குடைமிளகாய் சாதம்

தேதி: October 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

வடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுத் துண்டு
சிகப்பு, பச்சை குடைமிளகாய் - தலா கால் பாகம்
கார்ன் - கால் கப்
கடுகு, சீரகம் - தாளிக்க
உளுந்து, கடலை பருப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப
உப்பு, மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப
எண்ணெய், நெய் - தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பச்சைமிளகாயை கீறி நறுக்கவும். குடைமிளகாய்களை சிறு சதுரமாக நறுக்கவும்.
சாதத்தை சிறிது எண்ணெய், நெய், உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும்.
எண்ணெய், நெய் கலவை சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பருப்புகள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் குடைமிளகாய், கார்ன் சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிறுதீயில் வைத்து ஆற வைத்த சாதம் சேர்க்கவும்.
பின்பு மிளகுதூள், தேவைக்கு ஏற்ப உப்பு, கொத்தமல்லி தூவி கிளறவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

கலர் கலராக குடைமிளகாய் சேர்த்தால் இன்னும் அழகாகவும், சுவையாகவும் இருக்கும். குறைவாக இருக்கும் பட்சத்தில் இருக்கும் காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்புல் சாதம்,படங்கள் ரொம்ப சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Kavitha... Romba azhaga senju kaatti irukeenga. Vazhthukkal ma...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

குடைமிளகாய் சாதம் ரொம்ப நல்லா இருக்கு படங்கள் அழகா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்க்கும் நன்றி

முசினா,
பதிவிற்கும்,வருகைக்கும் நன்றி

நித்யா,
பதிவிற்கும்,வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

ஹளிலா,
பதிவிற்கும்,வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

குடை மிளகாய் சாதம் பார்க்கவே கலர் புல்லா சூப்பரா இருக்கு...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா,
பதிவிற்கும்,வருகைக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துக்கள் கவி(:-
அழகா பரிமாறியிருக்கீங்க. குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு கொடுத்தனுப்ப ஏற்ற வகையில் இருக்கு.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.