தனிமையிலும் இனிமை காண முடியுமா?!!!

நம்மில் பலரும் வெளியூர் வெளிநாடுன்னு சொந்தபந்தங்களை விட்டு தள்ளி இருக்கிறோம். அப்போ நாம புதுசா அனுபவிக்கற ஒண்ணுதான் தனிமை. அந்த தனிமை கொடுமையா இருக்கா? இல்லை தனிமையை இனிமையாக மாத்திட்டீங்களா? எப்படி இனிமையா மாத்திக்கிட்டீங்க அப்படீன்னு தோழிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். பதிவுகல் தமிழில் இருந்தால் இனிமை. ஆங்கிலத்துக்கு பெரிய தடா... :)

நல்ல இழை ஆரம்பித்த தோழிக்கு நன்றி....
எனக்கும் சிங்கப்பூர் வந்த புதிதில் கணவர் அலுவலகம் போன திரும்பி வர வரைக்கும் செம போர் தான்....திரும்ப ஊருக்கு போறேன்னு எல்லாம் சொல்லி புலம்பி இருக்கேன்...இப்போ நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் ரொம்ப வேகமா நாட்கள் போகுது...
நான் ஃபாலோ பண்றது இதை தான்....
இரவு நேரத்துல இளையராஜா பாடல்கள் கேட்க எனக்கு பிடிக்கும்..எங்க ரெண்டு பேருக்குமே விருப்பமானவை..
அப்புறம் இரவு உணவு முடிந்ததும் பார்க்கில உட்கார்ந்து பேசுவோம்..இல்லனா சின்னதா ஒரு வாக்..
இந்த மாதிரி செய்யுறதுனால வேலை டென்சன் எல்லாம் இல்லாம மனசு ஃப்ரீயா இருக்கும்...
அப்புறம் எந்த ப்ரச்சனைனாலும் சரி இருவரும் மனசு விட்டு பேசிட்டா ரிலாக்ஸா இருக்கும்....
வீக்கெண்ட்ல வீடு சுத்தபடுத்துறது ,ஐயனிங் போன்ற வேலை எல்லாம்...
மாலையில கண்டிப்பா வெளியில போயிடுவோம்...ஒரு வாரத்துக்கு தேவையான எனெர்ஜிய வேணும்ல அதான்..
தோழிகளே உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.கேட்க ஆவலா இருக்கேன்.

இரண்டு முறை பதிவாயிடுச்சு..சாரி....

அன்பு கவிசிவா... நல்ல மேட்டரை துவங்கி இருக்கீங்க :) நமக்கு தேவையான மேட்டரும் கூட.

ஆரம்பத்தில் தனிமை தெரியல. ஏன்னா கல்யாணம் ஆன பின் தான் சமைக்க கத்துகிட்டேன். சீக்கிரம் சமைக்க வராது. ஏகப்பட்ட நேரம் எடுக்கும். காலை சமையல் முடிச்சு என்ன சமைக்கன்னு யோசிச்சு, அம்மா வசு எல்லாரையும் போனில் கேட்டு அதை சமைச்சு முடிக்க எங்க ஆள் வந்துடுவார். :) சமைச்சு சாப்பிட்டதும் நல்ல தூக்கம் போட்டா மாலை அவர் வந்து தான் எழுப்புவார். எழுந்தா தயாராகி ஊரை சுத்த கிளம்பிடுவோம். பொழுது போயிட்டுது.

குட்டீஸ் பிறந்த பிறகு தான் கொஞ்சம் அவங்க சத்தம் இல்லாம வீடு அமைதியா இருந்தாலே என்னமோ மாதிரி இருக்கும். இப்போ தனிமையை சரி பண்ண குட்டீஸ் தூங்கும்போது கைவினை, சமையல். எனக்கு பிடிச்சதை செய்ய ஆரம்பிச்சுடுவேன். பொழுது தானா போயிடுது :) டைம் போகுறதே தெரிவதில்லை... நம்மை எதாவது ஒன்னு பிசியா வெச்சிருந்தா தானா நமக்கு நேரம் போயிடுது, தனிமை தெரிவதில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

. நான் இங்கே வந்த புதிதில் இணையம், தமிழ் தொலைக்காட்சி அப்படீன்னு எந்த பொழுது போக்கும் கிடையாது. ஒரே ஒரு தமிழ் வானொலியும் சில தோழிகளும் சிங்கப்பூரில் உள்ள என் நாத்தனாரும்தான் துணை. எல்லர்கிட்டயும் ஃபோனில்தான் பேச முடியும். வார இறுதியில் மட்டும்தான் வெளியில் போக முடியும். முதலில் ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சு. கோபம் அழுகைன்னு குழப்பமான மனநிலை.

இப்படியே இல்லாததை நினைச்சுகிட்டு இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்னு முதலில் யதார்த்தத்தை ஏத்துக்க என் மனசை தயார் படுத்தினேன். இங்கதான் உன் வாழ்க்கை. சந்தோஷமா இருக்கறதும் கஷ்டப்படறதும் உன் கையில்தான்னு எனக்கு நானே சொல்லிப்பேன். அய்யோ நான் மட்டும் தனியா கஷ்டப்படறேன்னு நினைக்கறதை தூக்கிப் போட்டேன். எனக்குப் பிடிச்ச விஷயங்களில் கவனத்தை திருப்பினேன். தனியே வெளியே போய் வர பழகினேன். கொஞ்சம் கொஞ்சமா இந்த வாழ்க்கை இந்த ஊர் எனக்கு பிடிக்க ஆரம்பிச்சுது. இப்போ இந்த ஊர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ஒரு ஐந்து வருடங்கள் கழித்து இணையம், தமிழ் தொலைகாட்சிகள்னு பொழுதுபோக்கு அம்சங்களும் இணைய ஆரம்பிச்சுது. 2007ல் அறுசுவை அறிமுகம். அப்புறம் தனிமைக்கு அங்கே என்ன வேலை. இனிமைதான்.

இந்த தனிமையை நாம இனிமையாக்கிகிட்டாலும் சிலர் அய்யோ எப்படீங்க தனியா இருக்கீங்க அப்படீன்னு கேட்கும் போது மனதில் சிறு நெருடல் வரும் அய்யோ தனியா இருக்கோமோன்னு. எல்லாம் ரெண்டு நிமிஷம்தான். அம்மாடி இந்த எண்ணம் மனசுல வந்தா ஆபத்தாச்சேன்னு மனசை வேறு ஏதாவது விஷயத்தில் ஈடுபடுத்திடுவேன். இந்த கேள்வி மட்டும் இல்லை நம் சந்தோஷத்தை குறிவைக்கும் எந்த மூன்றாம் நபரின் கேள்வியயும் நான் மூளைக்கே கொண்டு செல்வதில்லை.

நெகட்டிவ் சிந்தனைகளுக்கு மனதில் இடம் கொடுக்காமல் இருந்தாலே பாதி பிரச்சினையும் ஓவர். அய்யோ எனக்கு அது இல்லையே இது இல்லையே அப்படி இருந்தா நல்லா இருந்திருக்குமே இப்படி இருந்தா சந்தோஷமா இருந்திருப்பேனே அப்படீங்கற எண்ணமே நம் சந்தோஷத்துக்கு முதல் ஆப்பு.

ஆனால் எப்பவும் இப்படியே இருக்க நாம மகானா என்ன :). அப்பப்போ மனசு டல் அடிக்கும் போது பொட்டியை கட்டிட்டு கிளம்பிடுவேன் சிங்கப்பூருக்கு :). இப்போ மனசு டல் ஆகறதுக்கு முன்னாடியே சிங்கப்பூர் போகற மாதிரி ஏதாவது வேலைகள் வந்துகிட்டே இருக்கு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஷமீலா உங்க அனுபவத்தை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி. வேலைக்குப் போவதால் இப்போ உங்களுக்கு டைம் கிடைக்கறதுதான் கஷ்டமா இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கும் அறுசுவை அறிமுகம் ஆன பின் தான் கைவினை எல்லாம் பொழுதுபோக்காச்சு :) இல்லன்னா அந்த பக்கமெல்லாம் போகவே மாட்டேன். இப்போ நான் எதை செய்தாலும் இங்க அனுப்ப தான் செய்வேன்னு என்னை சுற்றி இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

டெல்லியில் இருந்த சில நாட்கள் சமீலா சொன்ன மாதிரி வாக் போவோம். ரொம்ப பிடிக்கும். சிரியாவிலும் அதே தான்... அதை தான் நான் ஏற்கனவே பக்கம் பக்கமா சொல்லிருக்கனே ;) எப்படி பொழுது போச்சுன்னு அறுசுவைக்கே தெரியுமே. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்களுக்கு பல சூப்பர் கைவினைப் பொருட்கள் குறிப்பு கிடைப்பதற்கு இதுதான் காரணமா :). உண்மைதான் சும்மா இருந்தாதான் மனசு குரங்கு மாத்ரி என்னவெல்லாமோ யோசிக்கும். நமக்கு பிடிச்ச வேலைகள் செய்தோம்னா பொழுதும் போகும். மனசுக்கும் பிரச்சினை இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, நல்ல தலைப்பு. தேங்க்ஸ்பா..:)

நான் எப்பவும் தனிமையை என்சாய் பண்ணுவேன். எனக்கு பிடிச்சதும் கூட :)கல்யாணம் முடிச்சு காங்கோ வந்தப்ப கூட நிறைய பேர் கேட்டாங்க. தெரியாத ஊர், புரியாத மொழின்னு அக்கம் பக்கம் நம்ம ஆளுங்க இல்லாம என்ன பண்ண போறியோன்னு.. அவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல எனக்கு பிடிச்சது தனிமை தான். கல்யாணத்துக்கு முன்னாடியும் அப்படிதானே இருந்தேன். வேலை.. வேலை விட்டா வீடு.. அப்புறம் ரூமுக்குள்ளே போய் எப்.எம். ரேடியோவோட முடங்கிடுவேன். என் உலகமே பாட்டு..பாட்டு..பாட்டு தான்.. தனிமையோட பாட்டும் இருந்தா.. ஆஹா..ஓஹோ தான்..நான் எப்பவும் ஆசைப்பட்ட ஒண்ணு (மனசு அமைதி இல்லாத நாட்களில் பெரும்பாலும்) மனுஷாளே இல்லாத காட்ல போய் இருக்கனும்னு.. தெரிஞ்சோ தெரியாமயோ அப்படித்தான் இங்கே வந்து மாட்டிட்டேன் ;) இந்த ஊர் ஆளுங்க வெளியே தான் மனுஷனுங்க மாதிரி இருப்பாங்க..உள்ளே மிருகம் தான் எப்பவும் தூங்கிட்டு இருக்கும்.

அப்புறம் தனிமைல என்ன பண்ணுவேன்னு கேக்கறீங்களா? வீட்டை சுத்தி செடி, கொடி இருந்தால் அதை ஆழ்ந்து ரசிப்பேன். அதை வச்சு ஒரு மலரும் நினைவு ஓடும் அப்படியே அந்த காலத்துக்குள்ளே கடைசி வரை போய்டுவேன். ரொம்ம்ம்ப நல்லார்க்கும். கடவுள் தந்த ஒரு பெரிய வரமா என் ஞாபகசக்தியை சொல்வேன்.சின்ன வயசுல நடந்த சம்பவங்களை என்ன ட்ரெஸ் போட்டிருந்தோம்னு சொல்ல கலரோட அந்த சம்பவங்களை சொல்ல முடியும் :) சின்ன வயசு சந்தோஷங்கள் எப்பவும் மறக்க முடியாது. அதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அசை போடுவேன். ஒவ்வொரு வாசனையும், ஒவ்வொரு உணவும் எனக்கு சின்ன வயசு ஞாபகத்தை கண் முன்னாடி சி.டி போட்டது மாதிரி கொண்டு வரும். அதனாலயே பெரும்பாலும் எனக்கு தனிமையை ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்.அதுக்காக ப்ரெண்ட்ஸ் இருந்தா பிடிக்காதான்னு கேக்க கூடாது.. பிடிக்காமயா 3 வருஷமா விடாம அறுசுவைல ஊஞ்சலாடிட்டு இருக்கேன் ;)) நான் சொல்றது ப்ரெண்ட்ஸ் இல்லாதப்ப இருக்க தனிமையை..

இன்னும் ஞாபகம் வரும் போது சொல்ல வருவேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா ன்னு உங்க அப்பா அம்மா பொருத்தமாதான் பெயர் வச்சிருக்காங்க. கற்பனையாலேயே தனிமையை ஓட ஓட விரட்டிடறீங்களே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா... நான் இந்த வேலை எல்லாம் காலேஜ் நாட்களில் செய்தது. ;) அப்போ எனக்கு நட்பு வட்டம் கிடையாது. ஊருக்கும் வருவது ரொம்ப ரேர். படிக்க பிடிக்காது. யாராவது தமிழ் மீடியம்ல இருந்து வந்த ஃப்ரெண்ட்ஸ் எதாவது சொல்லி தர சொன்னா 1 மணி நேரம் அதிக பட்சம் அதில் போகும். அதை விட்டா நான் என்ன செய்ய... தனியா போய் ஹாஸ்டல் மொட்டை மாடியில் உட்கார்ந்துடுவேன்.

எங்க ஹாஸ்டல் மொட்டை மாடியில் இருந்து பார்த்தா எதுவுமே தெரியாது... அதை சுற்றி இருந்த மாந்தோப்பை தவிற. எப்பவாது மாந்தோப்பை தாண்டி தூரத்தில் சின்ன லைட் தெரியும். எப்பவாது போகும் வாண்டிகளோட லைட்... அதையும் ஆசையா பார்த்துகிட்டு அந்த காற்றை அனுபவிச்சுகிட்டு உட்கார்ந்திருப்பேன். என்னை காணோம் ரூம்லன்னா என்னை தேடி அங்க வரலாம் எனும் அளவுக்கு மொட்டை மாடியே கெதி. :) உங்களை போல் ஃப்ளாஷ் பேக் எல்லாம் அப்போ போச்சு... அப்பா அம்மா தங்கை கூட வீட்டில் இருந்த நாட்களை நினைச்சு நினைச்சு கைக்கு வந்ததை எல்லாம் பேப்பரில் கிருக்குவேன். பொழுது போயிடும்... இரவு தூக்கம் வந்து நான் தூங்க ரூமுக்கு வரும் போது ஹாஸ்டலே தூங்கி இருக்கும் :) எப்பவுமே மணி 3, 4க்கு தான் வந்து தூங்குவேன். அது வரை அந்த தனிமையான மொட்டை மாடிகிட்ட தான் அதிகமா பேசுவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்