ஆரஞ்சு கேக்

தேதி: January 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

மைதா - ஒன்றரை கப்
ஆரஞ்சு பழம் (பெரியது) - ஒன்று
சர்க்கரை - முக்கால் கப்
முட்டை - 2
எண்ணெய் + வெண்ணெய் - கால் கப்
பேக்கிங் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி
பால் - அரை கப்


 

மைதாவுடன், பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும். பேக் செய்ய போகும் பேனில் / லோப் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி மாவு தூவி வைக்கவும்.
ஆரஞ்சு பழத்தை 4 துண்டுகளாக வெட்டி தோலோடு மிக்ஸியில் அரைக்கவும்.. அதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும். (பெரியதாக தோல் ஏதும் இல்லாமல் பார்த்து அரைக்கவும்).
முட்டையை நன்றாக கலந்து அடிக்கவும்.
அரைத்த ஆரஞ்சு கலவையில் மீதமுள்ள சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எண்ணெயை கலந்து கொள்ளவும்.
பிறகு முட்டை கலந்து, பால் சேர்த்து கலக்கவும்.
இதனை மாவுக் கலவையில் சேர்த்து கலக்கவும். அதிகம் கலக்க வேண்டாம். விரும்பினால் சிறிது பட்டை தூள் சேர்க்கலாம். உடனே பேக்கிங் பேனில் ஊற்றவும்.
180 C’ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். 15 - 25 நிமிடத்தில் கேக் தயார். உள்ளே விட்ட கத்தி சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும். சுவையான ஸாஃப்ட் ஸ்பாஞ்சி ஆரஞ்சு கேக் தயார்.

இதே கேக்கை ஆரஞ்சு ஜூஸ் விட்டு மாவை கலந்து ஆரஞ்சு தோலை சீவி போட்டும் செய்யலாம். ஆனால் மேல் சொன்ன முறையில் செய்யும் போது ஆரஞ்சு ஃப்ளேவர் தூக்கலாக அருமையாக இருக்கும். ஆரஞ்சு சாறு குறைவான வகையாக இருந்தால் இன்னும் சிறிது பால் அல்லது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மாவின் பதத்தை சரி செய்யலாம்.

ஆரஞ்சு க்ளேஸ் செய்ய : ஆரஞ்சு சாறு அரை கப்புடன் அரை கப் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். பாதியாக அளவு குறைந்து வரும் போது சூடான கேக்கின் மேல் பரவலாக ஊற்றவோ அல்லது ப்ரெஷ் கொண்டு தேய்த்தோ விடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அக்கா நான் தான் பர்ஸ்டே ஜாலியே ஆரஞ்ச் கேக் பாக்கும் போதே தெரிது ரொம்ப சாப்டா இருக்கும் நு தெரிது அக்கா யம்மி டிஷ் அக்கா வரேன் சீக்ரமா பாஸ்போர்ட் வாங்க்கிட்டு இதல்லாம் செஞ்சு கொடுக்க சொல்லி உங்கள டார்சர் பன்ன சூப்பர் டிஷ் அக்கா :-) :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி ஆரஞ்சு கேக் ரொம்ப அருமையா இருக்கு :) பஞ்சு போல மென்மையா இருக்கு பார்க்கவே வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

orange cake supera irukuu vani.. fotos ellam super, athuleum antha kadaisi padam aha, superb.. congrats...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆரஞ்சு கேக் மிக அருமை வாழ்த்துக்கள் வனி, 600வது குறிப்பு இனிப்பா ஆரஞ்சு மணத்தோட கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் வனி:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆரஞ்சு தோலை துருவி போட்டு தான் நான் செய்வேன் இது மதிரியும் செய்து பார்க்கிறேன்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாவ்... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் குறிப்பு.படங்கள் பளிச்... பளிச் ...
கடைசி படத்தில் heart shape-ல் ஆரஞ்சு கட் பண்ணி வைத்திருப்பது அழகா இருக்கு.
வாழ்த்துக்கள்!

வனி
கமகம வாசத்துடன் ஆரஞ்ச் கேக், பார்க்கவும் நச்சுனு இருக்கு.
வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா அக்கா ஆரஞ்சு கேக் நல்லா ஸ்பாஞ்சியா இருக்கு. வாசனையும் நல்லா இருக்குமே.சீக்கிரமே செய்துடறேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

வனிதா ஆரஞ்சு கேக் அருமையாக இருக்கு.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனி,

ஆரஞ்சு கேக் பார்க்கவே சும்மா 'லவ்லி'யா இருக்கு!! உங்க குறிப்ப அன்னைக்கு ஒரு நாள் பார்த்ததுமே முடிவு பண்ணியாச்சு, வீட்டில இருக்கிற ஒரு பெரிய ஆரஞ்சு, கேக் ஆக ரெடி ஆகிடிச்சின்னு! ;‍) .. ஹிஹி... நேத்து ஈவினிங் ட்ரை பண்ணிட்டேன் வனி! சுவை சூப்பரா இருந்தது (உங்க மெயிலைப் பாருங்க! ;-)) வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

வனி
ஆரஞ்சு கேக் செய்து பார்த்தாச்சு..
வாசம் அருமை.. கமகமனு வீட்டையே சுத்தி வந்தது.
ரொம்ப சாஃப்ட்... படம் எடுக்கும் முன்பே எல்லாம் படபடனு காலி... :(
நன்றி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி, ஆரஞ்ச் கேக் வாசனை காங்கோ வரை வீசுது. கலர் சூப்பரா இருக்கு வனி. குறைந்த பொருட்களில் வாசமான, டேஸ்டி கேக். ஒரு குட்டி டவுட்.. ஆரஞ்சு தோல் சேர்த்து அரைப்பதால் கசக்காதா? 600வது குறிப்பை ரம்மியமான ஆரஞ்சு வாசனையோட முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் வனி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

கனி... மிக்க நன்றி :) அவசியம் செய்து தரேன்.

சுவா... மிக்க நன்றி :)

சுமி... மிக்க நன்றி :)

அருள்... மிக்க நன்றி :)

முசி... மிக்க நன்றி :)

விப்ஜி... மிக்க நன்றி :) அது வெறும் ஸ்லைஸ் தான்... ஹார்ட் ஷேப் இல்லை.

ரம்யா... மிக்க நன்றி :) அதுக்குள்ள செய்துட்டீங்களா நீங்களும்... எனக்கும் இதன் வாசம் ரொம்ப பிடிக்கும் ரம்யா.

கலா... மிக்க நன்றி :)

ஹலீலா... மிக்க நன்றி :)

சுஸ்ரீ.... அப்பாடா உங்க ஃபோட்டோவ பார்த்து நான் பறக்கறேன்... என்னை கையிலயே பிடிக்க முடியாது. அத்தனை அழகா ஸ்லைஸ் பண்ணி சூப்பரா பண்ணிருக்கீங்க. ஐ லைக் இட். ரொம்ப ரொம்ப நன்றி சுஸ்ரீ :)

கல்பு... உங்களை மாதிரி டவுட்டு கேட்க உங்களால் மட்டுமே முடியும் ;) கசக்காது கல்பு... நாம அதிகமா சேர்க்கலயே, இவ்வளவு மாவுக்கு இவ்வளவு ஆரஞ்சு கசப்பு தட்டாது. அதிகமான கசக்கலாம். தைரியமா ட்ரை பண்ணுங்க :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi Vanitha,
I made the cake with the steps you mentioned.My family members liked it very much. This was the first time I am making the cake and it came out well. Thanks for your recipe.

Thanks,
Jeyalakshmi Balakrishnan

செய்துட்டீங்களா? எல்லாருக்கும் பிடிச்சது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஜெயலக்‌ஷ்மி. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ தங்கச்சி,
இன்று ஆரஞ்சு கேக் செய்தேன்... மிகவும் நன்றாக இருந்தது... நன்றி...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி :) ஃபோட்டோவும் அழகா போட்டிருந்தீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆரஞ்சு கேக் செய்தாச்சு.ரொம்ப நல்லா இருந்துச்சு.நன்றி வனிக்கா :)

Kalai

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி கலை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா