வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.
கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)
புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.
தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.
"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:
<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)
இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)
விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.
(நன்றி வனிதா :))
வாழ்த்துக்கள்.
சமைத்து அசத்தலாம் பகுதியில் வெற்றி பெற்ற அனுஷ்யா, ரம்யா, சுஸ்ரீ மூவருக்கும் வாழ்த்துக்கள்.இந்த பகுதியை பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கும் பிந்துவுக்கும்,கணக்குபிள்ளை ஸ்கந்தாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அடுத்த முறை பாருங்க போட்டி போட்டா போட்டியா இருக்கப்போகுது ;)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மிக்க நன்றி :)
வனிதா, ரம்யா, ஷமீலா, உமா, வினோஜா, இந்திரா,சுவர்ணா,
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :)
ஸ்கந்தா, மீண்டும் கணக்கு பிள்ளையாக வர சம்மதித்தர்க்கும் ஒரு சிறப்பு நன்றி ;-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
பிந்து, ஸ்கந்தா
மிக்க நன்றி :)
எடுத்த காரியத்தை இனிதே முடித்து கலக்கிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்!! பாராட்டுக்கள்!!
வாழ்த்துக்கள் சொன்ன அத்தனை தோழிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! :)
வெற்றி பெற்ற அனைவருக்கும், மற்றும் பங்கு கொண்ட தோழிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(மன்னிக்கனும், பகுதி 2ஏ தொடங்கி விட்டது, நான் இங்கே முன்பே பதிவிட்டு விட்டதாக நினைத்துகொண்டிருந்தேன், திடீரென்று இப்போதுதான் ஸ்ட்ரைக் ஆச்சு! :) ஹிஹி...ஹி :))
ஓக்கே, பகுதி 2ல் தொடர்ந்து சந்திக்கலாம்! :)
அன்புடன்
சுஸ்ரீ