பட்டாணி குருமா

தேதி: December 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (17 votes)

 

பட்டாணி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தயிர் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு
அரைக்க:
தேங்காய் - 3 துண்டு
கசகசா - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5


 

பட்டாணியை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கசகசா, முந்திரியை ஊற வைத்து தேங்காய் சேர்த்து அரைக்கவும். கடைசியாக சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து குழைய வதக்கவும்.
வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். பின் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் தயிர் சேர்த்து கிளறவும். ஒன்றாக சேர்ந்து வந்ததும் நீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
கொதித்த பிறகு வேக வைத்த பட்டாணி மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான பட்டாணி குருமா தயார். இட்லி, தோசை, சாதம், நெய் சாதம், சப்பாத்தி, ஆப்பம் என அனைத்திற்கும் ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஐ முகப்பில பார்த்ததும் தெரிஞ்சிடிச்சே உங்களொடதுதான்னு. :-) டிஷ் மட்டுமா படமே கலர்புல்லா இருக்கு. குறிப்பும் அருமை :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பட்டாணி குருமா super. விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்.

அருமையான குறிப்பு வனி பார்க்கவே யம்மியா இருக்குப்பா(:-
வாழ்த்துக்கள் தோழி!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நன்றாக உள்ளது

supera iruku naanum parthadum ungaludayadudhan du kandu pidichtaen...innaiku unga veetla indha dish thaana?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ம்ம்ம் இப்பல்லாம் நானும் முகப்பில் பார்த்தே யாரோட குறிப்புன்னு ஓரளவு கரெக்டாவே கெஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். கலக்கல் குறிப்பு அக்கா வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சூப்பர் ரெசிபி கொடுத்து இருக்கீங்க வழமை போல். இதில் பச்சைப் பட்டாணி சேர்க்கலாமா?

அன்புடன்,
ஹலீமா

super recipe. how to add it to my favourites

வனி, பட்டாணி குருமா ஜோடி சப்பாத்தியையும், பூரியையும் தேடுது.. குருமால இதுவரை சாம்பார் பொடி சேர்த்ததில்லை..சாம்பார்க்கு தானே சாம்பார்பொடி.. குருமாவுக்கு குருமா பொடிதானே போடனும் ;) பேஸ்புக்ல அதிகம் உலாவறதால இந்த நோய் தொத்திடுச்சி..;) நெக்ஸ்ட் டைம் இந்த முறையில் செய்து டேஸ்ட் பண்ணிட்டு சொல்றேன். முகப்பு படத்தில் பச்சைமிளகாய் வச்சிருக்கீங்க.. குருமால காரம் பத்தலைன்னா அந்த மிளகாயை கடிச்சுக்கலாமா ;) வழக்கம் போல படங்கள் அழகு. குறிப்பு மணம் + ருசி.. வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா உங்கள் பட்டாணி குருமா ரொம்ப நல்லா இருக்கு. படங்களும் அழகு

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

பார்க்க நன்றாக உள்ளது .இதை ப்ரோசன் பட்டாணியில் செய்யலாமா

வனி,
நான் வெங்காயத்தையும் அரைத்து செய்வேன்..
அடுத்த முறை இப்படியே செய்துவிட்டு சொல்கிறேன்..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயந்தி... மிக்க நன்றி :)

தீபகலா... மிக்க நன்றி :)

அருள்... மிக்க நன்றி :)

ஜெயேந்திரன்... மிக்க நன்றி :)

சம்னாஸ்... மிக்க நன்றி. இன்று இல்லை, என்றோ... :)

நித்யா... மிக்க நன்றி. :)

ஹலீமா... மிக்க நன்றி. பச்சை பட்டாணியும் சேர்க்கலாம் :)

செல்வி... மிக்க நன்றி. குறிப்பின் கீழே “விருப்பட்டியலில் சேர்”னு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதை பயன்படுத்துங்க. :)

கல்பனா... ;) மிக்க நன்றி. //சாம்பார்க்கு தானே சாம்பார்பொடி.. குருமாவுக்கு குருமா பொடிதானே போடனும் ;)// - நியாயமான கேள்வி!!! :)

ஹலீலா... மிக்க நன்றி :)

ரூபினி... மிக்க நன்றி. ஃப்ரோசனும் பயன்படுத்தலாம் :)

கவிதா... மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி பட்டாணி குருமா ரொம்ப நல்லாருக்கு கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்.......:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டாணி குருமா செய்து இருக்கேன்,உங்க முறையிலும் செய்து பார்க்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பட்டாணி குருமா சூப்பரா இருக்குக்கா:) கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன்...

SSaifudeen:)

பட்டாணி குருமா நேற்று பச்சைப் பட்டாணிலெ செய்து பார்த்தாச்சு. ரொம்ப நல்லா வந்தது. ரொம்ப ரசிச்சு சாப்பிட்டோம். இனி அடிக்கடி செய்யக்கூடிய குறிப்புகள்லெ இதையும் சேர்த்தாச்சு. ரொம்ப நன்றி,

அன்புடன்,
ஹலீமா

picturea supera irukuthu mam.samaika theriyathavanga kuda unga websitea patha easya cook panuvanga...............

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து பார்த்து நல்லா இருக்குன்னு கேட்டாலே ஒரு தனி மகிழ்ச்சி தான். ரொம்ப சந்ஷோஷம் ஹலீமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அது தான் அறுசுவையின் மகிமை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா கடைசி ப்லெட் எனக்குதான் அக்க யேனா இதுல அவ்லொ காரம் இருக்காதுனு நினைக்ரேன் அக்கா சோ எனக்கு ரொம்ப புடிச்ச ரெசிபி இது அம்மாவும் இப்பிடிதான் செய்வாங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மிக்க நன்றி. :) இது காரம் கொஞ்சம் குறைவு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா