எழுத்தில் அர்ஜுனுக்கு ஆர்வமே இல்லை

ஹாய் எல்லோரும் நலமா? மறுபடி கேள்வியோட வந்துட்டேன். என் பையனை ஸ்கூலில் சேர்த்து 3 மாதமாச்சு. எழுத்தில் அவனுக்கு ஆர்வமே இல்லை. அவனுக்காக தான் நானும் அவனோட ஸ்கூலில் +1 மேத்ஸ் டீச்சரா போனேன். இப்போ என்னோட வேலையில் அவனை கவனிக்க முடியலை. ஸ்கூலில் போகும் ஸ்பீடுக்கு அவன் வரமாட்டேங்குறான். சரியா எனக்கு கோவம் வருது. மெதுவா அடிக்காம சொன்னாலும் கேட்க்க மாட்டேங்குறான். அம்மா நாம விளையாடுவோமான்னு தான் கேட்குறான். சேட்டையும் ஓவர். ஸ்கூலில் ஒரு பையன் கடிக்கிறான்னு அவனை தனியா உட்கார வச்சிருக்காங்க. அவன்கிட்ட போய் நீ முடிஞ்சா என்னை கடின்னு கைய காமிச்சு அவன் கடிச்சி வச்சிட்டான். நான் வீட்டுக்கு வந்து குளிக்க வைக்கும் போது தான் சொல்றான். உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனோம். மறுநாளில் இருந்து இவனை நல்லா கேர் எடுத்துக்க சொல்லிட்டு வந்தும் இன்னொரு குழந்தை கிளாஸ் மேம் பென்னை எடுத்திருக்கான் அதை இவன் கேட்க அவன் இவனோட முகத்தில் கீறி ரத்தம். அவங்க மிஸ் பாவம் யாரோ பேரன்ட்ஸ்கிட்ட பேசிட்டு இருந்திருக்காங்க. 2 இன்சிடன்ட் நடந்ததாலே நான் அவனை கிளாஸ் மாத்திட்டேன். ஆனா இவனை தான் என்னால் மாத்த முடியலை.வம்பை விலை குடுத்து வாங்குறான். படிப்புன்னாலே அழறான். ஓரல் நல்லாயிருக்கு. ரிட்டன் தான் சும்மா கிறுக்குறான். எப்படி அவனை இன்ட்ரஸ்டாக்கனும் எழுத ப்ளீஸ் சொல்லுங்கப்பா?

ஏங்க உங்க குழந்தை எதாவது போட்டிக்கு தயார் ஆகுறாரா? படிப்பு எதற்கு ரேசில் ஓடவா இல்லை அறிவை வளர்த்துக்கவா? எனக்கு ஒன்னு புரியவே மாட்டேன்குது. எதற்க்காக அடுத்தவர்களை பார்த்து நாமும் நம் குழந்தைகளை அப்படி தான் நடந்துக் கொள்ள வற்புறுத்துகிறோம்? உங்களின் பையன் கண்டிப்பாக எழுதுவான். முரண்டு பண்ணினா விட்டு தான் பிடிக்கணும். அடிச்சா இல்லை திட்டினா மட்டும் வந்துடுமா? அது என்னங்க டயத்துக்கு வர வேண்டிய பஸ்ஸா இல்லை ட்ரெயினா.....அதுவே இப்பெல்லாம் எங்கே நேரத்திற்கு வருது? Eventually they will learn to.....அப்படியேவா இருந்துட போகிறார்கள்.

நானும் சிறு வயதில் எழுதவே மாட்டேனாம். வாய்ப்பாடமாக எல்லாத்தையும் படிப்பேனாம். எழுதுவதென்றால் அவ்வளவு தான்......என் அம்மா என் முட்டியிலே அடிப்பார்களாம். இருந்தாலும் எனக்கே எப்பொழுது ஆர்வம் வந்ததோ அப்பொழுது தான் எழுத ஆரம்பித்தேனாம்.....அதுவும் குண்டு குண்டா அழகா எழுதுவேன். இன்னமும் என் கையெழுத்து மட்டும் மாறவே இல்லை. நீங்கள் அவனை எழுத வைக்க முயற்சிக்காமல் எழுதும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அவன் முன் நீங்க நிறைய எழுதுங்க. முதலில் அவனுக்கு பேனா பென்சில் மீது ஒரு பற்றை உண்டு பண்ணுங்கள். அவனுக்கு பிடித்ததை அடிக்கடி வரைந்து காட்டுங்கள். இப்படி எதாவது செய்து விளையாட்டாக ஆர்வத்தை கொண்டு வர பாருங்க. அவன் தானாகவே எழுதுவான்.

குழந்தைகள் இந்த வயதில் எல்லாமே புரிந்த மாதிரி இருக்கும் ஆனால் புரியாது. செய்யாதே என்றால் தான் செய்யும். நீங்கள் தினமும் குழந்தையிடம் பள்ளியில் என்ன நடந்தது என்று பொறுமையாக கேளுங்க. அவர்கள் கதை கதையாக சொல்லுவார்கள். அவ்வாறு இவன் அடித்தான் அவன் கடித்தான் என்றால் அவ்வாறு செய்வது தவறா சரியா என்று அவர்களையே கேளுங்கள். அப்படி பட்ட சூழ்நிலையில் இவர்கள் எப்படி நடந்துக் கொள்ளனும் என்றும் சொல்லி தாருங்கள். நீங்கள் சொல்லிய இரண்டு தருணத்திலும் யார் மேல் தவறு என்று சொல்லவே முடியலை. குழந்தை அதற்க்கு ஒன்றுமே தெரியாது. வகுப்பாசிரியர் அவன் தவறு செய்கிறான் என்று தான் தனியாக உட்கார வைத்திருக்கிறார். இருந்தாலும் அவர் குழந்தைகளுடன் அவனிடம் செல்ல கூடாது என்று சொல்லியிருக்க வேண்டும். சென்றால் அவர்களும் தனியாக உட்கார நேரிடும் என்றும் சொல்லியிருக்க வேண்டும். அதுவும் இல்லாமல் குழந்தைகளை கூட்டி செல்ல அல்லது விட்டுட்டு போக வரும் பெற்றோர் ஆசிரியருடன் உரையாடுவதை தவிர்க்கணும். இல்லையென்றால் அந்த மாதிரி சமயங்களில் வகுப்பில் ஒரு கூடுதல் ஆசிரியர் இருத்தல் அவசியம். இல்லையா குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள என்று ஒரு நாளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். என்ன தான் பள்ளிக்கு அனுப்பினாலும் சிலவற்றை நாம் வீட்டில் சொல்லி கொடுத்தால் மட்டுமே செல்லும். Happy parenting !!!

//நான் கூட தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ விளம்பரம் என்று நினைத்தேன் ;) //

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லீங்க.
ஏன்னா எம் பொண்ணும் எல்.கே.ஜி. படிக்கும் போது இதே பிரச்னைதான், ஆனா இப்பொ அவ கையெழுத்து பார்த்தீங்கனா அச்சுல வார்த்தமாதிரி இருக்கும். 1,2 வகுப்பு போகும் போது சரியாயிடும். கஷ்டபட்டு கொடுத்த எழுத்து வேலைய எழுதவெச்சு அனுப்புனோம்னா திரும்ப ரீடூ நு கொடுத்தனுப்புவாங்க.
மண்ட காயும் ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமாயிருக்கு.
நீ எழுதி முடிச்சினா வாக்கிங் போலாம். பார்க் போலாம் அப்டீனு சொல்லி எழுதவெப்பேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆண் குழந்தைங்க எப்போதுமே கொஞ்சம் ஓவர் ஆக்டிவாக தான் இருப்பாங்க அவங்களுக்கு ஒரு இடத்துல உட்கார்ந்து ரொம்ப நேரம்லாம் ஒரு வேளைய செய்ய பிடிக்காது அதுவும் இந்த வயசுலைலாம் அவங்க ஆர்வம் எல்லாம் விளையாட்டு ஏதாவது புதுசா செய்தா அத நாமளும் செய்யனும்ங்கற மெண்டாலிட்டில தான் இருப்பாங்க. அதனால எழுதனுலாம் கவலைபட வேண்டாம் உமா ராஜ் அதுவே அவங்களுக்கு எப்போ எழுதனுன்னு தோணுதோ எழுதுவாங்க பாருங்க. ஆனா அது வரை எழுதுன்னு நேரடியாக சொல்லாம அவருக்கு முன்னாடி நீங்க ஏதாவது எழுதுங்க வரைங்க அவரு பார்க்க மாதிரி ஒரு போர்ட்ல சாட்ல எழுதுலயாவது நீங்களே எழுதி பழகற மாதிரி செய்ங்க அர்ஜூனுக்கு ஆர்வத்த உண்டு பண்ணுங்க.

முதலில் லாவண்யா,அருட்செல்விசிவப்பிரகாசம், உமா குணா உங்களுக்கு நன்றி.உடனே பதில் சொன்னதுக்கு.எல்லா குழந்தைகளும் எழுதுறாங்க இவன் மட்டும் இப்படி பண்ணுறான்னு அவங்க மிஸ் சொன்னது தான் எனக்கு இவன் மேல் ரொம்ப கோவம் வந்ததற்க்கு காரணம். இப்பல்லாம் அவன் ஸ்கூல்னாலே பயப்படுறான். பாவமா இருக்கு எனக்கு அவனை பார்க்க. நீங்கல்லாம் சொல்றதை பார்த்தால் எல்லா குழந்தையும் ஆரம்பத்தில் இப்படி தான் இருப்பாங்க போல.
//ஏங்க உங்க குழந்தை எதாவது போட்டிக்கு தயார் ஆகுறாரா? //ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஓவர் தாங்க?!!!?
//அவன் முன் நீங்க நிறைய எழுதுங்க.//
எனக்கு எழுதுறதுதான் வேலையே. ஆனால் இவன் நான் பேப்பர் கரக்ஸனுக்கு உட்கார்ந்தா கூட பென்னை தொடாதேன்னு அழுவான்.
//நீங்கள் சொல்லிய இரண்டு தருணத்திலும் யார் மேல் தவறு என்று சொல்லவே முடியலை//
இரண்டு பேருமே குழந்தைங்க இதில் நாம யாரையும் குறை சொல்ல முடியாதே. ஏன்னா கடிச்ச குழந்தை மறுநாள் ஆன்ட்டி நான் இனி அர்ஜூனை கடிக்க மாட்டேன் அவன் இங்கயே இருக்கட்டும் வேற் கிளாஸ் வேண்டாம்னு சொல்றான்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

;) பதில்... மேலே தோழிகள் சொன்னதை விட புதுசா என்ன சொல்றது நான்! ஆனா... எனக்கு வேற யோசனை தோணுதே! நம்ம உமா தானே! திட்ட மாட்டாங்க சொல்லிரலாம்ம்ம். ;)) //எழுத்தில் அர்ஜுனுக்கு ஆர்வமே இல்லை// ஹ்ம்! ஒரு வேளை.... வில் வித்தை கற்றுக் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறாரோ குட்டியர்!

‍- இமா க்றிஸ்

இமா எப்படி இருக்கீங்க அப்பா எவ்வளவு நாளாச்சு நம்ம தோழிங்கக்கிட்ட பேசி ஆனா உங்க குறும்பு கொஞ்சம் கூட குறையலை(அதெல்லாம் கூடவே பிறந்தது போல).
//ஒரு வேளை.... வில் வித்தை கற்றுக் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறாரோ குட்டியர்!//
அதெல்லாம் தான் அவனுக்கு பிடிக்குது. அவங்கப்பா பிளாஸ்டிக்ல வாங்கி கொடுத்தார். அதை நாம சாப்பிடும் போது முதுகில் தான் விடுவான். அதான் தூக்கி மேல வச்சாச்சு. எழுத குடுக்கும் பேப்பரை நல்லா சுருட்டி அவனுடைய வாட்டர் பாட்டிலை வச்சு கிரிக்கெட் விளையாடுறான். எங்க வீட்டில் யாருக்கும் கிரிக்கெட் பிடிக்காது பார்க்கவும் மாட்டோம். எங்க தான் பார்த்து தொலைஞ்சானோ. இவனுக்கு பயந்து நான் ஸ்கூலிலேயே பேப்பர் கரக்சனை முடிச்சிட்டு லேட்டா தான் வருவேன் வீட்டுக்கு. ஏன்னா எந்த பேப்பரும் அவன் கண் முன்னாடி பார்த்திரக்கூடாது கரண்டி கிடைச்சா கூட விடாம எடுத்து அதை அடிப்பான். கடுப்பா தான் வரும். நீயூஸ் பேப்பரைக்கூட பயந்துக்கிட்டு தூக்கி மேல வைக்கிறோம். கொடுமையா இருக்கு. இதில் எங்கம்மாவோட வீட்டுக்கு போய் அவள் விகடன் (பாவம் அவங்க புதுசா வாங்கி வச்சிருக்காங்க) பேப்ப்ர் பால் ஆக்கி விளையாண்டிருக்கான். அவங்க நல்லா நாலு போட்டிருக்காங்க. இவனை நான் எப்படி படிக்க வைக்கப்போறேனோ அழுகை தான் வருது.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அர்ஜூன் இப்போ எழுதராங்களா?

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்