ரெடி... ஸ்டெடி... க்ளிக் !!!

அன்பு தோழிகளே...

பலரும் முக புத்தகத்தில் போட்டோகிராஃபி பற்றி கேட்டிருந்தாங்க... நிச்சயமா சொல்லி தரும் அளவு எனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி ஒரு இழை வந்தா இங்க இருக்க பல எக்ஸ்பர்ட்ஸ் இதில் பதிவிடுவீங்க, நானும் கத்துக்கலாம் என்ற ஆசையில் இந்த இழையை துவங்கி இருக்கேன். எந்த பிரிவு... இந்த தலைப்பு ஏற்ற மாதிரி ஏதும் தென்படாத காரணத்தால் வழக்கம் போல வனி “பொது பிரிவு”க்கு போயாச்சு. ;)

மிக பிரபலமான ஃபோட்டோக்ராஃபர் ஒரு நண்பர்... சில காலம் முன் வெளிநாட்டில் இருந்து மாலத்தீவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவரிடம் எனக்கு ஒரு SLR வாங்கி தர சொல்லுங்கள் என என் கணவரிடம் ரெகமண்ட் பண்ண சொன்னேன்... அவரோ நேர் எதிராக சொல்லிட்டார்... “There is nothing in the camera... Its just who is behind it"னு. அவர் விலை மிக குறைவான கேமராக்களில் பட்டையை கிளப்பும் படமெல்லாம் எடுத்து பல ஆங்கில மேகசின்களில் பாராட்டப்பட்டவர் என தெரிந்து கொண்டேன். அதான் நாமும் முயற்சிப்போம்னு சொந்த முயற்சியில் கத்துக்க பார்க்கிறேன்.

இந்த மாதிரி இழையெல்லாம் ஆரம்பிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளான்னு யாரும் கேட்டுபுடாதீங்க... நான் அழுதுடுவேன். நிஜமாவே கத்துக்க தான் துவங்கி இருக்கேன். கூடவே எனக்கு தெரிஞ்ச சிலதையும் இங்க நானும் பகிர்ந்துக்கறேன். தப்பிருந்தா சொல்லி கொடுங்க... தெரிஞ்சுக்கறோம். :)

ரூல் நம்பர் 1: நலம் விசாரிப்பு / அரட்டை கூடாது.
ரூல் நம்பர் 2: ஆங்கில பதிவுகள் கூடவே கூடாது.

சரி தானே... ஸ்மைல் ப்ளீஸ்.... க்ளிக் :)

இன்னைக்கு தான் யோசிக்கவே துவங்கி இருக்கேன்... அதனால் வருகிறேன் விரைவில்... எதில் இருந்து துவங்குவதுன்னு யோசனையோட :)

1. டிஜிட்டல் கேமராக்களில் உள்ள பேசிக் மோட்ஸ்

2. ஃபுட் ஃபோட்டோகிராஃபி

நிச்சயம் டிஜிட்டல் கேமரா பற்றி மட்டுமே நான் பேச போறேன்... ஏன்னா இதுவரை SLR கேமராக்களை நான் மற்றவர்களுடையதை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன்... அவங்களை படம் எடுத்து கொடுக்க ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இ இ இ ஈ ஈ ஈ
ஸ்மைல் பண்ணிட்டேன் எடுத்திட்டீங்களா?
போட்டோ எடுக்கும் பொழுது சிறிய பொருட்களை எடுக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவற்றை விளக்கி கூறுக தோழியே!! இ இ இ ஈ ஈ ஈ ஈ.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி :) க்ளிக் ஆயிட்டீங்க.

வரேன் வரேன்.. முதல்ல பேசிக் தகவலோட வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல கேமரா வாங்கும் போது கவனிக்க வேண்டியது:

1. பிக்ஸல் (இது மட்டும் தானே நமக்கு தெரியும் ;))

- அதிக அளவில் பிக்ஸல் இருந்தால் நீங்க எடுக்கும் படத்தில் டீடெய்ல்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். அதாவது ஒரு பறவையை படம் எடுத்தீங்கன்னு வைங்க... அதன் மேல் உள்ள சின்ன சின்ன கோடுகள், புள்ளிகள் கூட தெளிவா தெரியும். அதனால் இந்த மாதிரி அதிக பிக்ஸல் உள்ள கேமராக்களில் எடுத்த படங்களை நல்ல பெரிய படங்களா என்லார்ஜ் பண்ணி ஃப்ரேம் பண்ணலாம். அப்பவும் அதோட க்ளாரிட்டி குறையாம இருக்கும். படம் தெளிவா இருக்கும்.

2. சூம்

- எவ்வளவுக்கு எவ்வளவு சூம் நல்லா இருக்கோ அவ்வளவுக்கு உங்களால் தூரத்தில் இருந்து டீடெய்ல்ஸ் மிஸ் ஆகாம படம் எடுக்க முடியும். பெரிய க்ரூப், அல்லது கிட்ட போகாம எடுக்க வேண்டிய ஷாட்ஸ்க்கு சூம் ரொம்ப நல்லா இருப்பது அவசியம். எவ்வளவு சூம் வரை படத்தோட தரம் அதாவது க்ளாரிட்டி குறையாம இருக்கு என்பதை கவனிக்கனும். ஒரு குறிப்பிட்ட அளவு சூமுக்கு பின் படம் மங்கலாகும்.

3. ஸ்பீட் & மோஷன் டிடக்‌ஷன்:

- மோஷன் டிடக்‌ஷன் எல்லாம் கவனிக்கனும். அதாவது சில கேமராவில் அசையும் பொருள், ஓடுவதை எல்லாம் எடுக்க இயலாது. எடுத்தால் புகைப்படத்தின் தரம் குறைவாக இருக்கும்... ஷேக் ஆனது போல் படம் மங்கலாக இருக்கும். மோஷன் டிடக்‌ஷன் நல்லா இருக்க கேமராக்களில் ஓடிக்கொண்டிருக்கும் மின் விசிரியை படமெடுத்தால் கூட அதன் ஒவ்வொரு ப்ளேடும் தனி தனியே தெரியும் (எடுத்த அனுபவம் தான்).

4. ஷட்டர் ஸ்பீட்:

- இது எவ்வளவு அதிகமா இருக்குன்னு பாருங்க. 1/8 - 1/1600 sec போல இருக்கும். இது ஒவ்வொரு கேமராக்கும் மாறுபடும். 1/8 என்பது மிக குறைவு. 1/1600 என்பது வேகமான ஷட்டர் ஸ்பீட். ஷட்டர் ஸ்பீட் கம்மியாக இருந்தால் இமேஜ் க்ளாரிட்டி முகியமா ஓடுவது, நகர்வதை எடுக்கும் போது நல்லா வராது. அதிகமாக இருந்தால் ஷாட் மிக வேகமாக பிடிபடும்... தரமும் நன்றாக இருக்கும். மங்கலாகாது. இப்போது வரும் கேமராக்களில் இமேஜ் ஸ்டெபிலைசர் இருப்பதால் ஓரளவு குறைவான ஷட்டர் ஸ்பீடிலும் எடுக்க இயலும்.

5. அபர்சர் (Aperture):

இதை பற்றி பின்பு சொல்கிறேன். இது ஸ்பெசிஃபிகேஷனில் f value என்றிருக்கும். எவ்வளவு மேக்ஸிமம் இருக்கிறது என்றும், எவ்வளவு குறைவக இருக்கிறது என்றும் பாருங்கள். அதிக f value படத்தில் கூடுதல் டெப்த் கிடைக்க உதவும்.

இப்போதைக்கு நினைவுக்கு வந்தது இவை தான்... இதில் ‘பதிலளி’ தட்டாம விடுங்க, மீண்டும் ஏதும் தோண்றினால் இதையே எடிட் செய்கிறேன். இப்போதைக்கு கருத்து தெரிவிக்க மேலே உள்ளதையே பயன்படுத்துங்கள். :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி IXUS 120 IS Canon டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் பொழுது சிறீய பொருட்களை அருகில் சென்று எடுக்கும் பொழுது சூம் பயன்படுத்தி எடுத்தால் கிளாரிட்டி குறைவது ஏன்? எப்படி எடுக்கலாம்?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

போட்டோ எடுக்க கேமரா மட்டும் போதாதே... இன்னும் நிறைய வேணும்...

1. பொறுமை.

- [இதுக்கும் உனக்கும் ரொம்ப தூரம்னு யாரும் திட்ட கூடாது]. பிடிச்ச விஷயங்களில் எனக்கு பொறுமை கொஞ்சம் உண்டு. ;) ஒரு படத்தை எடுக்கணும் என்ற வேகத்தை விட அதை அழகா எடுக்கணும் என்ற பொறுமை ரொம்ப அவசியம். ஒரு மீன் / பறவை / பூச்சினே கூட வெச்சுக்கங்க... அது நின்னு இந்தா இப்படி எடு அப்படி எடுன்னு போஸ் கொடுக்க போறதில்லை... நாம தான் அது நமக்கு தேவையான பொஷிஷனுக்கு வரும் வரை வெயிட் பண்ணனும். காத்திருந்தா தான் நல்ல புகைப்படம் கிடைக்கும்.

2. தெரிந்து கொள்ளுங்கள்.

- உங்க கேமரா பற்றி நல்லா தெரிஞ்சுக்கங்க. அதில் என்ன செட்டிங் இருக்கு, எதை வைத்தா என்ன மாதிரி படங்கள் எடுக்கலாம்னு நல்லா புரிஞ்சுக்கங்க. செட்டிங் மாற்ற பழகிக்கங்க.

3. ஆங்கில்.

- உலகில் எல்லாருமே / எல்லாமே அழகு தான். எல்லாம் எல்லா ஆங்கிலிலும் அழகில்லை... ஒவ்வொரு கோனத்தில் இருந்து பார்க்கும் போது ஒவ்வொன்னு அழகு. நாம எடுக்கும் ஆங்கிலில் ஒரே விஷயத்தை அழகாகவும் காட்டலாம், அசிங்கமாவும் காட்டலாம். அதனால் படம் எடுக்கும் முன் வித விதமான ஆங்கிலில் அதை நாம் கேமராவில் பார்ப்பது முக்கியம். எந்த ஆங்கிலில் உங்க கேமரா அதை சரியாக பிடிக்கும் என்பதை நாம் முதல்ல தெரிஞ்சுக்கணும். உதாரணமா... ஒரே பூவை உட்கார்ந்து எய்ம் பண்றதுக்கும், படுத்து எய்ம் பண்றதுக்கும், நின்னு எய்ம் பண்றதுக்கும், இடமிருந்து, வளமிருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அது பூவின் வடிவம் மட்டுமல்ல... உங்களை சுற்றி உள்ள வெளிச்சமும் காரணம்.

4. வெளிச்சம்.

- எடுக்க போகும் பொருள் அல்லது சீனரிக்கு தேவையான வெளிச்சம் இருக்கா பாருங்க. எப்பவும் நம்ம கேமராவின் ஆட்டோ ஃப்ளாஷ் செட்டிங் நமக்கு கை கொடுக்காது. நமக்கு தேவையான அளவுக்கு ஒளியை நாம கட்டுபடுத்தணும். இப்போ ஒரு மலை பகுதி போறோம்னு வைங்க... அங்க மிஸ்ட், ஃபாக், க்ளவுட் எல்லாம் இருக்கும்... அது இல்லாம அந்த இடத்தை எடுக்க அது நகரும் வரை காத்திருக்கனும். சூரிய வெளிச்சம் குறைவா இருக்கலாம். மேகம் நகர்ந்து வெளிச்சம் கிடைக்க காத்திருக்கணும். கடல்... முக்கியமா, எந்த இடத்தில் வெளிச்சம் எந்த அளவில் இருக்கு என்பதை வைத்து தான் இந்த படம் நல்லா வருமா வராதான்னே இருக்கு. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் வெளிச்சத்தின் அருமையை தெரிஞ்சுக்க கடலை வெவேறு நேரத்தில் படமெடுத்து பாருங்க... நல்லா வித்தியாசம் இருக்கும் படத்தில்.

5. ட்ரைபாட்.

- இது வேற ஒன்னுமில்லை, கேமராவுக்கு கீழ கால் வெச்ச ஸ்டாண்ட் மாதிரி ஃபிக்ஸ் பண்ணுவாங்களே.. அது தான். இதை முன்பெல்லாம் ஆட்டோமேட்டிக் எடுக்க மட்டும் தான் தேவைன்னு நினைச்சேன். ஸ்டூடியோவில் பார்த்திருப்பீங்க. விரும்பினா ட்ரைபாட் பயன்படுத்துங்க. அதை வெச்சு ஷூட் பண்ணும்போது நாம் அசைந்தாலும் கேமரா அசையாது... நல்ல தெளிவான படங்கள் எடுக்க முடியும். [நான் இதை எல்லாம் வாங்களீங்க... நம்ம போற க்ளோஸப் ஷாட்டுக்கு இதெல்லாம் தேவைப்படல]

6. மாற்றம் / வித்தியாசம்.

- போட்டோக்களை ஒரே மாதிரி எடுக்காதீங்க. எல்லாவற்றிலும் மாற்றம் வேணும். மாற்றங்கள் செய்து எடுக்கும் போது நிறைய கத்துக்கவும் முடியும். அதாவது வேறு ஆங்கில், வேறு இடங்கள், வேறு ஃப்ரேம் இப்படி நிறைய.

7. பயிற்சி.

- இது எல்லாத்துக்கும் மேல முக்கியமானது... பயிற்சி. நிறைய படங்கள் எடுங்க. எப்பவும் உங்க கேமராவை தயார் நிலையில் வைங்க. தினமுமே எதாவது எடுத்து பழகுங்க. ஒரு விஷயத்தை ஒரே முறை படமெடுக்காம வித விதமா நிறைய ட்ரை பண்ணுங்க... வெவேறு ஆங்கில், வெவ்வேறு செட்டிங்... அதில் எது உங்க கண்களுக்கு சரியா இருக்குன்னு பாருங்க. ரீட் தி போட்டோஸ்... எல்லா படங்களிலும் எது நல்லா இருக்கு, எது நல்லா இல்லைன்னு முதல்ல பாருங்க. இவை நிச்சயம் உங்களை நல்ல புகைப்படம் எடுக்க வைக்கும்.

8. கற்பனை.

- ஒரு ஒன்னுமில்லாத விஷயத்தை அழகா காட்ட கொஞ்சம் கற்பனை வேணும். அது எப்படி இருந்தா அழகா இருக்கும்னு கொஞம் யோசிக்கணும். ப்ளான் பண்ணனும்.

இது எல்லாம் சாதாரண டிஜிட்டல் கேமராவோட உள்ள நம்மை க்ரேட் போட்டோக்ராஃபர் ஆக்குதோ இல்லையோ... அட்லீஸ்ட் மினிமம் குட் போட்டோக்ராஃபர் ஆக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம் ஒரு இழை தொடங்கியிருக்கஙன்ன அதில் விஷயம் நிறைய இருக்கும் கத்துக்க. வெரும் button மட்டும் அமுக்க தெரிந்த என்னைப் போன்ற ஆள்களுக்கு ரொம்ப தேவையானது. நிறைய எதிர்பாக்கிறோம்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

ரியலி கிரேட் ஜாப். படம் எடுக்கும் போது இவ்வளவு கவனிக்கனும்ன்னு உங்க பதிவை படித்த உடன் தான் தெரிந்தது. நீங்க பதிவை கண்டின்யூ பண்ணுங்க, மேலும் படிக்க ஆவலா இருக்கு.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அருள்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, பேசிக் தகவல் முடிச்சுட்டு இந்த கேள்விக்கு பதில் சொல்றேன்... உண்மையில் பேசிக் முடிச்சுட்டா இந்த கேள்விக்கு நீங்களே பதில் சொல்வீங்க :)

லீமா... உங்க நம்பிக்கைக்கு மிக்க நன்றி :) எனக்கு தெரிஞ்சவரை பயனுள்ள தகவலை தர நிச்சயம் முயற்சிக்கிறேன்.

சுதா... மிக்க நன்றி :) உங்களை போல் எல்லாரும் படிப்பாங்கன்னு நம்பி தான் துவங்கி வெச்சிருக்கேன். பார்ப்போம் எப்படி போகுதுன்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆரம்ப நிலையில் எல்லாரும் பயன்படுத்தும் ஒரே மோட் “Auto" தான். ஆனா என்ன படம் எடுக்கனுமோ அதுக்கு ஏற்ற மாதிரி மோட்ஸ் மாற்றினா படத்தில் பெரிய அளவில் வித்தியாசம் தெரியும். அதனால் அதை எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம். டிஜிட்டல் கேமராவில் காணப்படும் மோட்ஸ் பற்றி பார்க்கலாம்.

1. Auto

- இதை தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம். சாதாரண புகைப்படத்துக்கு இது போதுனானது தான். அதாவது நாம எதை எய்ம் பண்றோம்னு சென்சார் உணர்ந்து அதுவாகவே ஒரு முடிவெடுத்து, இதுக்கு இது இது சரின்னு தன்னால் முடிந்த பெஸ்ட் செட்டிங்கை வைக்கும். செட்டிங்னா... ISO, ஷட்டர் ஸ்பீட், அபர்சர், பேலன்ஸ், ஃப்ளாஷ்... எல்லாமே. சில கேமராவில் ஆட்டோ மோடில் நாம் ஃப்ளாஷ் வேணுமா வேணாமான்னு செட் பண்ணலாம். அதை தவிற மற்ற எந்த மாற்றமும் நாம் செய்ய இயலாது. ஓரளவுக்கு நல்ல தரமான இமேஜ் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியமா இந்த மோடில் இருந்தால் ஸ்க்ரீனில் தெரியும் மோட் சிம்பலை கவனிக்கனும். அதவாது ஆட்டோ மோடில் வைத்து நான் ஒரு கொத்தமல்லியை (இங்க கொத்தமல்லி தான் சப்ஜக்ட்) படமெடுக்கறேன்னு வைங்க... நான் கேமராவை அதாவது லென்ஸை மிக அருகில் வைத்து எய்ம் பண்ணும் போது தான் கேமரா நான் நுனுக்கமான சின்ன பொருளை எடுக்க முயற்சிக்கிறேன் என உணர்ந்து “Macro” மோட் தேர்வு செய்யும். அப்போது ஸ்க்ரீன் பார்த்தால் மூன்று இதழ் கொண்ட ஒரு பூ சிம்பல் இருக்கும். கொஞ்சம் தூரத்தை அதிகம் பண்ணா, மோட் மாறிடும். அதனால் அதை எல்லம் கவனித்து எந்த மோடில் வேண்டுமோ அந்த மோட் ஸ்க்ரீனில் காட்டுகிறதா என்பதை கவனித்து ஷட்டர் ரிலீஸ் பண்ண பட்டனை அழுத்த வேண்டும்.

ஆனாலும் கேமராவையே எல்லாம் கெஸ் செய்து முடிவு செய்ய விடுவதை விட, நாமும் என்ன எடுக்க போகிறோம் நமக்கு என்ன வேண்டும் என்ற தகவலை அதற்கு சொன்னால் சிறப்பு. அதுக்கு தான் மற்ற மோட் & செட்டிங் எல்லாம்.

2. Macro

- உங்கள் கேமராவில் மோட் சூஸ் பண்ண பார்த்தா ஒரு மூன்று இதழ் கொண்ட பூ வடிவம் இருக்கும். இது மாக்ரோ மோட். அதாவது மிக நுனுக்கமான, அல்லது மிக சிறிதான பொருளில் / சப்ஜக்ட்டில் உள்ள டீடெய்ல்ஸ் தெளிவாக எடுக்க உதவும். வழக்கமான லென்ஸுக்கும் சப்ஜக்ட்டுக்கும் உள்ள தூரம் இதில் குறைவாக இருக்கு. சில செண்டிமீட்டர் இடைவெளியே இருக்கும். அதனால் மிக க்ளோஸப் ஷாட் எடுக்க இயலும். இது எவ்வளவு நெருக்கமான ஷாட் எடுக்கலாம் என்பது ஒவ்வொரு கேமராவுக்கும் மாறுபடும். இந்த மோடில் எடுக்கும் போது சப்ஜக்ட்டும் சரி, கேமராவும் சரி... அசையாமல் இருப்பது அவசியம். கூடவே இதில் f value குறைவாக இருக்கும். அதாவது அதிக அபர்சர் (இதை பற்றி தனியே பார்க்கலாம்). அதனால் எடுக்கும் இமேஜில் டெப்த் மிக குறைவாகவே இருக்கும். இன்னும் விளக்கமா புரியும் படி சொல்லலாம்...

ஒரு பூந்தோட்டத்தில் நிறைய பூக்கள் இருக்க ஒரு இடத்தில் ஒரு பூவை மட்டும் நீங்க மாக்ரோ மோடில் எய்ம் பண்ணிங்கன்னு வைங்க. அந்த பூ மட்டுமே க்ளோசப்பில் தெரியும். அதன் டீடெய்ல்ஸ் ரொம்ப தெளிவா இருக்கும். அதன் மகரந்தம், இதழ் என எல்லாம் க்ளியரா தெரியும்... ஆனா அதை சுத்து இருக்கும் செடிகள், பேக்ரவுண்டில் உள்ள செடி, பூ எதுவுமே படத்தில் தெளிவா தெரியாது. மங்கலாக இருக்கும். அதனால் நாம் எதை எய்ம் பண்ண வேண்டுமோ அதற்கு ஏற்ற மாதிரி சற்று முன்னும் பின்னுமாக நாம் நகர்ந்தோ, அல்லது கேமராவை நகர்த்தியோ தேவையான டீடெய்ல்ஸை தெளிவா கொண்டு வரலாம். இது முக்கியமா சின்ன சின்ன பூச்சி, பூக்கள், புழு, சின்ன பொருட்கள் எல்லாம் எடுக்க சரியான மோட்.

இந்த மோடுக்கு எப்போதுமே வெளிச்சம் நன்றாக இருக்க வேண்டும். குறைந்த வெளிச்சத்தில் இது சரியாக இருக்காது. கொஞ்சம் மங்கலாகவே தெரியும். ஜூம் செய்தாலும் இந்த மோட் சரியாக வராது. முடிந்தவரை இந்த மோடில் பகலில் மட்டுமே படங்கள் எடுப்பது நன்று. மற்றபடி இந்த மோடில் எடுக்க செயற்கையாக வெளிச்சம் கொடுத்தால் தான் நன்றாக இருக்கும். அது நிச்சயம் கேமரா ஃப்ளாஷ் அல்ல. காரணம் மிக அருகாமையில் உள்ளதை படம் எடுக்கும் போது நம் கேமராவில் உள்ள ஃப்ளாஷ் பயன்பாடு உதவாது. அது நம் சப்ஜக்ட்டில் நமக்கு தேவையான இடத்துக்கு வெளியே தான் வெளிச்சம் கொடுக்கும். ஏன்னா நாம் ரொம்ப கிட்ட வெச்சிருப்போம் கேமராவை. அதனால் ஃப்ளாஷ் ஆஃப் செய்து வேறு விதமாகவே வெளிச்சம் அங்கே கொண்டு வர வேண்டும். இந்த மோடில் வைத்துக் கொண்டு நாம் நமக்கு தேவையான அபெர்சர் செட் செய்ய இயலும். அதன் மூலம் சப்ஜக்ட்டுக்கு பின்னால் அதை சுற்றி உள்ள விஷயத்தையும் ஃப்ரேமில் கொண்டு வரலாம். டெப்த் அதிகப்படுத்தலாம். (அதை பற்றி இனி வரும் நாட்களில் பார்ப்போம்.)

குறிப்பு:

இன்னும் நிறைய மோட் இருக்கு... அதை எல்லாம் ஒரே பதிவில் சொல்ல முடியல. நாளை மீதம் உள்ள சில மோட்கள் பற்றி பதிவிடுகிறேன். நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்