குழந்தை தத்தெடுப்பு பற்றிய விவரம் தெரிந்தவர்கள் உதவி செய்யவும்...

தோழிகளே,

குழந்தை தத்தெடுப்பு பற்றிய விவரம் தெரிந்தவர்கள் உதவி செய்யவும்...

எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது, இருப்பினும் இரண்டாவது குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்புகிறோம்... ஆனால் சரியான விவரம் எங்களை தெரியவில்லை... இதை பற்றி தெரிந்தவர்கள் கூறவும்.

எனக்கு தெரிந்த ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் விசாரித்ததற்கு இப்ப எல்லாம் இல்லீகலா பிறக்கும் குழந்தைகள் தான் அதிகமா இருக்கு... தேவை இல்லைமால் தத்து எடுத்து நீங்களா பிரச்சினையை இழுத்து விட்டுகாதிங்க, நீங்களே இன்னொரு குழந்தையும் பெத்துக்க பாருங்க நு சொல்லிடாங்க... ஆனால் எனக்கும் என் கணவருக்கு மனசு கேட்க மாட்டேன்குது... ஏதாவதொரு குழந்தைக்கு நல்லது செய்யனும்னு தான் ஆசைபடறோம்...

சென்னையிலோ அதன் அருகிலோ உள்ள ஆஸ்ரமங்கள் ஏதும் தெரிந்திருப்பினும் தவறாமல் கூறுங்கள் மற்றும் இது போல் யாரேனும் தத்தெடுத்திருப்பினும் அதன் விவரங்களை கூறுங்கள் தோழிகளே...

கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே விரும்பி இதை செய்வது நல்ல விஷயம். உங்க நல்ல எண்ணம் சீக்கிரம் நடக்கனும். இறைவன் துணை இருக்கட்டும்.

Directorate of Social Welfare (Adoption)
Government of Tamil Nadu

இதை கூகிலில் தட்டினா tn அரசு தளம் ஒன்று கிடைக்கும். அதை பாருங்க.

இதுல போனா எங்க எங்க அடாப்ட் பண்ண குழந்தைகள் இருக்காங்க, அப்ளை பண்ண ஃபார்ம் என எல்லாம் இருக்கும். பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Epdi irukeenga? Unga nalla ennam niraivera en anbu vazhthukkal... Enaku ungal thedalukkana vidai edhuvum theriyadhu. but unga nalla ennathai paaraattaamal iruka mudiyala. adhaan indha post... again vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai prema sis.....,,, first of all hats-off to sis. ethana per manathirku virubi indha maadhiri adopt pannunu ninaikiraangalo... enthana peruku indha manasu varum? enaku details therila. therinja kandipa soldren. vani sis sonna link la poi try pannipaarunga sis.... really really proud of u sis.........

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

வாழ்த்துக்கள் ப்ரேமா.இந்த மனசு எல்லோருக்கும் வராது.
வாங்கினப்புறம் கட்டாயம் ரிஜிஸ்டர் பண்ணுங்க

தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி வனி, கண்டிப்பா பார்கிறேன்...

வனி, நித்தி, ரேவதி, நிகிலா உங்க வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நீங்க பாராட்டும்படி எல்லாம் ஒன்னும் இல்லை... இன்னும் எவ்ளவோ பேர் என்னென்னமோ நல்லதுகள் வெளியே தெரியாமல் பண்ணிட்டு தான் இருக்காங்க... நாங்களும் முயற்சி பண்ணறோம், நல்லது நடக்கும்னு நம்புறோம் பார்போம்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ரொம்ப நல்ல எண்ணம் பிரேமா... வாழ்த்துக்கள்...

திருமணத்திற்கு முன் நானும் இப்படி எல்லாம் யோசித்ததுண்டு , ஆனால் , நடைமுறை படுத்த முயன்றால் எழும் சிக்கல்களை பார்த்து அதை மறந்தே போய் விட்டேன்... உங்கள் கணவரின் உதவியோடு நீங்கள் முயற்சி செய்வது மிக நல்ல விஷயம்...நீங்கள் விரும்புவது போலவே நல்ல விதமான குழந்தை கிடைக்க வாழ்த்துக்கள்... அதன் பின் மறக்காது நீங்கள் பின் பற்றிய ப்ராசஸ் பற்றியும் இங்கே சொல்லுங்கள்... பலருக்கும் உதவும்... நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்