தொடங்கிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... ஆல் தி பெஸ்ட் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி ரேவதி... உங்களின் குறிப்புகள் எல்லாமே மிக அருமை :) செம டேஸ்டியாக இருக்கிறது :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா,
கணக்கு வேலை எல்லாம் எப்படி போகுது???
ஏதாவது உதவி வேண்டும் என்றால் கேளுங்கள்... ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இது வரை
தோழி ரேவதி, மங்கம்மா, நிஷா குறிப்புக்கள்:
பிந்து (6): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, பாவ் பாஜி, மாங்காய் சாதம், அரைத்த குடைமிளகாய் கறி, தேங்காய் பால் ரசம்
உமாகுணா (6): செட்டிநாடு புலாவ், சப்பாத்தி ரோல், சப்பாத்தி தால், பருப்பு ரசம், மசாலா கறி, பொங்கல் சாம்பார்
வனிதா (5): இட்லி பொடி, புதினாமல்லி சட்னி, செட்டிநாடு புலாவ், தேங்காய் பொடி, எலுமிச்சை ரசம்
சமீஹா (4): சப்பாத்தி தால், செட்டிநாடு புலாவ், தவா சிக்கன், சம்பா கோதுமை ரவை அடை
கனிமொழி (4): சிக்கன் நூட்லஸ், சம்பா கோதுமை ரவை அடை, தேங்காய் பொடி, தேங்காய்பால் புளிசாதம்
ரம்யா (4): ஈசி பிசா, செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, மினி பூரி மசாலா
ஸ்கந்தா (4): முட்டை பூஜ்யா, பருப்பு ரசம், புதினாமல்லி சட்னி, செட்டிநாடு புலாவ்
மஹா சிவா (3): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, வடகறி
அனுஷ்யா (3): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, பயத்தம் பருப்பு பாயாசம்
இந்திரா (3): முட்டை பூஜ்யா, வடகறி, நெத்திலி குழம்பு
சரண்யா (2): சப்பாத்தி ரோல், புதினாமல்லி சட்னி
சுஸ்ரீ (2): ஈஸி பீஸா, முட்டை பூஜ்யா
ஷமீலா (1): மினி பூரி மசாலா

ஸ்கந்தா, சூப்பர் அக்கவுண்டன்ட்ன்னு நிருபிச்சிட்டீங்க :) நன்றி...

யாருக்கேனும் ஏதாவது குழப்பம் / கேள்வி இருந்தால் கேளுங்கள்... ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா நேற்று நான் குழிப்பணியாரம் (ரேவதி) செய்தேன் என்னோட கணக்குல பொடுக்கோங்க :)

அன்புடன்,
லலிதா

புது கணக்கு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் லலிதா :-)

நேற்று, உங்க அக்கா உங்களை தேடிட்டு இருந்தாங்க :) இன்னைக்கு மறக்காமல் அவங்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிடுங்க...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா,இன்று மதியம்,[மங்கம்மா]அவர்கலின் பருப்பு ரசம்,ரேவதியின் முட்டை பூஜ்யா,

பிந்து நன்றி...

அன்புடன்,
லலிதா

அன்புடன்,
லலிதா

மேலும் சில பதிவுகள்