அறுசுவையில் சமையல், கைவினை, பிரச்னைக்கு தீர்வு என எல்லோரும் அவரவருக்கு தெரிந்த விஷயங்களில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். நமக்கு தான் அது எதுவுமே தெரியாதே, என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தேன்.. எப்படி பார்த்தாலும் எனக்கு ஏதோ கொஞ்சமாவது தெரிந்தது கணினி குறித்து தான்.. சரி அதை பற்றியாவது பேசலாமே என்று நினைத்தேன்... அதற்கு தான் இந்த இழை. ஏற்கனவே இருக்கும் கணினி குறித்த இழை பெரிதாக இருக்கவே, நான் புதிதாக ஒன்று தொடங்குகிறேன்.
பொதுவாக குடும்பத்தலைவிக்கு கணினி மூலம் ஏற்படும் பயன்கள் என தொடங்குவோம், எப்படி போகிறது என்று பார்த்து விட்டு, மற்ற பகுதிகளையும் எடுத்துக் கொள்வோம் :P
உங்களுக்கு ஏதாவது தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இருந்தாலும் சொல்லுங்கள் முடிந்தால் இங்கே பேசுவோம்..:D
மற்றவர்களும் உங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் :D
நன்றி பிந்து, உங்கள்
நன்றி பிந்து, உங்கள் பதிலுக்கு,நான் window vista உபயோக்கிறேன்.anti-virus-AVG antivirus உபயோக்கிறேன். எனக்கு கணினி பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளது.உங்களிடம் தான் கேட்கவேண்டும்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் சென்னால் போதும்.download செய்து பார்துவிட்டு சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்.நன்றி!
பிந்து,நான் download செய்து
பிந்து,நான் download செய்து பார்தேன்.anti-virus scanசெய்தேன்.ஆனால் open பன்னினால் game வரவில்லையே.
கலை
கலை, நீங்கள் என்ன ட்ரை செய்தீர்கள் என்று ஸ்டெப் பை ஸ்டெப் சொல்ல முடியுமா? எந்த ஸ்டெப்பில் பிரச்சனை என்று கண்டு பிடிக்கலாம் :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
எக்சல் பயன்படுத்தி பட்ஜெட் - 2
கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு பின் நம் பட்ஜெட் தொடரின் இரண்டாவது பகுதியை பார்ப்போம் ;)
முதல் பகுதியில் வரவுகளை பட்டியலிட்டோம். இப்போது, செலவுகளை பட்டியலிடுவோம். இதை நீங்கள் மாத முதல் வாரங்களில் அந்த மாதத்திற்கான பட்ஜெட் திட்டம் போடவும் பயன்படுத்தலாம், அதே போல், அந்த மாதத்தில் நீங்கள் செய்யும் செலவுகளை ட்ராக் செய்யவும் பயன்படுத்தலாம். முதலில் திட்டமிடலை பார்ப்போம் அடுத்தது எப்படி ட்ராக் செய்வது என்று பார்ப்போம்.
இப்போது D1 செல்லில் Expense என்று டைப் செய்து விட்டு, D2 தொடங்கி வரிசையாக நெடுவாக்கில் இந்த மாதத்தில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் செலவுகளை பட்டியலிடுங்கள். ஓரளவிற்கு செலவுகளை பட்டியலிட்டு முடித்த பின், பக்கத்து நெடுவரிசையில் (E column), ஒவ்வொரு செலவிற்கும் நீங்கள் எதிர்பார்க்கும் (தோராயமான) தொகையை டைப் செய்யுங்கள். உதாரணமாக க்ரோசரி அல்லது மளிகை பொருட்கள் ரூபாய் 3000, ஸ்கூல் பீஸ் ரூபாய் 3000 etc. இப்படி எல்லாவற்றையும் பட்டியலிடுங்கள்.
முடித்தபின் நாம் முன்பு செய்தது போல் சம் பார்முலா டைப் செய்யுங்கள். ஒருவேளை நீங்கள் E6 செல் வரை உங்கள் செலவுகளை பட்டியலிட்டிருந்தால், =sum(E2:E6) என்று E7 செல்லில் டைப் செய்யுங்கள்.
ஒரு சின்ன உதாரணம்:
<b>
' A B C D E
' ________________________________________________________
'1|Income | | |Expense | |
' __________________________________________________________
'2|Salary | 5000 | |Fees | 3000 |
' __________________________________________
'3|Rent | 5000 | |Grocery |3000 |
' _______________________________________________
'4|Total |10000 | |EB | 2000 |
' _______________________________________________
'5| | | |Internet | 1000 |
' _______________________________________________
'6| | | |Mobile | 500 |
' _______________________________________________
'7| | | |Total | 9500 |
' _______________________________________________
</b>
இந்த மாதத்திற்கான உங்களின் தோராயமான செலவு கணக்கு தயராகி விட்டது.
முன்பு சொன்னது போன்றே, தேவை என்றால் நடுவில் மாற்றங்கள் செய்துக் கொள்ளலாம்.
உங்கள் வரவிற்கும் செலவிற்கும் உள்ள வேறுபாடை (difference) கண்டறிய இந்த பார்முலாவை பயன்படுத்துங்கள், உதாரணமாக, E8 செல்லில் =B4-E7 என்று டைப் செய்யுங்கள்.
<b>
' A B C D E
' ________________________________________________________
'1|Income | | |Expense | |
' __________________________________________________________
'2|Salary | 5000 | |Fees | 3000 |
' __________________________________________
'3|Rent | 5000 | |Grocery |3000 |
' _______________________________________________
'4|Total |10000 | |EB | 2000 |
' _______________________________________________
'5| | | |Internet | 1000 |
' _______________________________________________
'6| | | |Mobile | 500 |
' _______________________________________________
'7| | | |Total | 9500 |
' _______________________________________________
'8| | | |Diff | 500 |
' _______________________________________________
</b>
இப்போது வரவிற்கும் எதிர்பார்க்கும் செலவிற்கும் உள்ள வேறுபாடும் தெரிந்தாகி விட்டது. வரவிற்கு அதிகமாக செலவுகள் செல்லாமல் திட்டமிட்டுக் கொள்ளலாம் :)
செலவுகளை ட்ராக் செய்வது எப்படி என்று அடுத்த பகுதியில் பார்ப்போம் :-)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
எக்சல் டிப்...
இன்று எக்சலில் வேலை செய்துக் கொண்டிருந்த பொது இந்த இரண்டு டிப்ஸ் கற்றுக் கொண்டேன்... யாருக்கேனும் என்றேனும் ஏதாவது விதத்தில் பயன்படும் என்று இங்கே ஷேர் செய்கிறேன்...
1. சில சமயம் நிறைய பார்முலா இருக்கும் எக்சல் ஷீட்டில் ஏதேனும் காரணத்திற்காக, பார்முலாக்களை பார்க்க / மாற்ற வேண்டி இருக்கும். பொதுவாக ஒவ்வொரு செல்லாக பார்ப்பதை விட, ctrl ~ என்ற இரண்டு கீகளையும் ஒன்றாக பிரஸ் செய்தால், எக்சல் எல்லாம் பார்முலாக்களையும் காட்டும்... மீண்டும் பழையபடி ரிசல்ட்டுக்களை பார்க்க மீண்டும் ctrl ~ பிரஸ் செய்யவும்...
2. பொதுவாக புது எக்சல் வொர்க்புக் ஒப்பன் செய்யும் போது ஒவ்வொரு முறையும், மூன்று ஷீட்டுகள் இருக்கும்... இந்த மூன்று என்னும் எண்ணிக்கையை மாற்ற விரும்பினால்,
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 / 2010 ல் ஆபிஸ் ரிப்பனை கிளிக் செய்து, வரும் மெனுவில், வலது பக்கம் கிழே இருக்கும், "Excel options" என்னும் பட்டனை கிளிக் செய்யவும், Popular -> When creating new workbooks என்ற பகுதியின் கீழ் Include these many sheets என்னும் செட்டிங் அருகில் இருக்கும் எண்ணை உங்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்ளவும்...
மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 என்றால் -> file -> General கிளிக் செய்யவும்...
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
computerல் doubt
எனக்கு ஒரு doubtபா,யாராவது பதில் சொல்லுங்கள்.
நானும் என் கணவரும் தனி தனி laptop use பன்னுறோம்.என் லப்டொப்ல் நான் ஒரு சைட் browse panni vaithiruntheen.but தெரியாமல் delete செய்துவிட்டேன்.தேடினால் கிடைக்கவில்லை.அவருடைய browsing history search பன்னினால் கிடைக்குமா.என்னால் இரண்டு பேரும் ஒரே line thaane use pannu kiroom.என் கணவரிடம் கேட்டால் சிரிப்பார்,அல்லது இதுகூட தெரியாதானு சொல்லுவார் அதான் உங்களிடம் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்.
கலை
உங்க லேப்டாப்பில் பார்த்த வெப்சைட்டை அவரோட லேப்டாப் பிரவுசிங் ஹிஸ்டரியில் தேடினால் கிடைக்காது. ஒருவேளை அவரும் நீங்க பார்த்த அதே வெப்சைட்டை பார்த்திருந்தால் கிடைக்கும் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நன்றி கவி,ரொம்ப முக்கியமான
நன்றி கவி,ரொம்ப முக்கியமான சைட்,miss panniteen.என் தவறு தான்,தேடிப்பார்கிறேன்.romba thanks kavi.