நாகூர் வாடா

தேதி: December 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (10 votes)

பச்சரிசி - 2 கப்
ரவை - அரை கப்
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் (பெரியது) - 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
ஆற்று இறால் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அரிசியை 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ரவை போல் அரைக்கவும். (முன்பெல்லாம் உரலில் இடிப்பார்கள்). ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த மாவிலிருந்து அரை கப் எடுத்து அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கஞ்சி போல் காய்ச்சி ஆற விடவும். (இதை கப்பி காய்ச்சுவது என்பார்கள்).
கஞ்சி நன்கு ஆறியதும் அதை மீதமுள்ள மாவில் ஊற்றி ரவை, சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர கெட்டியாக பிசைந்து, இரவு முழுவதும் வைத்து புளிக்க விடவும். மறுநாள் புளித்து உப்பி இருக்கும்.
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும் (மேல் தோல் உரிக்க வேண்டாம்). பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உப்பு போட்டு வாசனை வரும் வரை இறாலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
ஒரு ப்ளாஸ்டிக் பை (அ) காட்டன் துணியை வைத்து அதில் சிறு உருண்டை மாவை எடுத்து வட்டமாக தட்டி, அதன் மேல் அரை தேக்கரண்டி அளவு வறுத்த வெங்காயத்தை பரப்பி வைக்கவும்.
அதன் மீது மேலும் மாவை வைத்து வடை போல் தண்ணீரை தொட்டு தட்டவும். தண்ணீர் தொட்டு தட்டினால் ஒட்டாமல் வரும்.
உளுந்து வடை போல் நடுவில் ஓட்டை போட்டு மேலே இறாலை வைத்து பதிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள வாடாவை போட்டு, இருபக்கமும் வேகுமளவு திருப்பிப் போட்டு பொரிக்கவும். பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.
சுவையான நாகூர் வாடா தயார். வறுத்த வெங்காயத்துடன் பரிமாறவும். வாடாவில் இறால் மட்டும் வைத்து வெங்காயம் வைக்காமலும் செய்யலாம். இதில் கடல் இறால் வைத்தும் செய்யலாம். கடல் இறாலை விட ஆற்று இறால் வைத்தால் சுவையும், வாசனையும் நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாடா பார்க்கவே அழகா இருக்கு வாழ்த்துக்கள்.நான் இறால் சாப்பிட்டதும்
இல்லை செய்ததும் இல்லை :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹலி வாடா சூப்பரா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.....

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
வாவ்....வாடா சூப்பர்ர்ர்ர்ர்ர்............
நான் கேட்டதுமே குறிப்பு அனுப்பியதற்க்கு ரொம்ப நன்றி மா....
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செஞ்சு பார்க்க்குறேன்....

ஹலிலா அக்கா டேஸ்டி வாடா சூப்பரான குரிப்பு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இறாலில் மேல் தோல் எடுக்க வேண்டாம்னா?அதன் ஓடோடவா..எப்பவுமே இந்த வாடா மேல் ஒரு கண் இருக்கு செய்தே தீரணும்

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஹலிலா வாடா சூப்பர்மா நாகூர்க்கே வந்து சாப்பிட்டமாதிரியிக்கு நன்றிம்மா வாழ்த்துக்கள்

அஸ்ஸ்லாமு அலைக்கும் ஹலிலா,நான் பிரியானி வாடா தான் செய்வேன்,அவசியம் இதையும் செய்து பார்க்கிரேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

சுவர்ணா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இறால் இல்லாமலும் இதை செய்யலாம் நன்றாக இருக்கும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப சூப்பரா இருக்குங்க... வாடா இதுவரை செய்ததில்லை.. பார்க்க ஸ்டஃப்டு வடை போல இருக்கு. ஆசை செய்ய... ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாதிக்கா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள். நீங்க எந்த ஊருனு தெரிஞ்சுக்கலாமா..

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

தளிகா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா. இறாலின் மேல் தோல் உரிக்கமல் செய்வாதால் வாசனை நன்றாக இருக்கும்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும், ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா. நானும் பிரியாணி வாடா செய்வேன்மா. . . இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள். உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா. சுவையும் அருமையா இருக்கும் அவசியம் செய்து பாருங்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா
அப்படியெ நாகூர் ல வாடா சப்பிடமதிரியெ இருக்கு

நாகூர் ஸ்டைல் வாடாவும் நல்லா இருக்குது. அப்படியே அந்த பிரியாணி வாடாவும் செஞ்சு அனுப்புங்க ஹலி. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹளிலா,

சூப்பர்..அவசியம் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நானும் உங்க ஊர் பக்கம் தான் மா.மயிலாடுதுறை....
அம்மா ஊர் காரைக்கால் பக்கம்....அதனால தான் உங்க ஐட்டம்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும்...
என் மாமி கூட பிரியாணி வாடா செய்வாங்க....பட் எனக்கு நாகூர் வாடா ரொம்ப பிடிக்கும்...எப்போ உங்க ஊருக்கு வந்தாலும் மறக்காம சாப்பிடுவோம்...

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வஅலைக்கும் முஸ்ஸலாம் ரிநோஜ் உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நித்யா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும், ரொம்ப நன்றிமா. இன்ஷா அல்லாஹ் பிரியாணி வாடா செய்முறை விரைவில் உங்களுக்கு படத்துடன் அனுப்புகிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவிதா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. அவசியம் செய்து பாருங்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அருட்செல்வி உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நாகூர் ஸ்டைல் வாடாவும் நல்லா இருக்குது....இது மாதிரி சாப்பிட்டதில்லை..
கண்டிப்பா ட்ரைப் பன்றேன்..வாழ்த்துக்கள்..

ஹசீன்

வாடா ரொம்ப அழகா வந்து இருக்கு.என்னை பொருத்தவரைக்கும் வாடா சுடுவது என்பது ஒரு பெரிய கலைப்பா.சமீபத்தில் எனக்கு ரூபி சொன்ன மாதிரி செய்தேன் நல்லா வந்தது இதையும் செய்து பார்க்க ஆசை வந்து விட்டது இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா செய்திட்டு சொல்கிறேன்...வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

வாடா ரொம்ப அழகா செய்து காட்டி இருகிங்க வாழ்த்துகள் :)..................நாங்களும் கப்பி காய்த்து தான்மா செய்வோம் சோறு மிய்வதே வெச்சு இப்படி ட்ரை பண்னி பார்த்தேன் அதை டேஸ்ட்,ஈசியாகவும் & என் குட்டீஸ் உம் சாப்பிடுவதால் அடிக்கடி வாடா தான் உள்ள வைத்து ஸ்டப் பண்ணியும் செய்வோம்,பிரியாணி வாடவும் செய்வோம் அதுமட்டுமல்ல ஹசீன் ஆப்பமாவில் கூட வாடா சுடுவாள் அதுவும் சேம் டேஸ்ட் தான்மா.....................உங்க கிட்ட பேச ஆசையா இருக்கு ப்ரிய இருக்கும்போது அரட்டைக்கு வாங்க :)

இறால் பார்க்க முந்திரி மாதிரி வடாயில் அழகா இருக்கு ஹலீலா.

ஷமீலா இன்ஷா அல்லாஹ் அடுத்த முரை நீங்க எங்க ஊருக்கு வரும் போது எங்க வீட்டுக்கு அவசியம் வாங்கமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹசீன் உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா இன்ஷா அல்லாஹ் அவசியம் செய்து பாருங்கள். ப்ரிய இருக்கும் போது கரண்ட் இருந்தால் அரட்டை பக்கம் இன்ஷா அல்லாஹ் அவசியம் வரேன் மா…….

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரூபி உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. எனக்கும் உங்கள் எல்லோரிடமும் பேச ஆசை தான் அரட்டை பக்கம் இன்ஷா அல்லாஹ் அவசியம் வரேன் மா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நீகிலா உங்கள் அன்பான பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

செய்முறை பார்க்கும் போதே செய்து சாப்பிடனும்னு ஆசை வந்துட்டு.கட்டாயம் செய்து பார்த்து சொல்றேன்.வாழ்த்துக்கள்.

Kalai

கலா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா. சாப்பிடவும் நல்லா இருக்கும் அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)