எறும்புகள்

சீனி டப்பாவில் எறும்புகள் வந்து தொல்லை கொடுத்தால் சீனி டப்பாவை சுற்றி மஞ்சள் பொடியை தூவிவைத்தால் எறும்புகள் வராது

அய்யோ விஜி நாம எதுலயாவது வீக்கா இருந்தா அத வச்சி விளையாடறதே நம்ம குடும்பத்துல உள்ளவங்களூக்கு எல்லாம் ஒரு சந்தோஷம். போங்க கத்தாமல் இருந்து இருக்கலாம்ல ஒரு கிப்ட்ட மிஸ் பண்ணிட்டீங்க போங்க. ஹா ஹா ஹா உங்க ரியக்ஷன் எப்படி இருந்து இருக்கும்னு நினைச்சி ரொம்ப சிரிச்சிகிட்டேன் இருக்கேன். உங்க தோட்டம் எப்படி இருக்கு விஜி? என்ன விஜி நம்ம அதிரா மேடம் காணும்?

கரப்பான் பூச்சி போயே போச்சு

இதுக்கு மேலேயும் நான் பதில் போடல அவ்வலவு தான் தளிக்கு கோபம் வந்துவிடும்.

போரிக் ஆசிட் பவுடர் இருக்கு இல்லையா கேரம்ப் போட் பவுடர் அதில் சர்க்கரை,மைதா, பால் பவுடர் தலா எல்லாம் இரண்டு மேசை கரண்டி கலந்து மாவு குழப்பது போல் குழந்துத்து சிஊற் சிறு உருண்டைகளாக போட்டு மெயினா சின்க் கீழே பிரிட்ஜ் கீழே, கேஸ் அடுப்பு கீழே எல்லாம் குழந்தைகள் கண்ணுக்கு தெண்படாமல் வைக்கனும், இல்லை என்றால் ஒட்டு பெருக்கி வாயில் போடும் குழந்தைகல் வாயில் போட்டு கொள்Kவார்கள்.
இதை செய்து பாருங்கள்.

thaLi lu lu vil thailam eeriyaavil paarungkaL, green wood boric
ஜலீலா

Jaleelakamal

போங்க உங்களை மிஞ்ஞ யருமேயில்லை. சமையலில் தான் ரெசிப்பி குடுப்பிங்க என்றால் இதுலேயேமா. ஹா...ஹா... நன்றி ஜலீ எனக்கும் கரப்பான் பூச்சிக்கும் ரொம்ப பந்தம் இப்பவே என் அம்மாவுக்கு சொல்கிறே. நன்றீ.. நல்ல ரெசிப்பி.

ஆஆஆஹ்...இப்பவே நான் போய் போரிக் ஆசிட் வாங்கிட்டு வறேன்.ஒரு வேளை பிள்ளைக ஒரு உருண்டையை டேஸ்ட் பன்னிட்டா என்னவாகும்??தேன்க்ஸ் ஜலீலக்கா எனக்கு மருந்தை விட போரிக் ஆசிட் கிடைக்கும் இடமும் சொன்னது ரொம்ப உபகாரமா இருக்கு.
ஷாரதா மர்ழியா நான் ரெண்டு நாளா யோசிச்சு சிரிச்சேன்.இப்ப என் அனுபவம்.
எனக்கு இந்த கரப்பான்பூச்சி அது இதெல்லாம் பயம் அவ்வளவா இல்லை.insects வண்டெல்லாம் கண்டாலும் கண்டுக்காம தான் இருப்பேன்.
1)சின்ன வயசில் எனக்கொரு சின்ன ப்லாஸ்டிக் குடமிருந்தது அதில் என்னுடைய எல்லா கிச்சன் செட் அது இதுன்னு போட்டு வச்சிருந்தேன் வெளியே...பின்னாடி புளியமரமும் கொய்யாவ்ம் இருந்ததால் இலையெல்லாம் உதிர்ந்து எல்லா பொருளிலும் விழுவது வழக்கம்.
நானும் அன்று வழக்கம் போல் உள்ள இருக்கற டாய்ஸ் எல்லாம் வெளிய கொட்டிட்டு மீதி உள்ள இருக்கும் இலையையும் தங்கைட்ட பேசிட்டே கை விட்டு எடுக்க ஒரு பெரிய இலையோ குப்பையோ என்று பிடித்து வெளியே எடுத்து பாத்தா தவளை...கரெக்டா வெளிய வந்ததும் கைய்யில் இருந்து குதித்தது.கைய்யில் தவளைக் கண்டு நான் பயந்ததை விட என் தங்கை போட்ட கூச்சலில் தான் பயந்தேன்.அப்பா இப்பவும் நெனச்சா வயிறு கலக்குது
2)இன்னொரு அனுபவம் என் வீட்டுக்கு பின்னாடி ஒரு குட்டி வீடுண்டு அதாவது விளையாட வேண்டி சும்மா ஒரு சிமென்ட் ஷீட் வச்சு ஒரு 2 பிள்ளைக விளையாடும் அளவுக்கு.அங்கே தான் டாய்ஸ் வச்சு விளையாடுவேன்.என் வீட்டுக்கு பின்னாடி கரும்பு தோட்டம்.
அன்று நானும் தங்கை என் நெஇபர் எல்லாரும் விளையாண்டு கொண்டே இருக்க என் முதுகில் கடக் என என் தங்கை அடித்தது போல இருந்தது திரும்பி பார்ப்பதற்குள் உருவரும் அலறினர்..என்னவென்று புரிந்ததும் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.அது காட்டு பச்சோந்தி...
அப்பா என்ன சொல்ரது ஒரு ஸ்கேல் அளவுக்கு குண்டா பச்சையா முதுகில் முள் முள்ளா சிவப்பி நிற கண்ணும் வாயும் பாக்க ஒரு பேய் தான்.
இதுவெல்லாம் பாத்து ரசிச்சியான்னு தானே??நான் அப்பவே எழுந்து குதிச்சதில் அது சுவற்றில் தாவியது அப்ப ரசித்தேன்.
3) இன்னுமொரு அனுபவம் இப்ப என் தங்கையை புரிந்திருக்குமே ரொம்ப தைரியசாலி என்று??ஒரு நாள் அவள் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள் அவள் அருகில் தென்னை மரம்.திடீரென தென்னையிலிருந்து அவள் தோளில் விழுததே ஒரு குரங்கு..அக்கம் பக்கத்தில் எல்லோரும் ஒரே கூச்சல்..அப்பொழுது என் தங்கை சிரித்தாளா அழுதாளா என்று இப்பவும் எனக்கு டவுட்.ரெண்டுன்கெட்ட நிலையில் அதிர்ச்சியில் மூஞ்சி அழுகிறது சத்தம் சிரிக்கிறது..அவளுக்கு லூசே புடிச்சிடுச்சோ என்று பயந்து விட்டோம்...அது ஒரு ஆளுடைய குரங்கு தவறி வந்து விட்டதாம்.இப்பவும் எப்பவாது சொன்னால் அங்கிருந்து ஓடி விடுவாள்.

தாளிகா,
கரப்பான் பூச்சிங்கிற பதிவைப்பார்த்ததும் நான் இந்தப்பக்கமே வரலை. இப்போத்தான் உங்க ஜகதலப்பிரதாபங்களை எல்லாம் பார்த்து சிரிச்சிகிட்டு இருந்தேன். உங்க இந்த பதிவை மட்டும் உங்க தங்கை பார்த்தாங்க. கண்டிப்பா பயப்படவேமாட்டாங்க. எதுக்குன்னு கேட்கறீங்களா?. உங்களை பொளந்துகட்டத்தான்.
Rajini

தளிகா காலையிலும் உன்னால் சிரிச்சேன் இப்பௌம் உன் பதிவு எனக்க்கு சிரிக்க வைத்தது..எனக்கும் உன் ஊரி அதான் கேரளாவில் ஒரு அனுபவம் இருக்கு..
என் அக்கா டெலிவரிக்காக ஹாஸ்பிடல் சென்ற டைம் அது நானும் என் தம்பியும் தனியாக இருந்த சமயம் அது..சமையல் ஏதோ சேமியா மட்டும் கிண்டுவேன் (மேகி போல் இல்லை ஓரளவு நல்லாவே கிண்டுவேன்)அடுத்த்தாக பக்கத்து வீட்டில் என் என் ஊரில் உள்ள பெண் இருந்தாங்க இரவு அங்கு படுக்க போய்டுவேன்.. ஒரு நாள் என் தம்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வாஷிங் மிசினில் போட்ட துணியை காய போட தோட்டத்துக்கு போனேன் (பக்கத்து வீட்டில் இருப்பவங்க தோட்டத்தை சுத்தமா வைக்க மாட்டாங்க அதனால் அங்கு இருந்து அடிக்கடி எங்க தோட்டத்துக்கு அரணை வருவது வழக்கம்..என் அம்மா சொல்லுவாங்க இப்படி கிளீனா வைக்க மாட்டிகுறாங்க இதனால்தான் இப்படி அரணை வருது இதின் நாக்கில் உயிர் கொல்லும் விஷம் இருக்கு சும்மா நாக்கால் நக்கினாலே போதும் சிறிது நேரத்தில் மரணம்தான் அதனால் கவனமா இருன்னு சொல்லுவாங்க)அப்ப காலில் ஏதோ ஊருவது போல் இருந்தது..தனியா இருப்பதால் தோட்டத்தில் பயத்துடன் துணியை காய வைத்துட்டு இருந்தேன்..அதனால் கவனிக்க தவறி விட்டேன் அப்புறம்திரும்பவும் ஊறுவது போல் இருந்தது அப்ப பார்த்தா அரணை என் காலில் இருந்து இறங்கிட்டு போனது..பார்த்ததும் எனக்கு கை காலெல்லாம் நடுக்கம் மயக்கம் வாராமாதுரி இருக்கு ஒன்னும் ஓடல நேரா வீட்டுக்கு போய் ஹாலில் உட்கார்ந்து சுவர்கத்தை தா ந்னு ஓத ஆரம்பித்தேனே அவ்லோதான் அதுக்கு பின் என்ன ஆச்சுன்னே நியாபகம் இல்லை காலை 9 மணிக்கு உட்கார ஆரம்பித்தேன் என் தம்பி ஸ்கூல் போயிட்டு ரிட்டன் வந்தான் கதவு எல்லாம் ஓப்பன் அக்கான்னு ரொம்ப தட்டி கூப்பிட்டான் அப்போதான் நினைவு வந்தது வீடெல்லாம் இருட்டு நைட் ஆகிட்டு அப்ப நான் கேட்ட முதல் வார்த்தை தம்பி நான் இன்னும் சாகலயான்னு?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தாங்ஸ் ஜலீலா அக்கா நீங்க கொடுத்த ஐடியாவ வச்சி என்னோட எதிரிய கொள்ள போறேன். ஒழிந்தான் என் எதிரி. எப்படிகா உங்களால மட்டும் எல்லாதுக்கும் ஐடியா கொடுக்க முடியுது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சிக்கு ரெசிபி வச்சி இருக்கீங்க போங்க (அக்கா சும்மா காமெடிக்கு கோபிக்க வேண்டாம்)

ரூபியும் மர்ழ்லியும் இந்த சூப்பர் அனுபவங்களை எப்போ போட்டீங்கப்பா?நான் இப்போ தான் பார்த்தேன்.ஒரே சிரிப்பு ரூபி,உன் தங்கை போல தான் நானும்,ஹீ...ஹீ..
உங்களுக்கு ஒன்னு தெரியுமா?எனக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே .....இந்தinsects கண்டால் ஒரே ஓட்டம் தான்.சொன்னால் சிரிப்பீங்க.என்னகு பட்டாம்பூச்சிக்கே நடுக்கம்,ஆஹா..இப்போ நீங்க சொல்லரதுக்கெல்லாம் நான் டன்ட...னக்கா..டனக்கு..னக்கா..தான்.
நான் இங்கு சைனா வரப்போரேனு சொன்னவுடன்,எங்க வீட்ல எல்லோரும் அய்யோ!பூச்சி பேரைகேட்டாலே ஓடுவியே,எப்படி அதை சாபிடர ஊர்ல போயி இருப்பேனு.,இன்னைக்கு வரை அதை எல்லம் இன்னும் வீடுக்குல அடி எடுத்து வைக்கலை.நிம்மதியோ..நிம்மதி...
இந்த பச்சை வெடுக்கிளி தெரியும்ல அத பார்த்தால்.அல்லல்லா................ எடு,விடு,ஜூட்....

அக்கா,இந்த சம்மர் காலத்தில் கரப்பான் பூச்சி ஒன்னு ஒன்னா வர ஆரம்பிக்கும்.வர ஆரம்பிக்கும் முன்னாடியே அக்காவின் சுப்பர் ஐடியாவை யூஸ் பண்ணி கரப்பானுக்கு போயிந்தி....
ச்சொலிகாச்சு.....its gone....சொல்லீர்வோம்ல!
கரப்பானுக்கு வேட்டு வைக்க நேரம் வந்தல்லோ.......

என்ன ஹிபா கே.ஆர் ஒரே பாட்டு மயம் ஓ அந்தாக்ஷரி ஆரம்பித்து விட்டது என்று நினைத்து நானும் பாட்டை ரெடி பண்ண ஆரம்பித்து விட்டேன், ஆனால் இன்னும் இங்கு கரப்பான் பூச்சி தான் ஓடுது.

எங்களுக்கும் கரப்பான் , தேள், எலி அனுபவம் எல்லாம் உண்டு.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்