தேதி: December 28, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வடகம் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
புளி - எலுமிச்சை அளவு
குழம்புத் தூள் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
நெய் - ஒரு தேக்கரண்டி
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.

புளியை கரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து, அதில் குழம்புத் தூளை கலந்து வைக்கவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

வடகம் பொரிந்ததும் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து, பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் புளி கரைசலை சேர்க்கவும்.

ஓரளவு நுரைத்து குழம்பு சுண்டியதும், நெய் ஊற்றி இறக்கவும்.

சுவையான பூண்டு மிளகு குழம்பு தயார். மல்லித் தழை தூவி பறிமாறவும்.

Comments
ஷமினா அக்கா
ஹய் நான் தான் முதல் ஷமினா அக்கா பூண்டு மிளகு குழம்பு சூப்பரா இருக்கு அக்கா quick செய்முறை தான் அக்கா
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
shamina
அஸ்ஸலாமு அலைக்கும் சமீனா பூண்டு மிளகு குழம்பு சூப்பர் வாழ்த்துக்கள்....
நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும், அவர் குழுவினருக்கும் மிக்க நன்றி.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
கனிமொழி, ஷாதிகா
முதலில் வந்து பதிவிட்டதற்கு ரொம்ப நன்றி கனி.வ அலைக்கும் சலாம் ஷாதிகா. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மா.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
அஸ்ஸலாமு அலைக்கும் சமினா
அஸ்ஸலாமு அலைக்கும் சமினா பூன்டு மிளகு குழம்பு அருமையாயிருக்கு உடம்புக்கும் நல்லது நிச்சயம் செய்துப்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
பூண்டு மிளகு குழம்பு
ஷமீனா, பூண்டு மிளகு குழம்பு ஜலதோஷம், வாயு பிரச்சனையை தீர்க்கும் ஒரு சரியான உணவு. நல்லா செய்து காட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சமீனா
அஸ்ஸலாமு அலைக்கும் சமீனா பூண்டு மிளகு குழம்பு நல்லா செய்துருக்கீங்க.சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நிஷா அம்மா
வ அலைக்கும் சலாம் நிஷா அம்மா. வாழ்த்துக்கு நன்றிமா, செய்துட்டு கண்டிப்பா சொல்லுங்க.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
கல்பனா
கரக்டா சொன்னீங்க கல்ப்ஸ். வாழ்த்துக்கள் பதிவிற்கு நன்றி கல்ப்ஸ்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
முஹ்சினா
வ அலைக்கும் சலாம் முஹ்சினா. ரொம்ப நன்றிமா.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷமீனா
நல்ல குறிப்பு
வாழ்த்துக்கள் ஷமீனா:)
பச்சமிளகு வெச்சு குழம்பு வெக்கலாமாப்பா??
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
matchi
ஹாய் மச்சீ என்ன செய்ரீங்க
ஒரு இல்லத்தை இல்லமாக்க பெண்ணால் மட்டுமே முடியும்
ஷமீனா...
நல்லா காச்சகாரங்க வாய்க்கு ஏற்ற டிஷ்ஷா செய்து காட்டி இருக்கீங்க:)உங்க அண்ணாக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது இதை தான் வச்சி கொடுத்தேன்...அப்போ தான் ஒழுங்கா சாதம் சாப்பிட்டாங்க.நாங்க இதை மிளகு தண்ணின்னு சொல்லுவோம்...குழம்புத்தூள் கொஞ்சம் குறைத்து செய்வோம் பட் இது நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன் சோ இது மாதிரியும் ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன்...வாழ்த்துக்கள்:)
SSaifudeen:)
அருட்செல்வி
வாழ்த்துக்கு நன்றி அருள். தாராளமாக பச்சை மிளகு யூஸ் செய்யலாம். இன்னும் நல்ல மணமா அருமையா இருக்கும்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷமிஹா
ஷமிஹா நாங்க ரசத்தை தான் மிளகு தண்ணீனு சொல்லுவோம். இது காய்ச்சல் வந்தவுகளுக்கு காரம் குறைத்து செய்து கொடுங்கள். வாழ்த்துக்கு நன்றி.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
அஸ்ஸலாமு அலைக்கும்சமீனா
அஸ்ஸலாமு அலைக்கும் சமீனா பூண்டு மிளகு குழம்பு ரொம்ப நல்லா செய்துருக்கீங்க.வாழ்த்துக்கள்
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அஸ்ஸலாமு அலைக்கும்
சமீனா பூண்டு மிளகு குழம்பு ரொம்ப அருமையா இருக்கு................வாழ்த்துகள் :)
ஹலீலா
வ அலைக்கும் சலாம் ஹலீலா. வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ரூபி
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரூபி.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷமீனா
பூண்டு மிளகு குழம்பு நல்லா பார்த்ததும் சாப்பிட தூண்டுறமாதிரி இருக்கு. வாழ்த்துக்கள் ஷமீனா:)
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
ஷமீனா
ஷமீனா ,
வடகம் சேர்த்து வாசமான குழம்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
நித்யா
வாழ்த்துக்கு நன்றி நித்யா.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
கவிதா
வாழ்த்துகளுக்கு நன்றி கவிதா.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷமீனா
அருமையோ அருமை... குழம்பு வாசம் இங்க வந்துட்டுது :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா அக்கா
வாசம் வந்துட்டதா? நான் மூடிதானே வைத்தேன்.
பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா
ஷமீனா புண்டு குழம்பு
ஷமீனா,
புண்டு குழம்பு பார்க்கும்போதே பசி வந்திடுச்சு,
வடகம் போட்டு தாளிச்சு இருக்கறீங்க, வடகம் எப்படி தயாரிக்கறது, வடகம் குறிப்பு தாங்க ஷமீனா,
அன்புடன்,
மணிமேகலை ராம்க்குமார்
என்றும் அன்புடன்,
மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே
ஷமீனா
ஷமீனா இப்போதைய (மழை) க்ளைமேட்டுக்கு ஏற்ற குழம்பு சூப்பர் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஷமீனா
பூண்டு மிளகு குழம்பு ஹெல்தி குறிப்பு, சுலமானதாகவும் இருக்கு... கடைசி படம் சாப்பிட தூண்டுது... வாழ்த்துக்கள்...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
பூண்டு மிளகு குழம்பு
பூண்டு மிளகு குழம்பு சூப்பர்,பூண்டு எவ்வளவு செர்க்க வேண்டும் ?