திகில் கதை நாவல்கள் மற்றும் எழுத்தாளர்கள்

யாரிடமாவது தமிழ் திகில் கதை (அதாவது ஆவி அல்லது அமானுஷ்ய) புத்தகங்கள் இருக்கிறதா? இருந்தால் தயவு செய்து எனக்கு ஈ-மெயில் பன்னவும் அல்லது நல்ல திகில் கதை எழுத்தாளர்களின் பெயர்களயாவது சொல்லவும். Thank you!!!

ராஜேஷ் குமார்.இந்திரா சொளந்தராஜன் ஆகியோரது திகில் நாவல்கள் நன்றாக இருக்கும்.

ராஜேஷ் குமார்.இந்திரா சொளந்தராஜன் நாவல்கள் படித்துவிட்டேன்... ஆனால் ராஜேஷ் குமாரின் அதிகமான நாவல்கள் துப்பறியும் மர்ம நாவல்களாகவே உள்ளன. நான் எதிர்பார்க்கும் அமானுஷ்யமான திகில் கதைகள் இல்லையே. உங்களுக்கு அவருடைய அப்படி ஏதாவது நாவல் தெரியுமா?

நடப்பவை எல்லாம் நன்மைக்கே!!!

நான் திகில் கதை என்று நினைத்தேன்.ஆவிக் கதை தெரியதப்பா.எனக்கு ஆவி என்றாலே பயம்.

ஹாய் ஹஸ்னா

திரு .கே.யுவராஜ் அவர்களின் ஆவிகளுடன் எங்கள் அனுபவங்கள்,

திருவிக்க்ரவண்டி வி ரவிசந்திரன் அவர்களின் ஆவிகள் பேசுகின்றன , பேய் மாளிகை (உண்மைச் சம்பவம்) அமானுஷ்யப் பெண்மணி& ஆவிகளுடன் பேசும் முறைகள் ,

வெ.சுப்ரமணியன் அவர்களின் ஆவிகள் அளித்த ஆனந்த அனுபவங்கள்

ஆகிய கதைகள் படிப்பதர்க்கே மிகவும் தைரியம் வேண்டும் ஆனால் படிக்க படிக்க ஆவலை தூண்டும் நாவல்கள் இவை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி கனிமொழி! கண்டிப்பாக நான் இந்த புதகங்களை தேடி வாசிப்பேன். உங்களிடம் இந்த புத்தகங்கள் இருக்கின்றதா?

நடப்பவை எல்லாம் நன்மைக்கே!!!

ஹஸ்னா,
சமீபத்தில் என் நட்பு வட்டத்தில் கேள்வி பட்ட இரண்டு திகில் கதை எழுத்தாளர்கள் கலாதர், கிருஷ்ணகுமார்.
திறக்கக் கூடாத கதவு என்னும் கதை ஒன்று தான் கிருஷ்ணகுமார் எழுதி நான் படித்தது... ஆவி கதை உங்களுக்கு பிடிக்கும் என்றால் இதுவும் உங்களுக்கு பிடிக்கும்...

அதை தவிர இந்துமதி கூட சில கதைகளில் பில்லி சூனியம் முதலியவற்றை மையமாக வைத்து எழுதி இருக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் நாவல் முழுக்க முழுக்க அமானுஸ்யம் ஆவிகளை பற்றியதாகவே இருக்கும் கோட்டயம் புஷ்பநாத் எழுதிய மோகினி சபதம் மோகினி கோட்டை இன்னும் பல நாவல்கள் தத்ரூபமாகவும் அதே சமயம் திகிலாகவும் கலந்து சுவராஸ்யம் தரும் உங்கள் மெயில் ஐடி குறிப்பிடவில்லை அதனால் மறுமுறை அறுசுவை வந்தால் இந்த இழை பார்க்கும் போது தெரிந்து கொள்ளவும்

Thank u so much.

You cannot believe in God until you believe in yourself.

மேலும் சில பதிவுகள்