தலை தீபாவளிக்கு அம்மாவிட்டுக்கு போனீங்களா?இல்ல மாமியார் வீட்டில் இருந்திங்களா

தலை தீபாவளிக்கு அம்மாவிட்டுக்கு போனீங்களா?இல்ல மாமியார் வீட்டில் இருந்திங்களா?

நான் தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டில தான் இருந்தோன்.

ஏன் ஏன் ஏன்?? இப்படிலாம் டாப்பிக் துவங்கினா அறுசுவையில் பக்கம் பக்கமா போகுமே ;)

ஏன் இவ்வளவு வருத்தம்??? இதை சொல்லியே அடுத்த வருஷன் நீங்க உங்க அம்மா வீட்டுக்கு ஓடிடுங்க :)

நான் தலை தீபாவளியை 6 வருஷம் முன்னாடி கொண்டாடினேன்... நான் பதில் சொல்லலாமா??? ;) என் தலை தீபாவளிக்கு அம்மா வீட்டில் சீர் மட்டும் வாங்கிகிட்டு ஓடிட்டேன் வெளிநாட்டுக்கு. அதனால் தலைதீபாவளி அம்மா வீட்டிலும் இல்லை, மாமியார் வீட்டிலும் இல்லை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழி அனு, புகுந்த வீட்டு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. நானும் 6 வருஷம் முன்னாடி தான் தலை தீபாவளி கொண்டாடினேன். அம்மா வீட்ல தான் கொண்டாடினேன்.. ஆனா இல்ல...குழப்பறேனோ.. அம்மா வீட்ல தான் நானும் ஹப்பியும் இருந்தோம். அதுக்குள்ள மாமியார் வீட்ல மூக்கு வியர்த்து நோன்பு எடுக்க போறோம் முதல் நோன்பு இங்கே இருக்கனும்னு சொல்லிட்டு காலைலயே கூப்டுட்டு போய்ட்டாங்க. ஆச்சாரம், அனுஷாடானம் லொட்டு லொசுக்குன்னு சொல்லி நைட் 7 வரைக்கும் இருக்க வச்சு அனுப்பினாங்க. நான் மறுபடி அம்மா வீட்டுக்கு வர மீதி நாள் போய்டுச்சி. வீட்டுக்கு வந்து சாப்ட்டு படுத்தாச்சு.. இதான் எங்க தலை தீபாவளி. எப்படி இருக்கு பார்த்தீங்களா? இப்ப நம்ம யாராவது ஏன் அம்மா வீட்ல தீபாவளீ கொண்டாடுறேன்னு கேப்பாங்களா? கேக்க முடியுமா? முடியாதே.. நானும் வனி சொன்ன மாதிரியே கடந்த 5 வருஷமா வெளிநாட்ல தான் கொண்டாடிட்டு இருக்கேன் ;(

விடுங்க அனு.. இதெல்லாம் போட்டு மனசை கஷ்டப்படுத்திக்காதீங்க. நம்ம காலம் வரும் போது அவங்களை நாலு கை பார்க்கலாம் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் மாமியார் யாருமே அம்மாவிட்டில் கொண்டாட மாட்டாங்க.எனக்கு தெரிந்து இதுவரை யாரும் அம்மா வீட்டில் கொண்டாடி நான் கேள்வி பட்டதே இல்ல அப்படின்னு என்கிட்ட சொல்லுகிறார்கள்...................................

என் ஹப்பியிடம் இதை சொல்லி பெரிய பிரச்சனை ஆக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க அவரும் அவருக்கு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுகிட்டு இருக்கிறார்................................................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

தலை தீபாவளி யார் வீட்டில் என்பதில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பழக்கம். எங்க ஊரில் தலை தீபாவளி, தலை பொங்கல், கார்த்திகை எல்லாமே கணவர் வீட்டில்தான். சீர் மட்டும் பெண் வீட்டில் இருந்து கரெக்டா வந்துடணும் :)

எங்க தலை தீபாவளி மாமியார் வீட்டிலும் இல்லை அம்மா வீட்டிலும் இல்லை. வெளிநாட்டில் தன்னந்தனியா பட்டாசு கூட இல்லாம கொண்டாடி(?!!)னோம். இப்போ தீபாவளி சமயத்தில் ஊரில் இருந்தேன்னா முந்தைய நாள் இரவு எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன். தீப்பாவளி அன்னிக்கு காலையில் சாமி கும்பிட்டு சாப்பிட்டுட்டு காலை 10 மணி போல மாமியார் வீட்டுக்கு வருவேன். இது நான் மட்டும் இருந்தால். என் கணவரும் இருந்தால் தீபாவளி முழுக்க முழுக்க மாமியார் வீட்டில்தான். அம்மா வீட்டுக்கும் போயிட்டு வருவோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//என் மாமியார் யாருமே அம்மாவிட்டில் கொண்டாட மாட்டாங்க.எனக்கு தெரிந்து இதுவரை யாரும் அம்மா வீட்டில் கொண்டாடி நான் கேள்வி பட்டதே இல்ல அப்படின்னு என்கிட்ட சொல்லுகிறார்கள்...................................// இவங்க பொண்ணை ரெண்டு வருஷமா கூட்டிட்டு வந்து கொண்டாடுறாங்களே இவங்க வீடு, பொண்ணுக்கு மாமியார் வீடா?

தலை தீபாவளி அம்மா வீட்ல இல்லைனா வசூலும் (சீர்) கட்டுன்னு சொல்லியிருக்கனும். அப்ப அலறி அடிச்சுட்டு அனுப்பி இருப்பாங்களோ ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இதில என்ன ஸ்பெசல்னா நான் அப்போ 10 மாத கர்ப்பிணி 3வது நாள் வருசை வச்சி எங்க அம்மா கூப்பிடும் போது மோதிரம் போட்டால்தான் அனுப்பனு இல்லையின்னா அனுப்பமாட்டோம் அப்படினு சொல்லி பிரச்சனை(முன்னாடியே சொன்னால் அதுஒரு விசியம்மே இல்லை திடிர்ன்னு தான் எதுவா இருந்தாலும் சொல்லுவாங்க) தீபாவளிக்கு முதல் நாள் பிரசவ வலி எடுத்து ஹாஸ்பிட்டல் போனா குழந்தை இன்னைக்கு பிறக்கும்னு சொன்னாங்க....................ஆனால் அன்னைக்கு முழுவது பிறக்கல பின் மீண்டும் மாமியார் வீட்டிற்கு போயிட்டொன்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

எனக்கு தெரிந்தவரை தலைதீபாவளி அம்மா வீட்டில்தான் கொண்டாடுவாங்க...தீபாவளிக்கு சில வாரங்கள் இருக்கும்போதே, சீர் வைத்து அழைப்பார்கள்..தீபாவளி அன்றுதான் மோதிரம் போடுவாங்க..உங்க மாமியார் மற்றும் கணவரை சரவணன் மீனாட்சி சீரியல் (11-11-12,12-11-12) பார்க்க சொல்லுங்க...அதுலயே காட்டி இருக்காங்க..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

தலை தீபாவளி ஒரு மறக்க முடியாத தீபாவளி. மோதிர சண்டையே நடந்தது

தலை தீபாவளி அம்மா வீட்டில் தான்,வரிசை வைத்து அழைத்து செல்வார்கள்

முதல் வருஷமே கன்சீவ் ஆனால் எந்த சீர் வரிசையும் வைக்க கூடாதுன்னு சொல்வாங்க. தலை தீபாவளி நான் பார்த்த வரையில் பெரும்பாலும் அம்மா வீட்ல தான் கொண்டாடுவாங்க. புகுந்த வீட்டாருக்கு வசூல் காலமே முதல் குழந்தை பிறந்து முடிக்கும் வரை தானே. அதனால் அந்த காலக்கட்டம் முடிவதற்குள் மேக்சிமம் எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு வாங்க பார்ப்பார்கள். வாங்கிட்டு அமைதியா போனாலும் பரவாயில்லயே.. ஒவ்வொண்ணுத்துக்கும் பிரச்சனை கிளப்பிட்டு, முக்கியமா கன்சீவான பொண்ணு, பிரசவம் முடிஞ்ச பொண்ணு என்ன மனசு கஷ்டப்படுவான்னு துளி கூட நினைச்சு பார்க்காம, அவங்க கொடுமைலயே கண்ணும் கருத்துமா இருப்பாங்க.. எங்கே திரும்பினாலும் ஒரே மாதிரி மக்களா? எத்தனை நூற்றாண்டு ஆனாலும் பாழாய் போன இந்த புகுந்த வீட்டு ரவுசும், ஜம்பமும் என்னைக்கும் மாறாது போல இருக்கு..

// உங்க மாமியார் மற்றும் கணவரை சரவணன் மீனாட்சி சீரியல் (11-11-12,12-11-12) பார்க்க சொல்லுங்க...//

ராஜி, ஆப்போசிட் சைட்ல அவங்க பண்ண வேண்டிய முறையை மட்டும், செய்யும் பழக்கமே இல்லைன்னு சொல்லிடுவாங்க.. அதே மாதிரி தான் சொல்வாங்க..எங்களுக்கு இந்த சீரியல் பார்த்து பழக்கம் இல்லைன்னு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்