பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**

அறுசுவை அன்பர்களுக்கு நடுவரின் பணிவான வணக்கங்கள். பட்டியின் தலைமைப்பொறுப்பை உங்கள் அனைவரையும் நம்பி மீண்டும் எடுத்துள்ளேன். எனக்கு இல்லை இல்லை இந்த ப்ளாடினம் பட்டிக்கு உங்களின் பொன்னான நேரத்தை செலவு செய்து கருத்துக்களை குவித்து தள்ள உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

செய்தி தாளில் இந்த கைபேசியை பற்றி செய்தி இல்லாத நாளே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்றும் சொல்ல முடியும். (திருபாய் அன்பானியின் கனவு நனவாகி விட்டது). தொழிநுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் அதை சரிவர பயன்படுத்தால் அதனால் விளையும் பிரச்சனைகளும் அதிகமே! கைபேசி உபயோகம் என்பது ஒவ்வொருவருடைய தேவைகளை பொருத்தது. எல்லாவற்றையும் வாதாட நேரமில்லாததால் ஒரு சிறு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டு இந்த பட்டியின் மூலம் விழுப்புனர்வை ஏற்ப்படுத்துவோம். வாருங்கள் தோழியரே/ தோழர்களே!
தலைப்பு : பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?
தலைப்பை வாதாட எதுவாக மாற்றிக் கொண்டேன். தலைப்பை தந்த தோழி தேன்மொழி முகில்குமாருக்கு நன்றி.

பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். பெயரிட்டு அழைப்பது கூடாது. நாகரீக பேச்சு மிக அவசியம்!

//மேலும் பட்டியின் விதிமுறைகளை காண இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

http://arusuvai.com/tamil/node/22396
//

இன்னமும் என்ன தயக்கம் எல்லோரும் மெச்செஜ் அனுப்ப தயாராகுங்கள். திரும்ப பதில் இல்லை என்ற கவலை வேண்டாம். கண்டிப்பாக பதில் மெசேஜ் வரும். இந்த க்ரூப் மெசேஜ், ஜோக்ஸ், ஜன்க்ஸ் தவிர்க்கவும். இல்லையா சும்மாவா வந்து ஒரு ரிங்காவது விட்டுட்டு போங்க.....

நான் இங்கே உலகத்தின் கடைசியில் இருக்கிறேன். நேர வித்தியாசம் இருக்கும். அதனால் என்னடா இந்த நடுவர் பதில் தரவில்லை என்று யாரும் கோவிக்க வேண்டாம். நீங்கள் தூங்கி எழுந்து பாருக்கும் முன் கண்டிப்பாக உங்களின் பதிவுக்கு பதில் பதிவு இருக்கும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவர் அவர்களுக்கு வணக்கம்.... 75 வது பட்டிக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.. பள்ளி மானவர்களுக்கு செல்போன் அவசியம் இல்லை என்று தான் பேச வந்துள்ளேன்...

ஆமா ஸ்கூல் போய்ட்டு வரதுக்குள்ள அப்படி என்ன இவங்களுக்கு முக்கியமான கால் பண்ண வேண்டி இருக்கு??? அவசியமா urgency கு கால் பண்ணனும் னா கூட ஸ்கூல் லே 1 rs coin பூத் இருக்கு... அப்படியும் இல்லையா!! காரணத்தின் அவசியத்தை சொன்னா அவங்க டீச்சர் ஏ அவங்க செல்போன் கொடுத்து உதவ போறாங்க....

இப்படி செல்போன் வச்சு இருக்க பிள்ளைங்க என்ன தான் பண்றாங்க... ஃபிரண்ட்ஸ் கூட வெட்டியா சாட்டிங்.... பாட்டு கேக்குறது... games விளையாடுறது... இதை தவிர உருப்படியா எதுக்கு யூஸ் பண்றாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்???

இன்னும் ஒரு படி மேல போயி சிலர் கண்ட கண்ட வீடியோ பார்க்கிறாங்க.... சிலர் ஃபிரண்ட்ஸ் ஆ பழகுற பொண்ணுங்களே தப்பான வீடியோ எடுத்து ஃபிரண்ட்ஸ் கு mms பண்றாங்க(எல்லாம் வழக்கு எண் 18/9 இல் பார்த்தது தான்).
இது சினிமா ல மட்டும் இல்லை... நிஜ வாழ்க்கை ல யும் நடக்குது... இப்படி கைபேசி ல நிறைய தீமை தான் இருக்கு.... இன்னும் நிறைய கருத்துக்களோட மீண்டும் வருவேன்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நடுவர் அவர்களுக்கு வணக்கம்..
ப்ளாட்டினப் பட்டிக்கு தலைப்பு அருமை....நடுவருக்கும், தலைப்பு தந்த தோழிக்கும் எனது வாழ்த்துக்கள்....
பள்ளி மாணவர்களுக்கு கைபேசி அவசியம் இல்லை என்பது எனது கருத்து...
ஆனால் கைபேசி இல்லாத மாணவர்களை இப்பொழுது பார்ப்பதே அரிது.பெற்றோர்களும் கைபேசி நமது பிள்ளைக்கு இந்த வயதில் அவசியமா,இல்லையா என்பதை உணராமல் அவர்கள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்ற காரணத்திற்காக வாங்கி தருகின்றனர்..அதிலும் சிறு குழந்தைகள் கையில் எல்லாம் ஐ-போன் ,ஐ பேட் ...
கவனம் எல்லாம் கேம்ஸிலும் , எஸ்.எம்.எஸ்ஸிலும் இருந்தால் குழந்தைகள் எவ்வாறு படிப்பார்கள்?
நான் பார்த்த உறவினர் வீட்டில் 10 வயது பையன் பிறந்த நாளுக்கு அவன் ஆசைபட்ட புது மாடல் கைபேசி அவன் பெற்றோர் பரிசளித்திருக்கிறார்கள்.பெற்றவர்களே இது போன்ற தவறுகளை செய்யும் போது மாணவர்கள் என்ன செய்வார்கள்?
கல்வியில் அவர்கள் கவனம் சிதறுவது இதனால் தான்..இது போல் எத்தனையோ காரணங்கள் உள்ளன...விரிவான கருத்துக்களுடன் மீண்டும் வருகிறேன்..

நடுவர் அவர்களுக்கு வணக்கம் + வாழ்த்துக்கள் :)

மாணவர்களுக்கு கைபேசி மிகவும் அவசியமே. கைபேசி என்று இல்லை எந்த கருவி என்ற போதும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. அதை பயன்படுத்தும் விதத்தில் தான் இருக்கிறது. முழு வாதத்தோடு நாளை வருகிறேன்.

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இந்த ப்ளாடினப்பட்டியில் முதல் வாதத்தை வைத்த கார்த்திகாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

உங்க ஆதங்கம் எனக்கு புரியுதுங்க. இப்போ காடு கழினியில் வேலை செய்பவர் தொடங்கி நண்டு சிண்டு வரைக்கு எல்லோருக்கும் கைபேசி இருக்கு. அதிலேயும் சிலருக்கு பல எண்கள் வேற. என் வான்டுகளே இதற்க்கு ஒரு பெரிய உதாரணம். இதுலே கூப்பிடாதீங்க அதுலே கூப்பிடுங்கன்னு ஆர்டர் வேற போடுறாங்க.

அதானே நாம படிக்கற காலத்தில் இதெல்லாம் இல்லாமல் படிச்சி கறை ஏறலையா? ஒருவேளை இப்போ ஏறத்தான் முடியாதோ? ஒருவேளை ஆசரியர் கொஞ்சம் கண்டிப்பாக இருந்திருப்பார் அதான் கேட்க மனமில்லாமல் தாங்களே எடுத்துட்டு போயிட்டா என்னனு நெனச்சாங்களோ? பார்ப்போம்......

நிஜம் தாங்க படத்தில் உள்ளது அதனையும் கற்பனையே என்றும் சொல்லி விடவே முடியாது......எல்லாமே வாழக்கையில் உள்ள ஒரு நிகழ்வின் பூதாகாரம் தானே!

குறிப்பு : மக்களே தலைப்பில் பள்ளியுடன் கல்லூரியையும் சேர்த்துள்ளேன். மன்னிக்கவும் கார்த்திகா. நீங்கள் பதிவிட்ட பின்பு செய்த மாற்றத்திற்காக வருந்துகிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நடுவரே... 75வது பட்டியில் நடுவர் பொறுப்பேற்ற உங்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்களும், நன்றியும் :)

நல்ல ஒரு தலைப்பை கொடுத்த தேன்மொழிக்கும் வாழ்த்துக்கள்.

நடுவரே நிஜமா தலைப்பை பார்த்ததும் ஏற்கனவே வாதாடியோ தலைப்போன்னு குழம்பிட்டேன்... இப்போ தெளிவாயிட்டுது :) நல்ல தலைப்பு... வெகு நாட்களாக பலர் மனதில் உள்ள கேள்வியும் கூட.

நிச்சயம் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி வேண்டவே வேண்டாம்!!!

வாதங்களோடு மீண்டும் வருகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது தாங்க எனக்கும் புரியலை. இங்கு அறுசுவையில் இருக்கும் அம்மாவெல்லாம் வேண்டாம்னு சொல்றீங்க இருந்தாலும் பிள்ளைங்க கையில் கைபேசி. ஒருவேளை வீட்டில் உள்ளவர் நமக்கெதிரா லஞ்சம் கொடுத்து சங்கம் ஆரம்பிக்கராங்களோ?

இப்போ தானுங்களே இந்த பாட் எல்லாம் முன்னம் அந்த செங்கல் கைபெசியிலே கருப்பு வெள்ளையிலே கூட கடித்து விடாமல் ஓடி ஓடி ஒளிந்து மணிக்கணக்கா அந்த எண்கள் எல்லாம் தேய தேய விளையாடினாங்க....அதை சொல்லுங்க.

வாங்க வாங்க விடாதீங்க. யாரு இந்த மாதிரி கிளப்பி விட்டானு மட்டும் சொல்லி போட்டுடுங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அது தானுங்க அதே தான்......எல்லாத்துலேயும் நல்லதும் உண்டு கேட்டதும் உண்டு. ஆனாலும் பாருங்க நம்ப பய புள்ளைக எப்பவுமே எல்லதுலேயுமே ஒரு நோட்ட சொல்லிக்கிட்டே இருப்பாங்க. படிச்சவங்க வந்து தெளிவா சொல்லிட்டு போங்க.

கை பத்திரம். கைபேசியும் பத்திரம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

நீங்க சொன்ன பிறகு நான் தான் பார்க்காமல் தலைப்பை எடுத்துட்டேனோ நு எனக்கு கொழப்பம் வரதுக்குள்ளே அடுத்த வரியை படித்து தெளிஞ்சி போயிடுச்சி.

அந்த கைபேசியை கீழே வெச்சிட்டு வேகமா வாதத்துடன் வாங்க பார்ப்போம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் இப்போ தான் முதல் முறையா வருகிறேன்...
கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு செல்போன் கூடாது.

god is love

மேலும் சில பதிவுகள்