தேதி: October 25, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
முந்திரி - 10
பால் - கால் கப்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 3
ஏலம் - 2
தயிர் - அரை கப்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
கறி மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 குழிக்கரண்டி
சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டங்களாக வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை கீறி வைக்கவும். முந்திரியை ஊற வைத்து பால் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து குழைய வதக்கவும்.

பின்பு சிக்கனை சேர்த்து பிரட்டவும்.

5 நிமிடம் கழித்து தூள் வகைகள், தயிர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. தயிர் மற்றும் சிக்கனில் உள்ள நீரே போதும்.

சிக்கன் வெந்ததும் முந்திரி கலவையை சேர்த்து பிரட்டி விடவும். இது ரோஸ்டிற்கு நல்ல ருசி தரும்.

கடைசியாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சிக்கன் கேஷூ ரோஸ்ட் தயார்.

காரம் குறைவாக சாப்பிடுபவர்கள் மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றின் அளவை சிறிது குறைத்து கொள்ளலாம். இது நெய் சாதம், தேங்காய் சாதம், ப்ரைட் ரைஸ் ஆகியவற்றுக்கு நல்ல காம்பினேஷன். சப்பாத்தி, பரோட்டா, நாண் ஆகியவற்றுக்கும் நன்றாக இருக்கும்.
Comments
சூப்பர்
கம கம சிக்கன் மசாலா,அருமையாக செய்து இருக்கீங்க ஷமீலா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ஷமிலா.
சிக்கன் கேஷூ ரோஸ்ட் நல்லா செய்துருக்கீங்க. ஷமிலா நானும் செய்து பார்க்கிறேன்.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
Shameela... Photos
Shameela... Photos parkumpodhe naakkula thanni oorudhu ma... Mmm... Taste um superb ah irukum nu parthale theriyudhu:) vazhthukkal shameela...
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஷமீலா,
ஷமீலா,
சுவையாக செய்து காட்டியிருக்கீங்க..
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
ஷமீலா
யம்மி சிக்கன் ;) அடுத்த வாரம் செய்துருவோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அட்மின்
எனது குறிப்பை உடனே வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.....
முசி
வாழ்த்திற்க்கு நன்றி முசி..
ஹலிலா
நன்றி ஹலிலா...அவசியம் செய்து பாருங்க...
நித்தி..
வாழ்த்திற்க்கு நன்றி நித்தி..
கவிதா...
வாழ்த்திற்க்கு நன்றி கவிதா...
வனிதா
மிக்க நன்றி வனிதா அக்கா.....கண்டிப்பா செஞ்சு பாருங்க....
ஷமீலா
ஷமீ குறிப்பு நல்லா இருக்கு வாழ்த்துக்கள்(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
Yummy Chicken Cashew Roast...
ஷமீலா,
நேற்றிரவு ஒரு விருந்துக்கு கப்சாவுக்கு துணையாக இந்த சிக்கன் கேஷூ ரோஸ்ட் செய்தேன்...என் கெஸ்ட்டின் மனைவி ரெசிபி கேட்டு எழுதி கொண்டார் என்றால் சுவையை பற்றி நான் சொல்ல தேவையே இல்லை என நினைக்கிறேன்...நேற்று மீதியானதை இன்று சப்பாத்தியுடன் சாப்பிட்டோம்..மிகவும் அருமையாக இருந்தது...
சுவையான குறிப்பை கொடுத்த உங்களுக்கு நன்றி...பாராட்டுக்கள்...
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.