அறுசுவை உறுப்பினர் அனைவரும் Flash back

அறுசுவை உறுப்பினர் அனைவருக்கும் வணக்கம்

நான் தான் மஹாபிரகதீஸ்,உங்களில் பலபேருக்கு என்னை தெரியாது,இந்த திரட் மூலமாக என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன். அனைவரும் ஒருவழியாக தோட்டகலையில் ஈடுபட்டு செடியை வளர்க்க ஆரம்பித்திருப்பீர்கள்.செடி வளர்ந்து வரட்டும் நாம் அந்த இடைவேளையில் நாம் அனைவரும் flashback போகலாம் வாருங்கள்.

1.இப்பொழுது குறிப்புகள் கொடுக்கும் நாம், முன்பு சமையலில் தவறு செய்து முழித்திருப்போம்,அதை சமாளிக்க ஏதேனும் செய்து நல்ல பெயரும் வாங்கியிருப்போம்,அல்லது நல்ல அசடும் வழிந்து இருப்போம் அதில் ஏதேனும் இருந்தால் இங்கே கூறலாம், நாங்களும் ENJOY பண்ணுவோம்ல,
2.ஏதோ சமைக்க இறங்கி ஏதோ சமைத்திருப்போம்
3.சமையலில் கத்துக் குட்டியாக நாம் இருந்து ஏதேனும் Bacholars சாப்பிட வந்தால் அவங்க பாடு திண்டாட்டம் தான்.

என்ன எல்லாரும் ஒன்றுமே தெரியாது போல் இருக்கிறீங்க ஏதாவது இருந்தால் share பண்ணுங்க

மஹா இதற்கு முன் இப்படி ஒரு த்ரெட் இருந்தது அது பாதியில் உறையாடல் முடிந்து போனது..திரும்ப போட்டீர்க நன்றி..பிறகு சொல்கிறேன்
என் சித்திக்கு காய்ச்சல் வரவே என் சித்தி மகளிடம் பருப்பு வைக்க சொன்னார்கள் ஜீரகம் சேர்த்து.சாப்பிட உட்கார்ந்த தம்பி நல்லாவே இல்லை என்றான்..அவளிடன் கேட்டபொழுது நான் சரியாக தான் செய்தேன் என்றாள்..என்ன்டா இது வம்பு என்று கிச்சனுக்கு கூட்டிப் போய் ஜீரகத்தை காட்டு என்றதற்கு அவள் காட்டியது ஏலக்காய்.
அப்பொ தான் விவரம் புரிந்தது எதனால் பருப்பு வெறுப்பாகியதுன்னு.இது போன வாரம் நடந்தது

எனக்கு தெரிந்த ரஸியா,ஜலீலா,விஜி,kr,வின்னி,
எனக்கு தெரிந்த ஆனால் என்னை தெரியாத மர்ழியா, தளிகா,காயத்திரி, அதிரா,இலா,அனிக்ஷா
அனைவரும் வாருங்கள் அள்ளி அள்ளி தாருங்கள் உங்கள் flashbackai

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

இது நடந்து ஒரு 2 வருஷம் இருக்கும்... ஒரு பிரெண்ட் அவங்க அம்மா அப்பாவுடன் நியுயார்க் சுத்திபாக்க வந்தாங்க... நானும் ரொம்ப சமத்தா.. காலைல ப்ரெக்பாஸ்ட் சாப்பிடே போகலம்ம்ன்னு சொல்லியாச்சு.. 2 விதமா சட்னி/சாம்பார்ன்னு தட புடல்..
சரி அஞ்சாறு பேர் இருக்கோமேன்னு இட்லி ஊத்தி வச்சா.. வழக்கமா ஒரு குஷ்பூவுக்கும் நமீதாவிக்கும் இடைதரமா இருக்கும்.. இன்னைக்கு பாத்து... வடிவேலுக்கும் ஓமகுச்சி நரசிம்மனுக்கும் இடைதரமா வந்துச்சி... செரி... தோசையாவது சுட்டு சமாளிபிகேஷன் பண்ணலாம்ம்ன்னு பாத்தா... தோசை கல்லோடு சுருண்டு போகுது... வந்தவரோ ரொம்ப கலாய்ப்பாரு... என்னங்க தோச சுட சொன்னா பெட்ஷீட் மாதிரி மடிகிறீங்கன்னு சொல்லி ரொம்ப கலாச்சிட்டாரு... எப்படியோ... கொஞசம் அரிசி மாவு கலந்து அப்படி இப்படின்னு பிச்சிட்டு போன தோசையை வித விதமான சட்னி எல்லாம் வச்சு ... சாப்பிட்டாச்சு...

போகும் போது சொன்னது " சட்னி ரொம்ப நல்லா இருந்துச்சி.. ரெசிபி சொல்லுங்க" நானோ ஙே!! ஙே!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் மஹாபிரகதீஸ் நலமா?என்னை ஓஹ் உண்மையில் இப்போதான் கேள்விபடுறேன்..நைஸ் டு மீட் யூ....

பிலாஸ்பேக்?புரியல என்ன பிலாஸ் பேக் வேணும் சொல்லுங்க தர தயாராக இருக்கோம்...

இலா...அய்யோ மறந்தும் கூட உங்க வீட்டு பக்கம் வர மாட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மகா இபோதான் மேலே இஉர்க்கும் தலைப்பையே பார்த்தேன்....சாரிப்பா திடிர்னு பிலாஷ் பேன்னுனதும் புரியல...பிறகு கண்டிபா போடுறேன்...அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இது எங்க கல்யாணம் ஆன புதுசுல நடந்தது. காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம் நடந்ததால, சமையல் நாலெட்ஜ் சுத்தம்:)) வரும் போதே பெரிய பெரிய குக்கிங் மேனுவல்ஸ்ம் (!?!) சீதனமா கொண்டுவந்தேன். என் ஹஸ் ரொம்ப பெருந்தன்மையா ஒரு 10 நாள் நான் எப்படி சமைக்கனும்னு காமிக்கிறேன், அப்புறம் நீ சமைக்கலான்னார். நான் அதைவிட பெருந்தன்மையா பரவாயில்ல நானே சமைக்கிறேன், எங்கிட்ட குக்கிங் புக் எல்லாம் இருக்கு. உங்களுக்கு என்ன புடிக்குமோ சொல்லுங்கன்னு பந்தாவா லிஸ்ட் எல்லாம் வாங்கிட்டேன். அவருக்கு புளி குழம்பு புடிக்கும்னு சொன்னதால , எல்லா புக்கையும் புரட்டி எனக்கு புடிச்ச ரெசிபியை எடுத்து ஒரு வழியா சமைச்சு முடிச்சுட்டு சாப்பிடு பார்த்தா சும்மா சொல்லக்கூடாது காரசாரமா நல்லாவே இருந்தது. இவருக்கு போன் செஞ்சு வரச்சொன்னேன். அவர் கூட ஒரு ஆந்திரா ப்ரண்டையும் கூட்டிட்டு வந்தார். எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சோம். அந்த அக்காவும் ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டிக்கிட்டு என் கூட பேசிகிட்டே சாப்பிட்டு இருந்தாங்க. திடீர்னு அழுகிற சத்தம் பார்த்தா இவரு. என்னாச்சுன்னு பார்த்தா காரம் தாள முடியலைன்னார். எங்க 2 பேருக்கும் நார்மலாதான் இருந்தது. பாவம் உண்மையிலேயே கண் எல்லாம் சிவந்து புது பொண்டாட்டி சமைச்சதை ஒன்னும் சொல்லமுடியா அவரு கண்ல தண்ணி வழிய சாப்பிட்டு இருந்தைப்பார்த்து எங்களுக்கு சிரிப்பு தாங்கலை. அதை இப்ப நினைச்சாலும் சிரிப்பு தான்.
Rajini

போகும் போது சொன்னது " சட்னி ரொம்ப நல்லா இருந்துச்சி.. ரெசிபி சொல்லுங்க"

இதைவிட ஜென்டிலா யாரும் "குட்ட" முடியாது. இலா சூப்பர்
Rajini

நாங்க வருவோமில்ல... வந்து அஙகயும் அலப்பரதான்...
இதே பிரெண்ட் வீட்டுக்கு போய்.. வந்த விஷயம் என்னான்னா... அவங்க மேங்கோ லஸ்ஸியும்/ பக்கோடாவும் செய்தார்கள்... நானோ ரொம்ப டயட் கான்சியஸ்ன்னு பீலா விட்டுட்ட்டு... சரி சரி நீங்க பக்கோடா போடுங்க நானே டீ போட்டுக்குறேன்னு சொல்லி டீயும் போட்டாச்சு... இஞ்சி ஏலக்காய் எல்லாம் போட்டு... வந்த மற்ற 2 நண்பர்களயும் டீ குடிக்க கட்டாயம் வேறு.. அப்புறம் என் கணவரிடம் எனக்கு டீ குடிக்க கம்பெனி குடுங்கன்னு சொல்லி ரெண்டு பேரும் டீ கப்பில் ஊத்தியாச்சு.. ஒரு வாய் குடிச்சவர்.. யாருக்கும் தெரியாம மெதுவா.. டீல என்ன போட்டேன்னார்.. அப்போதான் புரிஞ்சது... சக்கரைக்கு பதில் உப்பு போட்டாச்சுன்னு...

கேக்கவா வேணும் மானம் கப்பலேரி... கண்டம் விட்டு கண்டம் போகுதுன்னு...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என்னது "குட்டா" அப்போ அவங்க எனக்கு பல்பு தான் குடுத்தாங்களா... ஆ!!... நங்க குட்ட குட்ட குனிய மாட்டோமில்லா... கொஞ்சம் குனிஞ்சாலே போதும் அவங்களுக்கு நான் எட்ட மாட்டேனே....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, இதைத்தான் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் சொன்னங்களா. பாவம் உங்க ப்ரன்ட்ஸ். நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க அந்த ஏரியா பக்கமே வரமாட்டேன்
Rajini

மேலும் சில பதிவுகள்