வீட்டின் அருகில் பாம்பு வராமல் இருக்க - உதவி

தோழிகளே, எனது அம்மா கிராமத்தில் தனியாக வசிக்கிரார்கள். வீடு ஒரு தென்னந்தோப்பின் நடுவில் அமைந்துள்ளது. முடிந்தவரை வீட்டை சுற்றி சுத்தமாக வைத்துள்ளார்கள். ஆனாலும் அடிக்கடி வீட்டின் அருகில், படிகட்டுகளில் பாம்பு வந்து விடுகிறது. மிகவும் பயமாகவும், கஷ்டமாகவும் உள்ளது. நாங்கள் எல்லாரும் வெளி இடங்களில் இருப்பதால் அம்மா அவ்வப்போது எங்களிடத்தில் வந்து சில மாதங்கள் கூட தங்குவதால் கோழி எதுவும் வளர்க்க முடியாது. வேறு மருந்து அல்லது ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே... Thank you friends...

பூண்டை நசுக்கி துணியில் கட்டி வீட்டைச் சுற்றி சில இடங்களில் தொங்க விட்டால் அந்த வாடைக்கு பாம்பு வராது என்பார்கள். வாரம் ஒரு முறையாவது புதிதாக மாற்ற வேண்டும்.
சிறியாநங்கை செடி வளர்த்தாலும் பாம்பு வராது என்பார்கள்.
இந்த இரண்டு முறையுமே என் உறவினர் வீடுகளில் பயனளித்துள்ளது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

துளசிமாடம் வைத்தால் பாம்பு வராது என்பார்கள்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

கவிசிவா சொன்னதே தான்... எங்க வீட்டில் பாம்பு பிடிப்பவர்கள் வந்து ஏகப்பட்ட பாம்பு பிடிச்சாங்க ;) அப்போ அவங்க சொன்ன வைத்தியம்... பூண்டை நசுக்கி நீரில் கலந்து அந்த நீரை வீட்டை சுற்றி தெளிக்க வேண்டும். இதை 3 நாளைக்கு ஒரு முறை செய்து வந்தா பாம்பு அண்டாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, பாம்பை கூட வீட்ல பெட் அனிமலா வளர்த்திருக்கீங்கன்னு சொல்லுங்க ;) பாம்பு அடிக்கடி வரும் இடத்தில் உப்பு கொட்டி வைத்தால் கூட பாம்பு வராதுன்னு சொல்வாங்க. பூண்டு சொல்யூஷன் புதுசா தான் இருக்கு.. நோட் பண்ணிட்டேன் கவி, வனி :) பயனுள்ள டிப்ஸ்க்கு நன்றிகள் :) கூடுவாஞ்சேரியில் எங்க வீட்ல கூட அடிக்கடி பாம்பு வருமாம். அங்கே இருக்கவங்க சொல்றாங்க ;(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Dear Kavisiva, Anugopi, Vanitha and Kalpana, உங்கள் அனைவரது உதவிக்கும் மிக்க நன்றி. அம்மாவிடம் சொல்லி செய்து பார்க்க சொல்கிரேன். மீண்டும் மிக்க நன்றி தோழிகளே.

God is good! All the time!

அன்பு நிலா,

வனி,கவி சொன்ன பூண்டு வைத்தியம் நல்ல பலன் தரும்..

ஒரு வகையான க்ரோடன் செடி,நீளமாக பச்சையாக இருக்கும்.பெயர் தெரியவில்லை.அது வைத்தாலும் வராது..

தேங்காய் சிரட்டையை/மட்டையை கொளுத்தி புகையவிட்டு,பூண்டு தோல் அதன் தணல் மேல் போட்டு புகையவிட்டாலும் பாம்பு வராது

என்றும் அன்புடன்,
கவிதா

1. வாசல்கட்டில் மண்ணெண்ணெய் தெளிக்கலாம். மண்ணெண்ணெய் உடம்பில் பட்டால் அவற்றுக்கு எரிச்சலாக இருக்கும். வராது. (இது அனுபவம்.)
2. மீன் பொரித்த எண்ணெய் தெளித்தால் வராது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். செய்து பார்த்ததில்லை.
3. பொழுது சாயும் வேளை வீட்டைச் சுற்றி மிளகாய்ப் புகை காட்டினால் வராது என்பார்கள். இதுவும் முயன்று பார்த்ததில்லை.

‍- இமா க்றிஸ்

கவிதா madam, இமா madam, தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. அம்மாவிடம் சொல்கிரேன்

God is good! All the time!

அட அப்பா இன்னக்கி காலைல எங்க வீட்டு வாசலுக்கே வந்துட்டாரு, சிறியா நங்கை செடிமேலயே ஏறிப்போறாருங்கோ, அதுனால நீங்க எல்லாரும் சொன்ன பூண்டு வைத்தியத்த மேற்கொள்ளலாம்னு இருக்கேன்!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பல பயனுள்ள குறிப்புகளைக் கேட்டதும் ஓடிவந்து கொடுத்த தோழிகளுக்கும், அதை வெளியே கொண்டுவர உதவிய தோழி நிலாவிற்கும் நன்றிகள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்