பிட்டு செய்வது எப்படி ?

வெளிநாடுகளில் கிடைக்கும் அரிசிமாவில் எவ்வாறு பிட்டு செய்வது?

புட்டு மாவில் உப்பு தண்ணீர் தெளித்து கட்டிகள் இல்லாதவாறு மாவோடு சேர்ந்தாற்போல பிசிறி விடவேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் பச்சரிசி மாவு தான் கிடைக்கும். அதில் தண்ணீர் தெளித்து பிசைய பிசைய மாவு உறிஞ்சிக் கொள்ளும். முதலிலேயே மொத்தமாக தண்ணீரை ஊற்றி பிசையாமல் சிறிது சிறிதாக ஊற்றி பிசிறி கொண்டே வரவேண்டும். மாவு ஓரளவு ஈரப்பதத்திற்கு வந்ததும், புட்டு குழாயிலோ, துணியிலோ கட்டி இட்லி பானையில் வைத்து அவிக்கலாம். மாவை ஈரப்பதமில்லாமல் வேக வைத்தால் அது வெந்த பின்பும் மாவு போலவே இருக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

புட்டு மாவை நன்றாக வறுத்துக் கொள்ளவும்,அத்துடன் உப்பு கலந்து தண்ணீர் விட்டு பிசிறி மிக்ஸியில் விப்பரில் போட்டு ஒரு சுற்று விட்டு எடுத்துக் கொள்ளவும்,அத்துடன் தேங்காய்ப்பூ சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.இம் முறையில் பச்சரிசி,சிவப்பரிசி,கோதுமை மற்றும் கேப்பை மாவுகளில் புட்டு செய்யலாம்.

(சில பிராண்ட் புட்டு மாவு வறுக்கப் பட்டது என்று பாக்கெட்டுகளில் எழுதியிருக்கும்,இருந்தாலும் நாம் வறுத்து சமைத்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்)

சீனி மற்றும் வாழைப்பழத்துடன் உண்ணலாம்

அல்லது

வேக வைத்த பாசி பருப்பு மற்றும் பொரித்த அப்பளம் சேர்த்தும் உண்ணலாம்.

உங்கள் பதில்களிற்கு நன்றி முயற்சி செய்துவிட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்

பிட்டில் தேங்காய் பூ இடுவது ஏன்?

தேங்காய்ப் பூ இடுவதனால்தான் 'பிட்டு' என்கிற பெயரே வந்திருக்க வேண்டும் இல்யாஸ். அல்லாவிட்டால்... 'உதிர்' என்று அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். :-)

முன்பெல்லாம் மூங்கில் குழாயில்தான் பிட்டு அவிப்பார்கள். ஒரு கணக்கு வைத்து அத்தனை பிடி (கை & குழாய் மொத்தத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு பிடி) மா போட்டதன் பிறகு சிறிது தேங்காய்ப்பூ இடுவார்கள். இடாவிட்டால் பிட்டுப் பிட்டு வைக்க இயலாமல் நீளமாக ஒரு முழுக் குழாயாக வரும்.

தேங்காய்ப் பூ இட்டால், பரிமாறச் சுலபம்; சாப்பிடும் அளவைக் கணக்கு வைப்பதும் சுலபம். தேங்காய்ப் பூ போடாவிட்டால் பிட்டு பிரித்து எடுக்கும் போது உதிர்ந்து போகும்.

தேங்காய்ப் பூ இடுவது வாசனை மற்றும் சுவைக்காகத்தான் என்றாலும், பெயர்க் காரணம் இதுவாகத் தான் இருக்க முடியும்.

பிட்டுக்கு மண் சுமந்த கதையில்... மூதாட்டி உதிர்ந்த பிட்டை ஊதியமாகக் கொடுத்ததாக வரும். தமிழர் பாரம்பரிய உணவுகள் இடையே பிட்டுக்கு முக்கியமான இடம் இருந்திருக்கிறது என்பதையும் அது உதிர்ந்ததாக இல்லாமலிருந்தால்தான் சிறப்பு என்பதையும் சுட்டிக் காட்ட மட்டுமே இந்தக் கதையை உதாரணமாகக் குறிப்பிடுகிறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்